July 31, 2018

அக்காவின் உடலில் வளர்ந்துவரும், உயிரற்ற தங்கை - 14 வயது சிறுமி அனுபவிக்கும் துன்பம்


பிலிப்பைன்சில் 14 வயது சிறுமி ஒருவரின் வயிற்றில் இரண்டு கைகள் தொடர்ந்து வளர்ந்து வந்த நிலையில், தற்போது அதை அறுவை சிகிச்சை மூலம் அகற்றுவதற்கு தாய்லாந்து செல்லவுள்ளதாக கூறப்படுகிறது.

பிலிப்பைன்சின் இலிகன்  பகுதியைச் சேர்ந்தவர் வெரோனிகா காமிங்யூஸ். 14 வயது சிறுமியான இவருக்கு பிறக்கும் போதே மார்பகம் இருக்கும் பகுதிக்கு அருகே இரண்டு கைகள் வளர்ந்த நிலையில், வயிற்றுப்பகுதியில் ஒரு நீள்வட்ட வடிவில் உறுப்பு ஒன்று வளர்ந்த நிலையில் இருந்துள்ளது.

இதனால் கடும் அவதிப்பட்டு வந்த அவர், தற்போது உள்ளூர் மக்களின் உதவியோடு தாய்லாந்திற்கு அறுவை சிகிச்சைக்காக செல்லவுள்ளார்.

இது குறித்து வெரோனிகா காமிங்யூஸ் கூறுகையில், நான் சிறு வயதில் இருக்கும் போது ஒரு சிறிய அளவு கால்போன்று தெரிந்தது. அதன் பின் நான் வளர வளர, அதுவும் வளர ஆரம்பித்தது. அது இரண்டும் மிகவும் எடை கொண்டதாக இருக்கும். இதனால் நான் கடும் அவதிக்குள்ளாவேன், வளர்ந்த நகங்களையும் வெட்டுவேன் என்று வேதனையுடன் கூறியுள்ளார்.

மேலும் வெரோனிகா காமிங்யூஸ் தயார் புளோரா காமிங்யூஸ்  கூறுகையில், நான் கர்ப்பமாக இருக்கும் போது மருத்துவர்களை சரியாக சென்று பார்க்கவில்லை, நான் இரட்டை குழந்தை பிறக்கப்போகிறது என்று தான் நினைத்தேன். ஆனால் எதிர்பாரதவிதமாக அது இரட்டை குழந்தை இல்லை. வெரோனிகா காமிங்யூஸ்  தான் பிறந்தாள். அப்போது இரட்டை குழந்தை என நினைத்த அந்த குழந்தையின் வளர்ச்சி சரியில்லாத காரணத்தினால், அந்த குழந்தையின் உடல் பாகங்கள் அப்படியே வெரோனிகா காமிங்யூஸ்  -யிடம் ஓட்டி வளர்ந்துள்ளது.

இதன் காரணமாக அவ்வப்போது அவள் மிகவும் கஷ்டப்பட்டுள்ளாள். சில நேரம் அதில் இரத்தம் எல்லாம் வந்துள்ளது. நாங்கள் சிகிச்சை பெற்று வரும் மருத்துவர் இதை சுலபமாக நீக்கிவிடலாம் என்று கூறியுள்ளார். அதுமட்டுமின்றி உள்ளூர் மக்கள் தங்களுக்கு உதவியுள்ளதால், தற்போது தன் மகள் அறுவை சிகிச்சைக்காக தாய்லாந்து செல்லவுள்ளதாகவும், விரைவில் அறுவை சிகிச்சை செய்யவுள்ளதாகவும் கூறியுள்ளார். இரட்டை குழந்தையாக பிறக்க வேண்டிய காரணத்தினால், வெரோனிகா காமிங்யூஸ்   பிறந்துள்ளதால், அவளுடன் சேர்ந்து பிறக்க வேண்டிய தங்கை அவளை விட்டு பிரியமுடியாமல் அவளுடனே ஒட்டி வளர்ந்து வருகிறாள் என்று அப்பகுதி மக்கள் சிலர் கூறி வருகின்றனர்.

குரூப் வீடியோ ஆடியோ காலிங் வசதியை அறிமுகம் செய்த வட்ஸப்

குறுந்தகவல்களை பகிர பயன்படுத்தப்படும் சமூக வலைதளமான வாட்ஸ் அப், தங்கள் பயனாளர்களை கவர அவ்வப்போது புதியப்புதிய அம்சங்களை அறிமுகப்படுத்தி வருகிறது. 

தகவல்களை டெக்ஸ்ட் மூலமாக மட்டும் அல்லாது, வாய்ஸ் காலிங், வீடியோ காலிங் ஆகிய சேவைகளையும் வாட்ஸ் அப் வழங்கி வருகிறது. இதன் மேம்பட்ட ஒரு அம்சமாக, குரூப் வீடியோ மற்றும் ஆடியோ காலிங் சேவையை வாட்ஸ் அப் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. 

கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் முதல் பரிசோதனை அளவில் இருந்த இந்த வசதி முதல் முறையாக, பயனாளர்கள் பயன்பாட்டுக்கு முழுமையாக கொண்டு வரப்பட்டுள்ளது. 

உலகம் முழுவதும் உள்ள ஆண்ட்ராய்டு, மற்றும் ஐஓஎஸ் இயங்கு தளத்தில் வாட்ஸ் அப் சேவையை பயன்படுத்தும் பயனாளர்கள் இந்த சேவையை பயன்படுத்த முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.  

ஒரே நேரத்தில், அதிகபட்சமாக நான்கு பேருடன் மட்டுமே வாய்ஸ் மூலமாகவும் வீடியோ மூலமாகவும் பேச முடியும் என்பது கவனிக்கத்தக்கது. டெக்ஸ்ட் மெசேஞ் போல, வீடியோ மற்றும் ஆடியோ காலிங் வசதியும்  என்கிரிப்ட் செய்யப்பட்ட ஒன்று  வாட்ஸ் அப் தெரிவித்துள்ளது

ஜனாதிபதியாக ராஜித்த - சுபசோபனம் தெரிவித்த மைத்திரி

சுகாதார அமைச்சர்களாக இருந்தவர்கள் நாட்டின் தலைவர்களாக வந்த வரலாறு இருப்பதனால், அமைச்சர் ராஜித சேனாரத்னவும் அந்த நிலைக்கு எதிர்காலத்தில் வருவார் என்ற சுபசோபனத்தை தெரிவித்துக் கொள்வதில் மகிழ்ச்சியடைகின்றேன் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.

உலக சுகாதார நிறுவனத்தின் உப தலைவர் பதவியைப் பெற்ற அமைச்சர் ராஜித சேனாரத்னவைப் பாராட்டும் நிகழ்வு இன்று (31) ஜனாதிபதி தலைமையில் கொழும்பில் இடம்பெற்றது. இதில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி இவ்வாறு கூறினார்.

