Header Ads

பேராதெனிய பல்கலைகழகம் 2 மாதங்களுக்கு மூடப்படும் - சகல மாணவர்களையும் உடன் வெளியேற உத்தரவு

பேராதெனிய பல்கலைகழகத்தின் அனைத்து பீடங்களும் இரண்டு மத காலத்திற்கு மூடப்படும் என பல்கலைக்கழக நிர்வாகம் தெரிவித்துள்ளது.

நிர்வாக பிரச்சினைகள் சிலவற்றின் காரணமாகவே இவ்வாறு அனைத்து பீடங்களும் மூடப்பட்டுள்ளதாக பல்கலைக்கழக உப வேந்தர் உபுல் பி திசாநாயக்க தெரிவித்தார்.

பல்கலைக்கழக வகுப்பு வருகை தொடர்பில் ஏற்பட்டுள்ள பிரச்சினையை அடுத்து பொறியியல் பீட மாணவர்கள் தொடர்ச்சியான உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதனைத் தொடர்ந்தே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன் மாணவர்கள் அனைவருக்கும் இரண்டு மாதகால விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.

மேலும் மாணவர்கள் மீண்டும் பல்கலைக்கழகத்திற்கு வரும் தினம் தொடர்பில் ஊடகங்கள் மூலம் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதனடிப்படையில் இன்று மாலை 6 மணிக்கு முன்னர் மாணவர்களை பல்கலைகழக வாளகத்தில் இருந்தும் விடுதிகளிலிருந்தும் வெளியேறுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.(அ)
பேராதெனிய பல்கலைகழகத்தின் அனைத்து பீடங்களும் இரண்டு மத காலத்திற்கு மூடப்படும் என பல்கலைக்கழக நிர்வாகம் தெரிவித்துள்ளது.

நிர்வாக பிரச்சினைகள் சிலவற்றின் காரணமாகவே இவ்வாறு அனைத்து பீடங்களும் மூடப்பட்டுள்ளதாக பல்கலைக்கழக உப வேந்தர் உபுல் பி திசாநாயக்க தெரிவித்தார்.

பல்கலைக்கழக வகுப்பு வருகை தொடர்பில் ஏற்பட்டுள்ள பிரச்சினையை அடுத்து பொறியியல் பீட மாணவர்கள் தொடர்ச்சியான உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதனைத் தொடர்ந்தே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன் மாணவர்கள் அனைவருக்கும் இரண்டு மாதகால விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.

மேலும் மாணவர்கள் மீண்டும் பல்கலைக்கழகத்திற்கு வரும் தினம் தொடர்பில் ஊடகங்கள் மூலம் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதனடிப்படையில் இன்று மாலை 6 மணிக்கு முன்னர் மாணவர்களை பல்கலைகழக வாளகத்தில் இருந்தும் விடுதிகளிலிருந்தும் வெளியேறுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.

No comments

Powered by Blogger.