Header Ads



போதைப் பொருள் வியாபாரத்தில் ஈடுபடும், இருவரை தூக்கிலிடமுடியாத பரிதாபம்

சிறைச்சாலைக்குள் இருந்து கொண்டே, போதைப்பொருள் வணிகத்தில் சிலர் ஈடுபடுவது கண்டறியப்பட்டதை அடுத்து, போதைப்பொருள் குற்றங்களுக்காக மரண தண்டனை வழங்கப்பட்டவர்களுக்கு தண்டனையை நிறைவேற்ற சிறிலங்கா அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருகிறது.

இதன் ஒரு கட்டமாக, போதைப் பொருள் குற்றங்களுக்காக மரண தண்டனை விதிக்கப்பட்ட 18 பேரின் விபரங்கள், கடந்த வெள்ளிக்கிழமை சிறைச்சாலை திணைக்களத்தினால் நீதியமைச்சுக்கு அனுப்பப்பட்டுள்ளது.

இவர்களை தூக்கிலிடுவதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகின்ற போதிலும், இவர்களில் பலர் தமது தீர்ப்புக்கு எதிராக மேன்முறையீடு செய்துள்ளதால், தண்டனையை நிறைவேற்ற முடியாத நிலை இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

வேலெ சுதா எனப்படும், விதான பத்தரனகு சமந்த குமார, மற்றும் சூசை எனப்படும், தர்மராஜா சுதேஸ் ஆகியோரே சிறைக்குள் இருந்து போதைப் பொருள் வணிகத்தில் ஈடுபடுவதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

எனினும், இவர்கள் இருவருமே மரண தண்டனைக்கு எதிராக மேன்முறையீடு செய்துள்ளனர். இதனால் இவர்களை உடனடியாக தூக்கிலிட முடியாது.

இதனிடையே மரண தண்டனை விதிக்கப்பட்ட 1240 பேர் சிறிலங்காவின் பல்வேறு  சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 874 பேர் தமது தண்டனைக்கு எதிராக மேல்முறையீடு செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

1 comment:

  1. how many time they are allowed to do so ... after confirming there crime with evidence.?

    ReplyDelete

Powered by Blogger.