இந்த நாட்டின் முதலாவது சுகாதார அமைச்சராக இருந்த பண்டாரநாயக்க அவர்கள் இருந்த பதவியிலிருந்து வெளியே வந்து நாட்டின் தலைவராக பதவியேற்றார். தற்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் சுகாதார அமைச்சராக இருந்துவிட்டு வெளியேறி நாட்டின் தலைவராக பதவியேற்றார் என இந்த நிகழ்வில் உரையாற்றும் போது டாக்டர் காலோ பொன்சேக கூறியது முக்கிய ஒன்று என ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.

இந்த நேரத்தில் நானும் அதனையே ஞாபகப்படுத்துகின்றேன். இருந்த இடத்தில் இருந்துகொண்டோ அல்லது வெளியேறியோ அமைச்சர் ராஜித சேனாரத்னவும் நாட்டின் தலைவராக வரவேண்டும் என பிரார்த்திக்கின்றேன்.  

சைலன்சரை அதிக ஒலி எழுப்பும் வகையில் மாற்றியவருக்கு 50 ஆயிரம் ரூபா தண்டம்

-பாறுக் ஷிஹான்-

மோட்டார் சைக்கிள் சைலன்சரை அதிக ஒலி எழுப்பும் வகையில் மாற்றியமைத்து வீதியில் செலுத்திச் சென்ற நபருக்கு 50 ஆயிரம் ரூபா தண்டம் விதித்து யாழ்ப்பாணம் நீதிமன்றம் மேலதிக நீதிவான் வி.இராமகமலன் இன்று(31) உத்தரவிட்டார்.

யாழ்ப்பாணம் நகரில் ஒரு மோட்டார் சைக்கிளில் தலைக்கவசமின்றி பயணித்த இருவரை பின் தொடர்ந்த பொலிஸார், அவர்களது வீடுவரை சென்று வீதி விதிமீறல் குற்றச்சாட்டின் கீழ் வழக்குப் பதிவு செய்தனர்.

வீதியில் மோட்டார் சைக்கிளைச் செலுத்திச் சென்ற போது, சாரதி அனுமதிப் பத்திரமில்லை, வரி அனுமதிப் பத்திரமில்லை, காப்புறுதிப் பத்திரமில்லை, செலுத்திச் சென்றவரும் பின்னால் அமர்ந்திருந்து பயணித்தவரும் தலைக்கவசம் அணிந்திருக்கவில்லை மற்றும் மோட்டார் சைக்கிளுக்கு உரிய சைலன்சரை அதிக ஒலியை எழுப்பும் வகையில் மாற்றியமைத்திருந்தமை ஆகிய குற்றச்சாட்டுக்களை அடுக்ககாக முன்வைத்து மோட்டார் சைக்கிள் உரிமையாளருக்கு எதிராக யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் பொலிஸார் வழக்குத் தாக்கல் செய்தனர்.

யாழ்ப்பாணம் நீதிமன்றில் மாவட்ட நீதிபதியும் மேலதிக நீதிவானுமான வி.இராமகமலன் முன்னிலையில் வழக்கு இன்று கூப்பிடப்பட்டது. குற்றஞ்சாட்டப்பட்டவர் மன்றில் தோன்றினார்.

குற்றஞ்சாட்டப்பட்டவருக்கு குற்றச்சாட்டுப்பத்திரம் வாசித்துக் காண்பிக்கப்பட்டது. அவர் அத்தனை குற்றங்களையும் ஏற்றுக்கொண்டார்.

மோட்டார் சைக்கிளுக்குரிய சைலன்சரை அதிக ஒலியை எழுப்பும் வகையில் மாற்றியமைத்த குற்றத்துக்கு 50 ஆயிரம் ரூபா தண்டம் மன்றால் விதிக்கப்பட்டது.
சாரதி அனுமதிப்பத்திரமின்றி மோட்டார் சைக்கிளைச் செலுத்தியமைக்கு 6 ஆயிரம் தண்டம் உள்பட ஏனைய குற்றங்களுக்காக 23 ஆயிரம் ரூபா தண்டம் விதிக்கப்பட்டது.

மொத்தமாக விதிக்கப்பட்ட 73 ஆயிரம் தண்டப் பணத்தையும் செலுத்த கால அவகாசம் வழங்குமாறு தண்டனை பெற்றவர் மன்றில் விண்ணப்பம் செய்தார்.
அதனை பரிசீலித்த மேலதிக நீதிவான், தண்டப் பணம் செலுத்த தவணை வழங்கியதுடன், தண்டை பெற்றவரை பிணையில் செல்ல அனுமதி வழங்கினார்.

புணானை முஸ்லிம்களுக்கு, அதிகாரிகள் செய்யும் கொடுமை - குடியுரிமையும் மறுப்பு

கிரான் பிரதேச செயலக எல்லைக்குட்பட்ட புணானை மேற்கு 210 ஈ கிராம சேவகர் பிரிவிலுள்ள புணானை அணைக்கட்டு – முள்ளிவட்டவான் எனும் பிரதேசத்தில் முஸ்லிம்கள் 1956 ம் ஆண்டிலிருந்து வாழ்ந்து வந்ததற்கான பல்வேறுபட்ட ஆதாரங்கள் இன்றுவரை உள்ளது.

கடந்தகால யுத்தத்தின் காரணமாக அப் பிரதேச மக்கள் 1985 ம் ஆண்டு காலப்பகுதியில் பதினைந்து உயிர்கள் இழக்கப்பட்டதன் பின்னர் அப் பிரதேசத்தை விட்டு இடம்பெயர்ந்துள்ளனர். ஆனால் தற்போது அவர்கள் அங்கு வாழுவதற்கு அவர்களுக்கான குடியுரிமை அதிகாரிகளினால் தொடர்ச்சியாக மறுக்கப்பட்டு வருவதாக ஓட்டமாவடி பிரதேச சபை உறுப்பினர் அஸீஸுர் ரஹீம் தெரிவித்தார்.

ஓட்டமாவடி பிரதேச சபையின் நான்காவது அமர்வு தவிசாளர் ஐ.ரீ.அஸ்மி தலைமையில் 26 ம் திகதி கூடியது அதில் மீனவர்களின் பிரச்சினைகள் தொடர்பில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே பிரதேச சபை உறுப்பினர் அஸீஸுர் ரஹீம் மேற்சொன்னவாறு கூறினார்.

