Header Ads



மகிந்தவுக்கு ஏற்பட்டுள்ள, இனவாத சந்தேகம்

அரசியல் யாப்பில் கூறப்பட்டுள்ள பௌத்த மதத்துக்கான முன்னுரிமை தற்போது நடைமுறையில் இருக்கின்றதா? என்ற சந்தேகம் எழுகின்றதென முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்தார்.

பிலியந்தல பிரதேசத்தில் இன்று மாலை இடம்பெற்ற சமய நிகழ்வொன்றில் கலந்து கொண்டு கருத்துரைக்கும் பொழுதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அங்கு பேசிய அவர்,

பௌத்த சமய பாடசாலையொன்றை ஆரம்பிப்பதாயின் அல்லது விகாரை ஒன்றைக் கட்டுவதாயின் பிரதேச சபையிலுள்ள சர்வமத தலைவர்கள் குழுவில் அனுமதி பெற வேண்டிய துர்ப்பாக்கிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம்.

அந்த குழுவிலுள்ள ஒரு சமயத்தைச் சேர்ந்தவர் பௌத்த சமய பாடசாலை அமைக்க விரும்பாவிடினும் அதனை அமைக்க முடியாத ஒரு நிலைமை ஏற்படுகின்றது.

இந்நிலையில் அரசாங்கத்தினுடைய தற்போதைய நடவடிக்கைகளைப் பார்க்கும் போது அரசியல் யாப்பில் கூறப்பட்டுள்ள பௌத்த மதத்துக்கான முன்னுரிமை நடைமுறையில் இருக்கின்றதா? என்ற சந்தேகம் எழுகின்றதென்று அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

No comments

Powered by Blogger.