July 01, 2018

முஸ்லிம்களிடம் பெருகும் மூடநம்பிக்கை - ஏனையவர்களுக்கும் அச்றுத்தலாகுவதாக குற்றச்சாட்டு

மட்டக்களப்பு ஏறாவூர் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் சுமார் 40 குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் தடுப்பூசிகளை ஏற்றிக் கொள்ள எதிர்ப்புத் தெரிவித்து வருவதாக சுகாதார வைத்திய அதிகாரி எம்.எச்.எம். தாரிக் தெரிவித்தார்.

ஏறாவூரில் புதிதாக உருவெடுத்துள்ள சுகாதார சேவைகளுக்கு இடையூறான மறுப்பு நடவடிக்கைகள் குறித்து இன்று கருத்து வெளியிடும் போதே மேலும் தெரிவித்த அவர்,

2009ஆம் ஆண்டு காலப்பகுதியில் ஒரு குடும்பத்தைச் சேர்ந்த ஒரு நபர் மாத்திரமே இவ்வாறு தடுப்பூசி ஏற்றுவதற்கும், சுகாதார சேவைகளை அணுகுவதற்கும் மறுப்புத் தெரிவித்து வந்திருந்தார்.

ஆனால், நாளடைவில் இந்தவித மூட நம்பிக்கைகள் வியாபித்து இப்பொழுது 40 குடும்பங்களைச் சேர்ந்த பெரும் தொகையான நபர்கள் முக்கியமான தடுப்பூசிகளை ஏற்றிக் கொள்வதற்கும், பாதுகாப்பான மகப்பேற்றைச் செய்து கொள்வதற்கும், இன்னபிற சுகாதார சேவைகளை அணுகுவதற்கும் எதிர்ப்புத் தெரிவித்து வருவதோடு சுகாதார வசதிகளை அணுகும் ஏனையவர்களுக்கும் அச்சுறுத்தலாக இருந்து வருகின்றனர்.

முறைப்படியான சுகாதார சேவைகளை அணுகாமல் 2016ஆம் ஆண்டு ஒரு மகப்பேறும்இதுவரை 7 மகப்பேறுகளும் சம்பவித்திருக்கின்றன.

இவர்கள் தமது காலடியில் வசதி கொண்ட வைத்தியசாலைகள் இருக்கும் பொழுது சுமார் 4 மணித்தியால தூரப் பயணமுள்ள பொத்துவில் எனும் தொலைதூரக் கிராமத்திற்குச் சென்று பாரம்பரிய மகப்பேற்று உதவியைப் பெற்றுள்ளதோடு தாய் சேய் பாதுகாப்பு தடுப்பூசி எதனையும் பெற்றுக் கொள்ளவில்லை என்பதும் கண்டறியப்பட்டிருக்கின்றது.

தாய் சேய் இறப்பு மற்றும் அவர்களது சுகாதார நலன்களைக் கருத்திற்கொண்டு வீட்டுப் பிரசவங்கள் இடம்பெறக் கூடாது என்பதே சுகாதாரத் துறையின் கொள்கையாகும்.

இதனைச் சமூக மட்டத்தலைவர்கள் கருத்திற் கொண்டு உடனடியாகக் கருமமாற்ற வேண்டும்.

இல்லையேல் பிரதேசத்தின் சுகாதார நலன்கள், ஆரோக்கியம் உள்ளிட்ட விடயங்கள் எதிர்வரும் காலங்களில் பெரும் சவாலைச் சந்திக்கும்.

நாட்டில் தாய் சேய் மரணங்கள், தொற்று நோய்கள் இடம்பெறாதவாறும் இன்னபிற சுகாதார நலன்களை மேம்படுத்தி சுகவாழ்வையும் ஆரோக்கிய சமூகத்தையும் உருவாக்குவதற்காகவும் அரசாங்கம் பல கோடிக்கான ரூபாய்களைச் செலவிடுகிறது.

அவ்வாறான முன்னெடுப்புக்கள் நடைபெறுகின்றபோது இத்தகைய மூடத்தனமான கொள்கைகள் சமூகங்களில் ஊடுருவது நாட்டு நலனுக்குக் கேடானது என்றும் அவர் தெரிவித்தார்.