தொடர்ந்தும் அவர் அங்கு பேசுகையில்,

குறித்த பிரதேசத்தில் யுத்தத்துக்கு முன்னர் நூற்றிப்பதினொரு குடும்பங்கள் வாழ்ந்ததற்கான ஆதாரங்கள் வாக்காளர் இடாப்பில் இருப்பதை காணக்கூடியதாகவுள்ளது. எனவே நாட்டில் அமைதி ஏற்பட்டுள்ள இக்காலத்தில் அப் பிரதேசத்து மக்கள் குடியேறச் சென்றபோது பல்வேறு அசெளகரிகங்கள் அவர்களுக்கு ஏற்படுத்தப் பட்டிருக்கின்றது. அங்கு வாழ்ந்து வந்த நூற்றிப்பதினொரு குடும்பங்களில் கிட்டத்தட்ட அறுபதுக்கும் உட்பட்ட குடும்பங்கள் மாத்திரமே குடியேறுவதற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

குறிப்பாக அம்மக்கள் அங்கு குடியேறுவதற்கு தடையாக கிரான் பிரதேச செயலாளர் மற்றும் அப்பிரதேசத்தின் கிராம அபிவிருத்தி உத்தியோகத்தர், வன இலாகா அதிகாரிகள் போன்றோர் இப் பிரதேசத்தில் குடியேறக் கூடாதென்றும் இது வன இலாகாவுக்குரிய பகுதி என்றும் அம்மக்கள் குடியேறுவதற்கு தடையாகவுள்ளனர். இது தொடர்பில் பாதிக்கப்பட்ட மக்கள் அதற்கு எதிராக வழக்கு தொடர்ந்து அது வன இலாகாவுக்கு சொந்தமான இடம் இல்லை என்றும் நீதிமன்றத்தினால் தீர்ப்பும் வழங்கப்பட்டிருக்கிறது.

எனவே மிக அண்மைக்காலமாக இப்பிரதேச மக்களின் குடியுரிமை மறுக்கப்படுவதற்கான பிரதான காரணம் அப் பிரதேச மக்கள் வாகனேரி குளத்தை அண்டிய பகுதிகளில்தான் மீன்பிடி தொழிலை அவர்களுடைய வாழ்வாதாரமாக மேற்கொண்டு வருவதை நாம் காணக்கூடியதாகவுள்ளது. இதற்காக வேண்டி 1985 ம் ஆண்டு அவர்களுக்கான நண்ணீர் மீன்பிடி வாகனேரி விரிவாக்கல் சங்கம் ஒன்றும் ஆரம்பிக்கப்பட்டிருந்தது அதன் தலைவராக மீரா லெவ்வை என்பர் இருந்ததற்கான ஆதாரங்களும் இன்றுவரை உள்ளது.

எனவே யுத்தத்துக்கு முன்னர் தமிழ் முஸ்லிம் உறவுகள் மிகவும் ஒற்றுமையாக வாழ்ந்து வந்திருக்கின்றார்கள் முஸ்லிம்களாகிய நாங்கள் அப் பிரதேசத்தில் தற்போது வாழுகின்ற தமிழ் சமூகத்தோடு ஒற்றுமையாகத்தான் வாழ விரும்புகின்றோம் ஆனால் இங்குள்ள அதிகாரிகள்தான் இக் குடியேற்றத்தை தடுப்பதற்கான வேலைத்திட்டங்களை செய்கின்றார்கள் அதற்கு சில அரசியல்வாதிகளும் உடந்தையாக இருப்பதாக அம்மக்கள் குற்றச்சாட்டுக்களை எம்மிடம் தெரிவிக்கின்றனர்.

எனவே அம்மக்களின் குடியுரிமை பாதுகாக்கப்படுவதோடு அவர்கள் தொடர்ந்தும் அப்பகுதிகளில் தங்களின் வாழ்வாதாரத்தை மேற்கொள்வதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் ஓட்டமாவடி பிரதேச சபை முன்னின்று  இவர்களுக்கான நிரந்தரத் தீர்வினை பெற்றுக்கொடுக்க முன்வரவேண்டும் என பிரதேச சபை உறுப்பினர் அஸீஸுர் ரஹீம் சபையோர் முன்னிலையில் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.

(எச்.எம்.எம்.பர்ஸான்)

பேஸ்புக்கினால் தீக்கிரையான 100 ஏக்கர் - இரத்தினபுரியில் கொடுமை

இரத்தினபுரி - நியதகல மலையில் தீ விபத்து ஏற்படக் காரணமான மூன்று நபர்களை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

நேற்று வைக்கப்பட்ட இந்த தீயானது தற்போது அணைக்கப்பட்டுவிட்டதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் அறிவித்துள்ளது.

இந்த தீ விபத்தினால் 100 ஏக்கருக்கும் மேற்பட்ட காடு தீக்கிரையாகியுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

பேஸ்புக் ஊடாக நட்பாகிய மூன்று நண்பர்கள் குறித்த மலையில் ஏறி நெருப்பு மூட்டி நட்பைப் பகிர்ந்து அளவளாவியுள்ளனர்.

அதன் பின்னர் அவர்கள் நெருப்பு மூட்டிய இடத்தில் இருந்த தீயானது ஏனைய இடத்திற்குப் பரவி இந்த பாரிய அனர்த்தம் நிகழ்ந்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் உதவிப் பணிப்பாளரான பிரதீப் கொடிப்பிலி தெரிவித்தார்.

முஸ்லிம்களின் குடித்தொகை வளர்ச்சி - பூச்சாண்டியும், யதார்த்தமும்...!!

-வ.ஐ.ச.ஜெயபாலன்-

என்னை இனிமேல் விடுதலை செய்வதில்லையெனவும் சிறையில்தான் என் வாழ்வு முடியுமெனவும் தெரிவித்து 2013ல் அன்றைய இலங்கை பாதுகாப்பு செயலாளர் என்னைச் சிறையிட்டார். அந்தச் சூழலில் என்னை சந்தித்த பாதுகாப்பு அதிகாரிகள் சிலர் என்னுடைய முஸ்லிம் ஆதரவு கொள்கை சிங்களவருக்கும் தமிழருக்கும் பாதகமானது என்று எச்சரித்தார்கள். 

