Header Ads



துருக்கியில் நீடித்த, அவசரகால நிலை முடிவுக்கு வந்தது

துருக்கியில் இரண்டு ஆண்டு காலமாக நீடித்த அவசர நிலை முடிவுக்கு கொண்டுவரப்பட்டுள்ளது.

2016இல் நடந்த ஆட்சிக்கவிழ்ப்பு முயற்சி முறியடிக்கப்பட்ட பின் இந்த அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்டது. அவசர நிலையின் கீழ் பல்லாயிரம் பேர் கைது செய்யப்பட்டனர் அல்லது பணி நீக்கம் செய்யப்பட்டனர்.

ஏழு முறை அவசர நிலைக் காலம் நீட்டிக்கப்பட்டது. ஒவ்வொரு முறையும் மூன்று மாத காலத்துக்கு இந்த நீட்டிப்பு வழங்கப்பட்டது. ஜனாதிபதி ரிசப் தையிப் எர்துவான் மீண்டும் தேர்தலில் வெற்றி பெற்று பதவியைத் தக்கவைத்துக்கொண்ட சில வாரங்களுக்குப் பின், தற்போது மீண்டும் அவசர நிலைக் காலத்தை நீட்டிக்கவேண்டியதில்லை என்று அந்த அரசு முடிவு செய்துள்ளது.

அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்டதில் இருந்து 1.07 லட்சம் பேர் அரசுத் துறை பணிகளில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர்். மேலும் சுமார் 50 ஆயிரம் பேர் கைது செய்யப்பட்டுள்ளனர.்் அவர்கள் மீதான விசாரணை நிலுவையில் உள்ளது என்று அதிகாரபுூர்வ புள்ளிவிரங்களும், சில அரசு சாரா நிறுவனங்களும் கூறுகின்றன.

No comments

Powered by Blogger.