Header Ads



இலங்கையில் அபூர்வ பலா மரம் - 250 வருடங்களாக விடாமல் காய்கிறதாம...!

இலங்கையில் அபூர்வ பலா மரம் ஒன்று வளர்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கடுகன்னாவ, லகபுவ பிரதேசத்தை சேர்ந்த ஜயவர்தன என்பவரின் வீட்டிலேயே இந்த மரம் வளர்ந்துள்ளது.

ஜயவர்தன என்பவரின் தாத்தாவின் தாத்தாவால் இந்த மரத்தின் கன்று நாட்டப்பட்டுள்ளது.

கிட்டத்தட்ட 250 வருடங்களாக தங்கள் தோட்டத்தில் வளரும் இந்த அபூர்வ பலா மரத்தினால் இன்னமும் பலர் பயன் பெறுகின்றனர்.

வருடத்திற்கு இரண்டு முறை இந்த மரத்தில் பலா காய்கள் காய்ந்து தொங்கும் எனவும், இதனை வீதியில் செல்வோர் பறித்து செல்வதாக ஜயவர்தன தெரிவித்துள்ளார்.

வழமையை விடவும் மிகவும் அதிகமான பலாப்பழங்கள் இந்த மரத்தில் காய்ப்பதே சிறப்பு அம்சமாகும்.

250 வருடங்களுக்கு பழைமையான ஒரு மரத்தில் இன்றும் பலன் பெறுவதென்பது ஒரு அபூர்வ விடயமாகவே கருதப்படுகின்றது.

1 comment:

  1. மேலும், அவன் எத்தகையவன் என்றால் அவனே பூமியை விரித்து. அதில் உறுதியான மலைகளையும், ஆறுகளையும் உண்டாக்கினான்;

    இன்னும் அதில் ஒவ்வொரு கனிவர்க்கத்திலிருந்தும் இரண்டு இரண்டாக ஜோடிகளை உண்டாக்கினான்;

    அவனே இரவைப் பகலால் மூடுகிறான் - நிச்சயமாக இவற்றில் சிந்திக்கும் மக்களுக்குப் பல அத்தாட்சிகள் இருக்கின்றன.

    (அல்குர்ஆன் : 13:3)
    www.tamililquran.com

    ReplyDelete

Powered by Blogger.