ஐரோப்பாவில் நான் அடிக்கடி கேட்பதுபோல சிங்கள பாதுகாப்பு அதிகாரிகளும் பிறப்பு விகித ஏற்றத்தாழ்வுகளையே முன்னிலைப் படுத்திப் பேசினார்கள். அதை நிராகரித்தபோது திருகோணமலையின் 100 வருடப் புள்ளிவிபரங்களைக் காட்டி திருகோணமலை தமிழர்களிடம் இருந்து பறி போனதுபோல முழு இலங்கையும் சிங்களவர்களிடமும் தமிழர்களிடமும் இருந்து பறிபோகிற ஆபத்துள்ளதாக தெரிவித்தனர். மேலும் சிங்களவர்களும் தமிழர்களும் இணைந்து போராடி இலங்கையைக் காப்பாற்ற வேண்டுமென சொன்னார்கள். அவர்களை எதிர்ப்பது என் விடுதலைக்கான சாத்தியத்த அருகச்செய்துவிடும் என்பது தெரிந்தும் அவர்கள் கருத்தை நிராகரித்தேன். 
.
இதுபோன்ற பிரச்சாரங்கள் தமிழர் மத்தியில் சில சமூக சக்திகளால் முன்வைக்கபடுகின்றது. இப்ப என்னை எச்சரிக்கும் தமிழர்கள் சிலரும் திருகோணமலையின் 100 வருடப் புள்ளிவிபரங்களை சுட்டிக் காட்டுகின்றனர். இவை பற்றி எல்லாம் தமிழ் முஸ்லிம் அறிஞர்கள் ஆய்வு அடிப்படையில் கருத்துக்களை முன்வைக்க வேண்டும்.  
.
தமிழர் மத்தியிலும் பேரின சக்திகளால் உருவாக்கப் பட்ட அச்சத்தையே மூன்றாவது பிள்ளைக்கு உதவி செய்யும் புலம் பெயர்ந்த தமிழரின் முனைப்பு முனைப்பு வெளிப்படுத்துகிறது. ஆனால் அவர்கள் அதிக கவனம் செலுத்த வேண்டியது கிழக்கு மாகாணத்தில் அநாதரவாகத் தவிக்கும் பெண்கள் தலைமைக் குடும்பங்களும் ஏதிலிகளாய் நலிந்த முன்னைநாள் போராளிகளின் குடும்பங்களும் இந்தியாவில் இருந்தும் இலங்கையின் ஏனைய பகுதிகளில் இருந்தும் கிழக்கு திரும்பும் அகதிக் குடும்பங்களுக்கும் என்பதை வலியுறுத்த விரும்புகிறேன்.  
.
நான் சிறையில் சிங்கள அதிகாரிகளுடன் விவாதிக்கும்போது திருகோணமலை மாவட்ட குடிசன புள்ளிவிபரங்கள் நூறு வருடங்களின் முன் 1921ல் தமிழர் 59.98% முஸ்லிம்கள் 20.04%  சிங்களவர் 4.4% இருந்துள்ளார்கள் 1946 திட்ட மிட்ட சிங்களக் குடியேற்றம் திருகோணமலை புள்ளிவிபரங்களை தம்ப வைக்கிறது. யுத்தம் ஆரம்பிக்க முன்னம் 1981ல்  தமிழர் 36.3% முஸ்லிம்கள் 29.3%ம் சிங்களவர் 33.4% பதிவு செய்யப்பட்டிருக்கிறது. 
1946ல் சிங்கள குடியேற்ற தளம்பல் வந்ததுபோல 1981ல்    திருகோண மலை குடிசன அமைப்பு யுத்த புலபெயர்வுத் தளம்பலால் பாதிக்கப் படுகிறது. 1987 -1990 இந்திய அமைதிப்படைக் காலக்கட்டத்தில் ஏற்பட்ட சிங்களவர் வெளியேற்றத் தளம்பல் 2001 புள்ளிவிபரங்கள் இல்லாதமையால் பதிவாகவில்லை. ஆனாலும் 2007 புள்ளிவிபரங்கள் சிங்களவர் வெளியேற்ற தளம்பலை ஓரளவு புரிந்துகொள்ள உதவுகிறது. செய்துள்ளது. 1981ல் 33.4% ஆக இருந்த சிங்களவர் தொகை 25,3% ஏறக்குறைய 8% வீழ்ச்சி பதிவாகியுள்ளது. 
.
யுத்தத்துக்கு பின்னர் 1980பதுகளில் ஏறக்குறைய 30000 - 35000 பேர் குடும்பங்களோடு வெளியேறினர். குழந்தைகளோடு இவர்கள் தொகை இன்று 60000 -70000 அளவில் இருக்கும் இவர்களுள் மேல்நாடுகளில் அகதிகளான சில ஆயிரம் பேரைத்தவிர ஏனையோர் இந்திய முகாங்களில் இருந்தும் இலங்கையின் ஏனைய பகுதிகளில் இருந்தும் மெல்ல மெல்ல வர ஆரம்பிடத்துள்ளனர். இந்த வருகை திருகோணமலையின் புள்ளிவிபரங்களில் தளம்பலை ஏற்படுத்தியுள்ளது. 2007ல் 28.7% இருந்த தமிழர் 2012ல் 32.2% ஆக 3.5% அதிகரித்துள்ளனர். முஸ்லிம்களின் குடித்தொகையில் வீழ்ச்சி ஆரம்பித்துள்ளது. 2007ல் 45.4% மாக இருந்த குடித்தொகை 2012ல் 40.4% வீழ்ச்சி அடைந்துள்ளது. இந்தியாவில் இருந்தும் இலங்கையின் ஏனைய பகுதிகளில் இருந்தும் அகதிகள் மீழ்வரவு ஆரம்பித்தமை ஐந்து வருடங்களில் முஸ்லிம்களின் சனத்தொகை வீதத்தை ஏறக்குறைய 5% களால் வீழ்ச்சி அடையச் செய்துள்ளது. தமிழர் குடித்தொகை 3.5% வீத உயர்வை பதிவு செய்துள்ளது. இக்காலகட்டத்தில் சிங்களவர் தொகை சிறிது அதிகரித்துள்ளது. தொடரும் அகதிகளதும் பிள்ளைகளதும் வரவு அடுத்த ஐந்து வருடங்களில் முஸ்லிம்களதும் தமிழர்களதும் வீதாசாரத்தில் பாரிய மாற்றங்கலை ஏற்படுத்தும். தமிழர் முஸ்லிம்களின் குடித்தொகை விகிதாசாரம் தமிழர் 36% முஸ்லிம்கள் 30% என்கிற  1981 மட்டத்தை நோக்கி வேகமாக நகர்வதை நான் சிங்கள பாதுகாப்பு அதிகாரிகளிடம் 2013ல் சுட்டிக் காட்டினேன்.

