Header Ads



பிரான்ஸ் வெற்றியைக் கொண்டாடும் அகதிகள்


பாரீஸின் ஒவ்வொரு மூலை முடுக்கும் உலகக் கோப்பை கால் பந்து போட்டியைக் கொண்டாடும் நிலையில் அகதிகளாக வந்தவர்களும் பிரான்சை தங்கள் நாடாகக் கருதி மகிழ்ச்சியில் திளைக்கும் காட்சிகள் ஏராளம் அரங்கேறின.

வட கிழக்கு பாரீஸில் அமைந்துள்ள Salvation Army காப்பகம் ஒன்றில் கூடியிருக்கும் ஏராளமான அகதிகள் தொலைக்காட்சி முன்பு இறுதிப் போட்டியைக் காண கூடியிருக்கிறார்கள்.

ஒரு கூட்டம் ஆப்கன் அகதிகள் ஏலக்காய் டீயுடன் பழங்களையும் நட்ஸ்களையும் கடை விரிக்கிறார்கள்.

மாலை மணி 4.00, போட்டி இன்னும் தொடங்கவில்லை, ஆனால் அதற்கு முன்பே Ali (22) ஒரு கையில் ஒரு பிரான்ஸ் கொடியும் இன்னொரு கையில் கொடிக்கு மேட்சாக ஒரு பேண்டும் அணிந்து விளையாட்டைக் காணத் தயாராகிறார்.

பிரான்சில் நீங்கள் கனவு காணலாம், நீங்கள் ஒரு சிறந்த விளையாட்டு வீரராக இருந்தால் நீங்கள் அணியில் இணைந்து விளையாடலாம், இது எல்லா நாடுகளிலும் சாத்தியமில்லை என்கிறார் அவர்.

அவர் பிரான்ஸ் அணியில் விளையாடும் 17 அகதிகளின் மகன்களைக் குறிப்பிடுகிறார். தொலைக்காட்சி முன் கூடியிருக்கும் சூடான் மற்றும் எரித்ரிய அகதிகள் ஒவ்வொரு உதையையும் ரசித்து விமர்சிக்கிறார்கள். விளையாட்டு சூடு பிடிக்க அறையில் சத்தமும் அதிகரிக்கிறது.

Pogba and Mbappé இருவரும் quick succession முறையில் போட்ட கோலுக்கு அறையே அதிர்கிறது.

அறையின் இன்னொரு பகுதியில் கூடியிருக்கும் பெண்கள் தேங்க் யூ Pogba, தேங்க் யூ Mbappé என்று கூச்சலிடுகிறார்கள். Bakayoko (29) போட்ட சத்தத்தில் அவருக்கு மூச்சு விடுவதற்கு அவரது இன்ஹேலர் தேவைப்படுகிறது. “யாரிடமும் கொடி இல்லையா, எனக்கு ஒரு பிரான்ஸ் கொடி வேண்டும்” என்று கத்துகிறார் அவர்.

Mbappéயும் Umtitiயும் என் பிள்ளைகள் என்கிறார் Florence, அவர் கேமரூனைச் சேர்ந்தவர், அவர்கள் இருவரும் கேமரூனைச் சேர்ந்தவர்கள் என்பதை அனைவருக்கும் நினைவுபடுத்துகிறார் அவர்.

கொஞ்ச நேரத்தில் அவரவர் அறைகளுக்கு ஓடும் அனைவரும் திரும்பி வரும்போது, அவர்கள் உடைகளிலும் கைகளிலும் முகத்திலும் பிரான்ஸ் கொடிகள்.

பிரான்ஸ் நாட்டவருடன் வெற்றிக் கொண்டாட்டங்களில் இணைந்து கொள்ள ஓடும் அவர்கள், பிரான்ஸ் அணியில் விளையாடும் வெவ்வேறு நாட்டைச் சேர்ந்த அகதிகளின் பிள்ளைகளுடன் தங்களையும் தங்கள் பிள்ளைகளையும் பொருத்திப் பார்த்துக் கொள்கிறார்கள்.

1 comment:

Powered by Blogger.