Header Ads



கோத்தபாயவின் அரசியல் பிரவேசம் ஆரம்பம் - ஒரேமேடையில் ராஜபக்ஸ சகோதரர்கள் சங்கமம்

பத்தரமுல்ல - நெலும் மாவத்தையில் அமைந்துள்ள பொதுஜன பெரமுனவின் கட்சி தலைமையகத்திற்கு கோத்தபாய ராஜபக்ஸ இன்று முதன்முறையாக சென்றுள்ளார்.

கோத்தபாய ராஜபக்ஸவின் இந்த பயணத்தில் மஹிந்த ராஜபக்ஸ மற்றும் பஸில் ராஜபக்ஸவும் கலந்துகொண்டிருந்தனர்.

இதன்போது மஹிந்த, கோத்தா மற்றும் பஸிலுக்கு தாமரை மொட்டுக்கள் வழங்கி ஏனைய உறுப்பினர்கள் வரவேற்றுள்ளனர்.

தொடர்ந்து மூவரும் ஒரே மேடையில் கடவுள் வணக்கத்துடன் தமது அரசியல் பயணத்தை ஆரம்பித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதில், ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியை பிரதிநிதித்துவப்படுத்தும் மாகாண சபை உறுப்பினர்கள் சிலர், ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் உறுப்புரிமையை பெற்றுக்கொள்ள உள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது.

இதில் டளஸ் அலகப்பெரும, கெஹலிய ரம்புக்வெல்ல, சமல் ராஜபக்ஸ உள்ளிட்ட பொதுஜன பெரமுனவின் உறுப்பினர்களும், பொது மக்களும் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

2 comments:

  1. ஹிட்லருக்கு இந்த நாட்டில் இடமில்லை என்று கூறி விட்டார்களே.

    ReplyDelete
  2. கோத்த பாய அவர்களே, நீங்க பதவிக்கு வந்தால் மீண்டும் சிறையில்தான் மீதிவாழ்வு என்ற தீர்மானத்தோடு என்னை கைது செய்வீர்களா? சென்றமுறை உங்கள் மீது குற்றச்சாட்டுகள் இல்லை ஆனால் உங்களுக்கு தமிழரையும் முஸ்லிம்களையும் இணைக்க வல்லமை இருக்கு அதனால் உங்களை வெளியில் விட முடியாது என உங்கள் அதிகாரிகள் சொன்னார்கள். 2013 நவம்பரில் தர்மமும் சர்வதேசமும் என்னைக் காப்பாறின. இன்னுமொரு தடவை எனக்கு அதிஸ்ட்டம் இருக்க்காமல் போகலாம். கடவுள் என்ற நினைப்பில் இருந்து நீங்கள் மாறி விட்டதாகவும் தெரியவில்லை . அதனால் கேட்கிறேன்

    ReplyDelete

Powered by Blogger.