அம்பாறை மாவட்டத்தில் இருந்து வெளியேற்றப்பட்ட தமிழ் அகதிகள் இன்னும் பெருமளவு வீடு திரும்பவில்லைப்போலும்.  மட்டக் களப்பில் சிங்களவர் தொகையில் வீழ்ச்சி ஏற்படுள்ளது. இதனால் தமிழர் முஸ்லிம்களின் வீதாசாரத்தில் உயர்வு காணப்படுகிறடு. முஸ்லிம்களின் வளற்ச்சி வீதம் மட்டக்களப்பு அம்பாறை மாவட்டங்களில் சிறிய அளவே அதிகரித்துள்ளது. பூச்சாண்டி காட்டுமளவுக்கு பூதாகரமான பிறப்புவிகித தாக்கம் பதிவாகவில்லை.   போர்க்காலத்தில் அம்பாறையில் இருந்து மட்டக்களப்புக்கும் ஏனைய இடங்களுக்கும் அகதியாக புலம் பெயர்ந்தவர்கள் பெருமளவு இன்னும் ஊர் திரும்பவில்லையா? அம்பாறை மாவட்டத்தில் மட்டும்தான் தமிழர்கள் வீதாசாரம் குறைவடைந்துள்ளது. இது ஆய்வுகும் நிவர்த்திக்கும் உரியது.     
.
பெரிய குடும்பங்கள் ஆரோக்கியமான குடும்பகளில்லை என்பது உலகளாவ நிரூபணமாகி உள்ளது. உலகின் பலமான நாடுகள் யாவும் குறைந்த பிறப்பு வீதத்தைக் கொண்ட நாடுகள்தான். உலகின் பலக்கீனமான நாடுகள் பிறப்பு வீதம் அதிகரித்துள்ள நாடுகளாகும். இதையெல்லாம் விஞான ரீதியாக தமிழர்கள் புறக்கணித்துவிட முடியாது. பிறப்பு விகிதத்தைக் குறைக்காமல் ஆரோக்கியமும் பலமுமுள்ள இனமாக மேம்பட முடியாது என்கிற உலக அனுபவத்தை முஸ்லிம்களும் புறக்கணிக்க முடியாது.     . 
.
திருகோணமலை குடித்தொகை விகிதாசார தளம்பல்கள் பற்றிய புள்ளிவிபர பூச்சாண்டிக்கு தமிழர்கள் மிரளவேண்டிய அவசியம் எதுவுமில்லை. புலம் பெயர்ந்த தமிழர்கள் மூன்றாவது குழந்தைக்கு பணம் கொடுப்பதைவிட  திருமலை மாவட்டத்துக்கு திரும்பிவரும்  தமிழ் அகதிகளுக்கு உதவி ஊக்குவிப்பது அவசியம் என வையுறுத்துகிறேன்.

இலங்கைக்கான புதிய சவூதி தூதுவர் நியமனம் - அபிவிருத்திக்கு உதவ வேண்டுமென்கிறார் ஹிஸ்புல்லாஹ்


இலங்கையின் அபிவிருத்திக்கும், இனங்களுக்கிடையிலான ஐக்கியத்தைக் கட்டியெழுப்புவதற்கும் குறிப்பாக முஸ்லிம்களின் முன்னேற்றத்துக்கும் சவூதி அரசாங்கம் கடந்த காலங்களைப் போன்று எதிர்காலத்திலும் தொடர்ந்து ஒத்துழைப்புக்களை வழங்க வேண்டும் என இலங்கைக்கான சவூதி அரேபிய தூதுவர் அப்துல் நாஸர் எச்.அல் ஹாரதியிடம் நெடுஞ்சாலைகள் மற்றும் வீதி அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் கலாநிதி எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் கோரிக்கை விடுத்தார். 

சவூதி அரேபியாவின் இலங்கைக்கான புதிய தூதுவராக அண்மையில் நியமிக்கப்பட்ட அப்துல் நாஸர் எச்.அல் ஹாரதியை இன்று செவ்வாய்க்கிழமை இராஜாங்க அமைச்சர் கலாநிதி எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் உத்தியோகபூர்வமாக தூதுரகத்தில் சந்தித்து கலந்துரையாடலில் ஈடுபட்டார். 

இதன்போது, சவூதி அரேபியாவின் இலங்கைக்கான நிரந்தர தூதுவர் இல்லாத காரணத்தால் பல்வேறுபட்ட பிரச்சினைகள் தீர்க்கப்படாமல் இருந்த சூழ்நிலையில் புதிய தூதுவர் ஒருவர் நியமிக்கப்பட்டமைக்கு இராஜாங்க அமைச்சர் நன்றி தெரிவித்ததோடு குறிப்பாக இலங்கை அரசாங்கத்துக்கும் சவூதி அரசாங்கத்துக்கும் இடையில் நெருக்கமான உறவை பேணுவதற்கும் எதிர்காலத்தில் பல்வேறு பட்ட உறவுகளை வளர்ப்பதற்கும் புதிய தூதுவர் நியமனம் நன்மையாக அமையும் என இதன்போது இராஜாங்க அமைச்சர் தெரிவித்தார். 

புதிய தூதுவர் தனது பணிகளை தொடர்வதற்கு முழுமையான ஒத்துழைப்புக்களை வழங்குவதாக தெரிவித்த இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ், இலங்கையின் அபிவிருத்திக்கும் இனங்களுக்கிடையிலான ஐக்கியத்தைக் கட்டியெழுப்புவதற்கும் குறிப்பாக முஸ்லிம்களின் முன்னேற்றத்துக்கும் சவூதி அரசாங்கம் கடந்த காலங்களைப் போன்று எதிர்காலத்திலும் தொடர்ந்து ஒத்துழைப்புக்களை வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்தார். 

இராஜாங்க அமைச்சரின் கோரிக்கையை ஏற்றுக்கொண்ட சவூதி தூதுவர், இரண்டு அரசாங்கங்களினதும் உறவை கட்டியெழுப்பி எதிர்காலத்தில் இலங்கையில் மிக அதிகமான அபிவிருத்திப் பணிகளை முன்னெடுக்க சவூதி அரசாங்கத்தின் ஒத்துழைப்புக்களைப் பெற்றுத் தருவதற்கு முயற்சி எடுப்பதாகவும் உறுதியளித்தார். 

“ஜனபல சேனா” என்ற பெயரில் போராட்டம்

ஒன்றிணைந்த கூட்டு எதிர்க்கட்சி மற்றும் அரசாங்கத்திற்கு எதிரான கட்சிகள் அனைத்தும் ஒன்றிணைந்து அரசாங்கத்திற்கு எதிராக போராட்டம் நடத்த தீர்மானித்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவங்ச தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே இதை குறிப்பிட்டார். தொடர்ந்து தெரிவிக்கையில்,

“ஜனபல சேனா” என்ற தொனிப்பொருளில் ஆகஸ்ட் மாதம் இரண்டாம் திகதி இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட உள்ளது.

ஆகஸ்ட் மாதம் இரண்டாம் திகதியுடன் இந்த போராட்டம் முடியப்போவதில்லை. செப்டம்பர் மாதம் ஐந்தாம் திகதி இதை விட பாரிய போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

நடைபெற்று முடிந்த உள்ளூராட்சி சபைத் தேர்தலில் எமது பலத்தை அரசாங்கத்திற்கு காட்டியிருந்தோம்.

அதே பலத்துடன் மீண்டும் அரசாங்கத்திற்கு எதிராக போராட்டம் நடத்த உள்ளதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவங்ச தெரிவித்துள்ளார்.

