Header Ads



சிவப்பு யானைகள், வெட்கப்பட வேண்டும் - விமல்

அமெரிக்காவுக்கு தேவையான ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்த துணைபோன சிவப்பு யானைகள் இன்று சுய கொள்கை பற்றி பேசுவது வெட்க்கப்பட வேண்டியதாகும் என பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச தெரிவித்தார்.

சீன நிறுவனமொன்று முன்னாள் ஜனாதிபதி மஹிந்த  ராஜபக்‌ஷவுக்கு ஜனாதிபதி தேர்தல் காலத்தில் 7.6 மில்லியன் டொலர் நிதியை வழங்கியுள்ளதாக தகவல் வெளியிட்டு நியூயோர்க டைம்ஸ் பத்திரிகையில் வெளியாகியுள்ள செய்தி தொடர்பாக இன்று பாராளுமன்றத்தில் ஐக்கிய தேசிய கட்சியினரால் கொண்டு வரப்பட்ட சபை ஒத்தி வைப்பு வேளை பிரேரணை மீதான விவாதத்தில் கலந்துக்கொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்,

கடந்த அரசாங்கம் மீது மூன்று ஆண்டுகளாக இந்த அரசாங்கம் ஒரே குற்றச்சாட்டினை முன்வைத்து வருகின்றனர். இந்த நகர்வுகளில் சிவப்பு யானைக்குட்டிகளும் உள்ளது.

அத்துடன் இலங்கையில் ஏற்பட்ட ஆட்சி மாற்றத்துக்கு சர்வதேச தலையீடுகள் இருந்துள்ளது. இந்த ஆட்சி மாற்றத்தில் நேரடியாக சர்வதேச தலையீடுகளும் பல கோடிக் கணக்கான நிதியும் கொட்டப்பட்டுள்ளது. இவை குறித்து ஏன் அரசாங்கம் வாய் திறக்காது உள்ளது. 

ஜனாதிபதியின் புதல்வர் மீது ஊழல் குற்றச்சாட்டு உள்ளது. பிரதமரது பொருளாதார நகர்வுகளில் ஊழல் உள்ளது. முதலில் அங்கிருந்து விசாரணைகளை ஆரம்பிக்க வேண்டும். அதை விடுத்து பழைய கதைகளை கூறிக்கொண்டு மக்களை ஏமாற்றி வருகின்றேர்கள். 

அமெரிக்காவுக்கு தேவையான ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்த துணைபோன சிவப்பு யானைகள் இன்று சுய கொள்கை பற்றி பேசுவது வெட்க்கப்பட வேண்டியதாகும். நாம் முன்னெடுத்த வேலைத்திட்டங்களை  முழுமையாக மாற்றி நாட்டின் பாரிய வேலைத்திட்டங்கள் அனைத்தினையும் சர்வதேசத்துக்கு விற்கும் நடவடிக்கைகளை அரசாங்கம் முன்னெடுக்க தயாராகியுள்ளது. மூன்று ஆண்டுகாலமாக அரசாங்கத்தின் நகர்வுக்கு அச்சம் கொள்ளாத நாம் இன்னும் குறுகிய கால ஆட்சியில் துள்ளும் துள்ளல்களுக்கு அஞ்சப்போவதில்லை. 

நல்லாட்சி, தூய்மையான ஆட்சியாளர்கள் என்றால் மத்திய வங்கி ஊழலுடன் தொடர்புபட்ட அனைத்து குற்றவாளிகளையும் உடனடியாக வெளிபடுத்த வேண்டும். ஒரு இருவரை மட்டுமே பலிகொடுத்துவிட்டு தப்பிக்கொள்ள முயற்சிக்க வேண்டாம். உண்மையான குற்றவாளிகளை வெளிபடுத்துங்கள். சிவப்பு யானைக்குட்டிகள் சாகும் வரையில் உண்ணாவிரதம் இருந்து உண்மைகளை வெளிபடுத்த வேண்டும். ஆனால் இவர்கள் அனைவரும் ஒரு அணியாக இருந்து ஊழல் அனைத்தையும் மறைத்து வருகின்றனர். 

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, ஜே.வி.பிக்கும் பதவிகள் வழங்கப்பட்டுள்ளது. இவ்வாறு பதவிகளை தக்கவைத்துக்கொண்டு இந்த மூன்று ஆண்டுகளில் எம்மை தாக்கும் நடவடிக்கைகளை மட்டுமே முன்னெடுத்து வருகின்றனர் என்றார்.

No comments

Powered by Blogger.