Header Ads



விஜயகலா மீது, நடவடிக்கை எடுக்கப்படும் - ரணில் உத்தரவில், சபாநாயகர் அதிரடி

நாட்டினுள் தடை செய்யப்பட்ட இயக்கமான விடுதலைப் புலிகள் தொடர்பாக சர்ச்சைக்குரிய கருத்தை வெளியிட்ட சிறுவர் மற்றும் மகளிர் விவகார இராஜங்க அமைச்சர் விஜயகலா மீது பிரதமரின் அறிவுறுத்தலுக்கமைய ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படும் என பாராளுமன்றில் சபாநாயர் கரு ஜயசூரிய தெரிவித்துள்ளார்.

இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஷ்வரன் நேற்று யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் வடகிழக்கு மாகாணங்களில் தமிழீழ விடுதலை புலிகளின் கைகள் ஓங்கினால்தான் தமிழ் மக்கள் நிம்மதியாகவும் சுதந்திரமாகவும் வழ முடியும் என்று தெரிவித்திருந்தார்.

இந் நிலையில் இன்று பாராளுமன்றம் கூடிய போது விஜயகலா மகேஷ்வரன் தெரிவித்த சர்ச்சைக்குரிய கருத்தினால் பாராளுமன்றில் பெரும் வாதப்பிரதிவாதங்கள் ஏற்பட்டதோடு அவரை அமைச்சுப் பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்ற கோரிக்கையும் சபாநாயகரிடம் விடுக்கப்பட்டது.

இதன் காரணமாக தொடர்ந்து பாராளுமன்ற அமர்வுகளை நடத்திச் செல்வதற்கு தடை ஏற்பட்டதால் பாராளுமன்ற அமர்வை நாளை காலை வரையில் ஒத்திவைப்பதாக சபாநாயகர் அறிவித்தமை குறிப்பிடத்தக்கது.

2

தமிழீழ விடுதலைப் புலிகள் மீண்டும்  உருவாக்கப்பட வேண்டும் என சிறுவர் மற்றும் மகளிர் விவகார இராஜாங்க அமைச்சர் வெளியிட்ட கருத்து தொடர்பில் விசாரணை செய்யுமாறு பிரதமர் சபாநாயகருக்கு அறிவுறுத்தியுள்ளார்.

நாட்டின் ஆட்சி அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் இராஜாங்க அமைச்சர் ஒருவர் நாட்டில் தடை செய்யப்பட்ட இயக்கம் ஒன்று மீள உருவாக்கப்பட வேண்டும் என கருத்து வெளியிட முடியாது எனவும் இது தொடர்பில் சட்ட நடவடிக்கை எடுக்குமாறு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தனக்கு அறிவுறுத்தியதாக சபாநாயகர் கரு ஜயசூரிய ஊடகங்களுக்கு  தெரிவித்துள்ளார்.

No comments

Powered by Blogger.