இளஞ்செழியனின் புகைப்படத்தை, பயன்படுத்தி அச்சுறுத்திய மாணவர்கள்

திருகோணமலை மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியனின் புகைப்படத்தை பயன்படுத்தி பயமுறுத்திய மூன்று இளைஞர்களையும் தலா இரண்டு இலச்சம் ரூபாய் சரீர பிணையில் செல்லுமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

இவ்வாறு பிணையில் செல்ல உத்தரவு பிறப்பிக்கப்பட்டவர்கள் திருகோணமலை, கந்தசாமி கோயில் வீதியைச்சேர்ந்த மோகன் சசிகரன் (19வயது) உட்துறைமுக வீதியைச்சேர்ந்த தம்பிராஷ பிரனிஜன் (19வயது) மற்றும் பாரதி வீதியைச்சேர்ந்த ரவீந்திரன் மதுரன் (19வயது) எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

நகர்த்தல் பத்திரத்தின் மூலம் செய்யப்பட்ட விண்ணப்பத்தையடுத்து இவ்வழக்கு இன்று திருகோணமலை நீதிமன்ற பிரதம நீதவான் எம்.எச்.எம்.ஹம்ஸா முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

மேல் நீதிமன்ற நீதிபதியின் புகைப்படத்தை குருஞ்செய்தி மூலம் அனுப்பி அவருடைய பெயரை பயன்படுத்தி பயமுறுத்தி தலைக்கவசத்தினால் அடித்து காயப்படுத்திய குற்றச்சாட்டிற்காக கடந்த 26ம் திகதி முறைப்பாடு செய்யப்பட்டிருந்த நிலையில் மூவருக்கும் எதிராக தலைமையக பொலிஸார் குற்றப்பத்திரம் தாக்கல் செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட மூவரையும் எதிர்வரும் 02ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு திருகோணமலை நீதிமன்ற பதில் நீதவான் எம்.பீ.எம்.அன்பார் உத்தரவிட்டிருந்தார்.

இந்நிலையில் இவ்வழக்கு நகர்த்தல் பத்திரத்தின் மூலம் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. அவ்வழக்கில் கைது செய்யப்பட்ட இளைஞர்கள் சார்பில்

முன்னிலையான சட்டத்தரணிகள் கைது செய்யப்பட்ட மூன்று பேரில் இருவர் இம்முறை க.பொ.த உயர்தர பரீட்சை எதிர்வரும் 06ஆம் திகதி நடைபெறவுள்ளதாகவும் அம்மாணவர்கள் பரீட்சை எழுதவுள்ளதாகவும் நீதவானிடம் குறிப்பிட்டுள்ளனர்.

இதனை கருத்திற்கொண்ட திருகோணமலை நீதிமன்ற பிரதம நீதவான் எம்.எச்.எம்.ஹம்ஸா மூன்று பேரையும் தலா இரண்டு இலச்சம் ரூபாய் வீதம் சரீர பிணையில் செல்லுமாறும் மாணவர்கள் ஒழுக்கமுள்ளவர்களாகவும் சமூகத்திற்கு எடுத்துக்காட்டாகவும் இருக்க வேண்டும் என தெரிவித்ததுடன் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமைகளிலும் திருகோணமலை தலைமையக பொலிஸ் நிலையத்திற்கு சென்று கையொப்பமிட வேண்டுமெனவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

அத்துடன் எதிர்வரும் 09ஆம் மாதம் 03ஆம் திகதி வழக்கிற்கு சமூகமளிக்குமாறும் நீதிமன்றம் கட்டளையிட்டது.

மக்களின் கழுத்தில், கத்தியை வைக்க பார்கின்றனர் - முஜிபுர் ரஹ்மான்

எதிர்க்கட்சி தலைவர் பதவி குறித்து எம்மால் எந்த தீர்மானமும் எடுக்க முடியாது. அதனை கட்சி தலைவர்களுடன் கலந்துரையாடி பாராளுமன்றமே தீர்மானம் எடுக்கும் என ஐக்கிய தேசியக் கட்சி தெரிவித்தது.

அத்துடன் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவையும் கோத்தாபய ராஜபக்ஷவையும் ஆட்சிக்கு கொண்டு வரும் நோக்கிலேயே அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தினர் வேலைநிறுத்ததில் ஈடுப்பட்டு மக்களின் கழுத்தை நசுக்க முற்படுவதாகவும் அக்கட்சி சுட்டிக்காட்டியது

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகமான சிறிகொத்தாவில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்து கொண்டு கருத்து வெளியிடுகையிலேயே ஐக்கிய தேசியக்கட்சியின் கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் மேலும் குறிப்பிடுகையில்,

"சர்வதேச அளவில் வர்த்தக துறையை அடிப்படையாக கொண்டு பல்வேறு ஒப்பந்தங்கள் கைச்சாத்திட்டு வருகின்றன. ஒப்பந்தங்களின் ஊடாகவே தற்போது சர்வதேச அளவில் வர்த்தக சந்தை விரிவுப்படுத்தப்பட்டு வருகின்றது. ஆகவே சர்வதேச சந்தையில் இலங்கையும் நுழைய வேண்டும். அவ்வாறாயின் சர்வதேச நாடுகளுடன் ஒப்பந்தங்கள் பல கைச்சாத்திட்டே ஆக வேண்டும். அப்போதுதான் சர்வதேசத்துடன் எம்மால் ஒன்றிணைந்து பயணிக்க முடியும். 

சர்வதேச நாடுகளுடன் ஒப்பந்தம் செய்வது கட்டாயமாகும். எமது அரசாங்கம் மாத்திரம் இதனை செய்யவில்லை. முன்னைய அரசாங்கங்கள் அனைத்தும் பல்வேறு நாடுகளுடன் ஒப்பந்தங்களை செய்து வந்துள்ளன. இதன் மூலமாகதான் நாட்டை அபிவிருத்தியின் பால் கொண்டு செல்ல முடியும். இலங்கையின் உற்பத்திகளை வெளிநாட்டு சந்தைக்கு கொண்டு செல்வதற்கு ஒப்பந்தங்கள் செய்தே ஆக வேண்டும். இல்லை என்றால் நாம் தனிமைப்பட்டு விடுவோம். இதனால் நாட்டு மக்களே பாதிக்கப்படுவர். 

இலங்கையானது பல்வேறு நாடுகளுடன் ஒப்பந்தங்கள் செய்துள்ளன. இந்தியா, பாகிஸ்தான், மலேசியா, சிங்கப்பூர், சீன உட்பட எமது அன்டைய நாடுகளுடன் ஒப்பந்தங்கள் செய்வதன் மூலம் பல்வேறு இலாபங்களை எம்மால் பெற்றுக்கொள்ள முடியும். மேலும் குறித்த நாடுகளுடன் சீரான நட்புறவை பேணி பாதுகாக்க முடியும். 

