Header Ads



விரட்டப்படுகிறார் விஜயகலா - ஜனாதிபதியிடம் பிரதமர் கோரிக்கை

ராஜாங்க அமைச்சுப் பதவியிலிருந்து விஜயகலா மகேஸ்வரனை இடைநிறுத்துமாறு, ஜனாதிபதியிடம் பிரதமர் ரணில் விக்ரமசிங்க கோரிக்கை விடுத்துள்ளார்.

தமிழீழ விடுதலைப் புலிகள் மீளவும் உருவாக வேண்டும் என்றும், அவர்களின் கைகள் – வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் ஓங்க வேண்டுமென்றும், ராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் நேற்று திங்கட்கிழமை யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றும் போது கூறியிருந்தார்.

இதனையடுத்து விஜயகலாவிடம் விசாரணைகள் நடத்தப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இந்த விசாரணைகள் நிறைவடையும் வரையில், அவரை அமைச்சுப் பதவியிலிருந்து இடைநிறுத்துமாறு ஜனாதிபதியிடம் பிரதமர் கோரிக்கை விடுத்துள்ளார்.

ராஜாங்க அமைச்சர் விஜயகலாவின் இந்த உரை குறித்து, இன்று செவ்வாய்கிழமை நாடாளுமன்றில் அரசாங்க மற்றும் எதிர் தரப்பு உறுப்பினர்கள் கடுமையான கண்டனங்களைத் தெரிவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கதாகும்.

1 comment:

  1. விஜயகலா ஒரு அரசியல்வாதி என்பதை விடுத்து ஒரு சாதாரண மனிதன் என்ற வகையில் கருத்துக் கூறியுள்ளார்.பிரபாகரன் எங்களை நாங்கள் பிறந்த இடத்தை விட்டு துரத்தும்போது நாங்கள் பட்ட கஷ்டங்களும் துன்பங்களும் எங்களைத் தவிர யாராலும் அதை உணரமுடியாது.இருந்தாலும்,இப்பொழுது இருக்கும் அரசியல் நிவரத்தை பார்க்கும்போது விஜயகலா கூறுவது சரியோ எனத்தோன்றுகிறது.ஏனென்றால் இப்பொழுது நாட்டின் சகல பகுதிகளிலும் முஸ்லிம்களுக்கு நடக்கும் பிரச்சினைகள் அதற்கு ஒரு சான்று. முஸ்லிம்கள் தாக்கப்படும்போதெல்லாம் ltte இருந்திருக்கலாமோ என்றுகூட தோன்றியது எனக்குத்தேரியும் இது ஒரு விபரீத எண்ணமென்று ,இருந்தாலும் எனது இனம் பாதிக்கப்படும்போது இப்படி எனக்குதித்தோன்றியது.அப்படியிருக்கையில் ஒரு சாதாரன பெண்ணாக விஜயகாலவின் கூற்றில் எந்த தவறும் இல்லை என்பதே எனது கருத்து.எனது இந்தக்கருத்து மேலிடத்துக்கு கூஜா தூக்கும் அரசியல்வாதிகளுக்கும் இந்த அரசியல்வாதிகளுக்கு ஜால்ராபோடும் அல்லக்கைகளுக்கும் கோபத்தை ஏட்படுத்தும் என்பது எனக்குத்தேரியும்.மன்னித்துக்கொள்ளுங்கள்! இப்படி ஒரு கருத்தைப் பதிவு செய்யவேண்டியது காலத்தின்கட்டயம் ........? உடனே எழுதுவார்கள் விஜயால ஒரு சாதாரண பெண்ணல்ல அவர் ஒரு m p அமைச்சர் அது இது என்று. பிழை பிடிக்க வென்றும் என்றால் யாரை வேண்டுமென்றாலும் பிழைபிடிக்கமுடியும் யார்தான் தவறு செய்யவில்லை ?????????????.

    ReplyDelete

Powered by Blogger.