Header Ads



278 ஓட்ட வித்தியச்சத்தில், இலங்கை அணி அபார வெற்றியை சுவைத்தது

இலங்கை மற்றும் தென்னாபிரிக்க அணிகளுக்கிடையிலான முதலாவது டெஸ்ட் போட்டியில், தென்னாபிரிக்க அணிக்கு 352 ஓட்டங்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்ட நிலையில் 73 ஓட்டங்களுக்கு அனைத்து விக்கட்டுக்களையும் இழந்து படு தோல்வியை சந்தித்தது.

இலங்கை - தென்ஆபிரிக்கா இடையிலான முதல் டெஸ்ட் காலியில் நடைபெற்று வருகிறது. நேற்றுமுன்தினம் தொடங்கிய இந்த டெஸ்டில் இலங்கை நாணயச்சுழற்சியில் வென்று துடுப்பெடுத்தாட்டத்தை தெரிவு செய்தது.

கருணாரத்ன தனிஒருவராக நின்று 158 ஓட்டங்கள் சேர்க்க இலங்கை அணி 287 ஒட்டங்கள் குவித்து ஆட்டமிழந்தது. தென்ஆபிரிக்கா அணி சார்பில் ரபாடா 4 விக்கெட்டும், ஷாம்சி 3 விக்கெட்டும் வீழ்த்தினார்கள்.

இந்நிலையில்  தென்ஆபிரிக்கா அணி, இலங்கையின் சுழற்பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் முதல் இன்னிங்க்சில்  126 ஓட்டங்களுக்கு சுருண்டது அறிந்ததே.

ஏற்கனவே தனது முதல் இன்னிங்ஸில் 287 ஓட்டங்களை பெற்ற இலங்கை அணி, தென்னாபிரிக்க அணியை விட 161 ஓட்டங்கள் முன்னலை வகிக்கும் நிலையில், இரண்டாம் இன்னிங்ஸிற்காக 190 ஓட்டங்களை பெற்றதன் மூலம், தென்னாபிரிக்க அணிக்கு 352 ஓட்டங்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது.

அந்த வகையில் தனது இரண்டாம் இன்னிங்ஸிற்காக துடுப்பெடுத்தாடிய  தென்னாபிரிக்க அணி  தனது இரண்டாம் இன்னிங்ஸில் அனைத்து விக்கட்டுக்களையும் இழந்து 73 ஓட்டங்களை மட்டுமே பெற்றது.

இதனை அடுத்து இலங்கை அணி 278 ஓட்ட வித்தியச்சத்தில்  அபார வெற்றியை பெற்றது.

No comments

Powered by Blogger.