சர்வதேச நாடுகளுடனான ஒப்பந்ததின் போது எமக்கு இலாபமும் இருக்கும் நஷ்டமும் இருக்கும். அதனை தவிர்க்க முடியாது. பொதுவாக ஒப்பந்தங்களில் இலாபம், நஷ்டம் ஆகியவற்றை கருத்திற்கொள்ள முடியாது. மத்திய கிழக்கு நாடுகளின் பொருளாதாரத்தின் கேந்திர நிலையமாக டுபாய் இருப்பதனை போன்று ஆசியாவின் பொருளாதார கேந்திர நிலையமாக சிங்கப்பூர் விளங்குகின்றது. ஆகவே அந்த நாட்டுடன் ஒப்பந்தம் செய்வது கட்டாயமாகும்.

இந் நிலையில் தற்போது சிங்கப்பூர் நாட்டுடன் நாம் செய்த ஒப்பந்தை வைத்துக்கொண்டு வேலை நிறுத்த போராட்டத்தில் குதிப்பதற்கு வைத்திய அதிகாரிகள் சங்கத்தினர் தயாராகி வருகின்றனர்.

நாட்டின் இனவாத ஆட்சியை மீண்டும் கொண்டு வரும் நோக்கிலேயே வைத்திய அதிகாரிகள் சங்கத்தினர் இவ்வாறு செயற்பட்டு வருகின்றனர்.  முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவையும், கோத்தாபய ராஜபக்ஷவையும் ஆட்சிக்கு கொண்டு வரும் நோக்கிலேயே அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தினர் வேலைநிறுத்ததில் ஈடுபட்டு பொதுமக்களின் கழுத்தை நசுக்க பார்கின்றனர். பொது மக்களை பணய கைதிகளாக வைத்து போராட்டம் செய்வதனை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது. 

அத்துடன் இந்த ஒப்பந்ததை வைத்து கொண்டு மக்களின் கவனத்தை திசை திருப்ப பார்கின்றனர். காலி முகத்திடல், இராணுவ முகாம் துறைமுகர் நகர் திட்டத்திற்காக கடற்பரப்பு போன்றவை விற்கப்படும் போது  அப்போதைய ஆட்சியில் அமைச்சராக இருந்த பந்துல குணவர்தன போன்றோருக்கு ஞானம் இருக்கவில்லை. ஆனால் எதிர்க்கட்சிக்கு வந்தவுடன் தான் பந்துல குணவர்தன உட்பட கூட்டு எதிரணிக்கு ஞானம் பிறந்துள்ளது. 

முன்னைய ஆட்சியின் போது நாட்டின் பல இடங்களை நிரந்தரமாக விற்றனர். ஆனால் நாம் அதனை குத்தகைக்கு மாற்றினோம். எனினும் மஹிந்த ராஜபக்ஷ ஆட்சியில் நாட்டின் வளம் வி்ற்கப்படுவதற்கு எதிராக பாதெனிய தலைமையிலான வைத்திய சங்கத்தினர் அப்போது போராடவில்லை.

சாதாரண வைத்தியர் ஒருவருக்கு ஒரு இலட்சத்து 67 ஆயிரம் ரூபா சம்பளம் கிடைக்கின்றது. விசேட வைத்திய நிபுணருக்கு 2 இலட்சத்து 50 ஆயிரம் ரூபா சம்பளம் கிடைக்கின்றது. மேலதிக கொடுப்பனவாக 50 ஆயிரம் ரூபா கிடைக்கின்றது. அதற்கு அப்பால் ஐந்து வருடங்களுக்கு வரி தீர்வையற்ற வாகனங்களை கொள்வனவு செய்வதற்கான அனுமதி பத்திரம் வழங்கப்படுகின்றது. ஆகவே இவை அனைத்தும் பொது மக்களின் பணமாகும்.

பொது மக்களின் பணத்தில் சம்பளம் பெற்று பொது மக்களின் கழுத்தில் கத்தி வைக்க பார்கின்றனர். அனைத்து வைத்தியர்களையும் குறை கூற முடியாது. பாதெனிய தலைமையிலான மாபியாவே இவ்வாறு செயற்படுகின்றது. ஆகவே இவ்வாறான போராட்டங்களுக்கு மக்களே பாடம் புகட்ட வேண்டும்.

அத்துடன் எதிர்க்கட்சி தலைவர் பதவியை கூட்டு எதிர்க்கட்சியினர் கோருகின்றனர். எதிர்க்கட்சி தலைவர் பதவி வழங்குவது குறித்து கட்சி தலைவர்களே தீர்மானிப்பர். இதன்படி எதிர்க்கட்சி தலைவர் பதவியை யாருக்கு வழங்க வேண்டும் என்பது தொடர்பில் பாராளுமன்றமே தீர்மானம் எடுக்கும். எம்மால் எதுவும் கூற முடியாது" என்றார்.

(எம்.எம்.மின்ஹாஜ்)

ஸ்ரீலங்கா ஜம்போ என்ற பெயரில், புதிய நிலக்கடலை அறிமுகம்

இலங்கையில் ஸ்ரீலங்கா ஜம்போ என்ற பெயரில் நிலக்கடலை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

இதனை பிரபல்யப்படுத்துவதன் மூலம் நிலக்கடலை இறக்குமதிக்காக செலவிடப்படும் 700 கோடி ரூபாவை சேமிக்க முடியும் என்று விவசாயத் திணைக்களம் அறிவித்துள்ளது.

இதேவேளை, இறக்குமதி செய்யப்படும் ஜம்போ நிலக்கடலைக்கு மாற்றீடாகவே இந்த ஸ்ரீலங்கா ஜம்போ அறிமுகம் செய்யப்பட்டுள்ளதாக விவசாயத் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

மேலும், இந்த நிலக்கடலை சிறந்த சுவையுடையது என்றும் கூறப்பட்டுள்ளது.

விபரீத பரிசோதனையினால் 3 பிள்ளைகளின தந்தை பலி

அலரி விதையை உண்டால் என்ன நடக்கும் என்ற விபரீத பரிசோதனையில் இறங்கிய நபர் ஒருவர் யாழில் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

யாழ். வலிகாமம் பகுதியைச் சேர்ந்த மூன்று பிள்ளைகளின் தந்தையே இதில் உயிரிழந்துள்ளார்.

இவர் வரும் வழியில் அலரி விதையை உண்டதாகவும், அதனை சாப்பிட்டால் என்ன நடக்கும் என அறிவதற்காகவே அதனை சாப்பிட்டதாகவும் தனது மனைவியிடம் தெரிவித்துள்ளார்.

மேலும் குறித்த நபர் வாந்தி எடுத்துள்ளதுடன், மிகுந்த சோர்வுடனும் காணப்பட்டுள்ளார்.

இதையடுத்து குறித்த நபர் சிகிச்சைக்காக யாழ்.போதனா வைத்தியசாலையில் அவசர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

குறித்த இறப்பு தொடர்பிலான மரண விசாரணைகளை யாழ்.போதனா வைத்தியசாலை திடீர் மரண விசாரணை அதிகாரி ந. பிரேம்குமார் மேற்கொண்டுள்ளார்.