இத்தகைய மூட நம்பிக்கைகள் அக்குறணை, மாத்தளை, நாவலப்பிட்டி, புத்தளம், தோப்பூர் போன்ற இடங்களில் முளைவிட்டிருந்து இப்பொழுது நாட்டின் ஏனைய பகுதிகளுக்கும் பரவி வருவதாகவும் அவர் கூறினார்.

6 கருத்துரைகள்:

Do not blame the people immediately...

Find the root cause of their selection...

May be they are afraid of forceful family planning or any other planned vaccination by Racists at present situation in this country.

So it is upon Muslim Doctors to ensure their safety and to educate them ...

நமக்கு மூன் சென்ற சமூஹம் எந்த தடுப்பூசிகள் போட்டு பிள்ளை பெற்றார்கள் .யகூதிகளுக்கு துணை போகும் ஒரு அங்கம்தான் இந்த தடுப்பூசி .

Should I Laugh or Cry for this post???

Dear Editor,

If you don't have any idea about the medical mafia just don't condemn someone's practice where they already found the results in it. Mentioning "Mooda Nambikkai" is a very hard word for this matter.
Do you have any idea how many Doctors Secretly aren't taking the vaccination for their kids??? Have you ever thought about that as why they arn't doing that to their own kids while they are the one who promoting these things & injecting the vaccines for other's kids???

People used to respect the Doctors, mostly they do whatever the doctors said to do as treatment, have you ever used your own sense of understanding an illness? of course No, but if you did so, you won't post such thing as "Mooda Nambikkai"

Medical World is a Multi Trillion dollar Business (Try to understand the point here, even the Goverment is giving for free to the public, it's paid by the Government to the company who supplied it, so end of the day it's not free, that's the point), so if these kind of groups refrain from taking these so called medicines I mean slow poison, they'll be called "Mooda Nambikkai"

Lemme tell you a very simple thing, just compare 2 kids, one kid who took all the vaccines & living as per the Medical world is promoting, another kid who didn't take any vaccines & other medicines at all. You'll understand what is health if you are wise enough ^_^


Regards,

Misrin, waseem;
நமக்கு முன் சென்ற சமூகங்களின் நோய்த்தாக்கம் பற்றிய புள்ளிவிவரத்தை தரமுடியுமா? அதே போன்று இப்போதுள்ளதும்.

யூதர்கள் மட்டும்தான் தடுப்பூசியை கண்டுபிடித்தார்கள் என்பதட்கு ஆதாரம் உண்டா? அப்படியென்றால் இஸ்ரேலில் தடுப்பூசி ஏற்றுவதில்லையா?

waseem,
நீங்கள் ஒப்பிட்ட இரண்டு குழந்தைகளுக்கும் நோய் ஏட்பட்டால்(கீழே குறிப்பிட்டவற்றில் எதாவது ஒன்று), எது பிழைக்கும் என்று உங்களது அறிவு கூறுகின்றது. for eg: polio, Measles-Mumps-Rubella, Diphtheria-Tetanus or Human Papilloma Virus.

மரணத்தை தவிர மற்ற அனைத்திட்கும் மருந்துண்டு.

இறைவன் எமக்களித்த அருள்களில் ஒன்று அறிவுசார்ந்த தற்போதைய நவீன மருத்துவமாகும்

அம் மருத்துவமானது யூதர்களுடையது என சில முட்டாள்களின் வதந்திகளை நம்பி முட்டாள்தமான வைத்தியங்களை செய்து தாய்க்கும் சிசுக்கும் மரணத்தையும் நோய்களையும் ஏற்படுத்த வேண்டாம்

பூமியில் அல்லாஹ் அனைத்து நோய்களுக்கும் மருந்தை இறக்காமல் நோயை எமக்கு இறக்குவதில்லை

இதை மூடத்தன பழமை பேசும் முட்டாள்கள் அல் குர் ஆனை படித்து அறிந்து கொள்ளட்டும்

Post a Comment