ஆட்டோ சாரதியின், மனிதாபிமானச் செயல்


கொழும்பில் பலரும் வியக்கும் வகையில் மனிதாபிமானத்துடன் செயற்பட்ட முச்சக்கரவண்டி சாரதி தொடர்பில் தகவல் வெளியாகி உள்ளது.

முச்சக்கரவண்டியில் 5 லட்சத்திற்கும் அதிகமாக பணம், கையடக்க தொலைபேசி, விமான கடவுச்சீட்டுகள் இரண்டினை நபர் ஒருவர் விட்டுச் சென்றுள்ளார்.

எனினும் மறந்து விட்டு சென்ற பயண பையை அதன் உரிமையாளரை தேடி ஒப்படைத்த சாரதி ஒருவர் தொடர்பிலேயே தகவல் வெளியாகியுள்ளது.

தெஹிவளை, களுபோவில வசிக்கும் முச்சக்கர வண்டி சாரதியான செல்வராஜ் என்ற இரண்டு பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு மனிதாபிமானத்துடன் செயற்பட்டுள்ளார்.

கடந்த 28ஆம் திகதி காலை தனது முச்சக்கர வண்டியை பழுது பார்ப்பதற்காக அதில் இருந்த பொருட்களை வெளியே எடுத்த போது பின்னால் இருந்த ஆசனத்தில் இந்த பை காணப்பட்டுள்ளது.

பின்னர் அவர் இது தொடர்பில் தனது மனைவியிடம் அறிவித்துவிட்டு பையை திறக்கும் போது, கையடக்க தொலைபேசி, விமான கடவுச்சீட்டுகள் இரண்டு மற்றும் 5 லட்சம் ரூபாவுக்கும் அதிக பணம் இருப்பது தெரியவந்துள்ளது.

அதன் பின்னர் பொலிஸார் ஊடாக குறித்த பயண பையை உரிமையாளரிடம் ஒப்படைப்பதற்கு அவர் நடவடிக்கை மேற்கொண்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில் முச்சக்கர வண்டியின் சாரதி செல்வராஜ் கருத்து வெளியிடுகையில்,

நான் சற்று சிந்தித்தேன். இந்த பையுடன் முச்சக்கர வண்டியில் வந்தது யார் என்பது? எனக்கு ஓரளவு ஞாபகம் இருந்தது. பெண் ஒருவரும் ஆண் ஒருவரும் கொள்ளுப்பிட்டிய பொலிஸ் நிலையத்திற்கு அருகில் இருந்து தெஹிவளைக்கு சென்றார்கள். எனினும் அவர்கள் எவ்விடத்தை சேர்ந்தவர்கள் என எனக்கு தெரியாது.

நான் முச்சக்கர வண்டியை பழுது பார்க்கும் நடவடிக்கையினை பிற்போட்டுவிட்டு கொள்ளுப்பிட்டிய பொலிஸ் நிலையத்திற்கு சென்றோம். காலை 6 மணி அளவில் உயர் அதிகாரியிடம் தகவலை வெளியிட்டேன்.

பொலிஸ் உயர் அதிகாரி எனக்கு நன்றி கூறிவிட்டு தேனீர் விருந்து ஒன்றை வழங்கினார்கள். வெள்ளிக்கிழமை மாலை இவ்வாறு பை ஒன்றை முச்சக்கர வண்டியில் விட்டு சென்றுவிட்டதாக முறைப்பாடு ஒன்று கிடைத்தது என அதிகாரி என்னிடம் கூறினார்.

அதற்கமைய உரிமையாளருக்கு பொலிஸ் அதிகாரி அழைப்பேற்படுத்தி அங்கு வரவழைத்தார். பையை உரிமையாளரிடம் ஒப்படைத்துவிட்டு பொருட்கள் அனைத்தும் சரியாக உள்ளதா என அதிகாரி உரிமையாளரிடம் வினவினார்.

அவர்கள் அதனை பார்த்துவிட்டு ஒன்றுமே குறையவில்லை என கூறினார்கள். அத்துடன் அவர்களின் பணத்தில் 50 ஆயிரம் ரூபாயை என்னிடம் வழங்க முயற்சித்தார்கள். எனினும் நான் அதனை பெற்றுக்கொள்ளவில்லை. பணத்தைவிட மனிதாபிமானம் பெறுமதியானது என நான் கூறிவிட்டு வந்தேன்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.

மாணவனிடமிருந்து 240 போதை மாத்திரைகள் மீட்பு

மாத்தளை மாவட்டத்திலுள்ள பிரபல பாடசாலையில் கல்வி கற்கும் மாணவரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த மாணவன் சந்தேகத்தின் அடிப்படையில் நேற்று கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சந்தேகநபர் கொழும்பில் இருந்து மாத்தளைக்கு போதைமாத்திரைகளை கொண்டு சென்று பாடசாலை மாணவர்களுக்கு விநியோகித்துள்ளதாக தெரியவருகிறது.

இதேவேளை மாணவன் கைது செய்யப்பட்ட போது அவரிடமிருந்து 240 போதைமாத்திரைகள் கைப்பற்றப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஜனாஸா அறிவித்தல் - இப்ராஹீம் சைனப்

சாகவச்சேரியை சேர்ந்தவரும், கல்கிசையில் வசித்தவருமான இப்ராஹீம் சைனப் இன்று 31.07 . 2018 வபாத்தானார். 

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.

இவர் மன்சூர் (FRANCE) இக்பால் மன்சூர், மஃறூப், பூமிலா, பயராஜா, சம்சாத் ஆகியோரின் தாயார் ஆவார்.

ஜனாஸா நல்லடக்கம், இன்று (31/07/2018) அஸர் தொழுகைக்கு பின் தெஹிவலை, ஜும்மா மஸ்ஜித் மையவாடியில் இடம்பெறும்.

தகவல் - மன்சூர்

IMRAN KHAN’S ELECTION VICTORY AND ITS POLITICAL IMPLICATION

-by DR RIFAI. UK-

               Imran Khan has won a historical victory in this Pakistani general election. It is a great victory for Pakistan cricketer, his party and for his country. For the last two decades, Pakistan has been facing many socio-economic and political problems. The religious extremism and violence have been threatening the stability and security of the country for the last three decades. Indeed, violence has been one of main concerns of Pakistani military forces for the last two decades. Many attacks took place in recent time in Pakistan. 

          The Political corruption dominated Pakistan since its establishment. Pakistan has had experienced many military coups. Pakistan is ruled and dominated by few Military and feudal leaders. More than 80% of Pakistani population do not share fair land ownership. Most people in Pakistan suffer from poverty, lack of education and employment opportunities. Moreover, corruption and fraud dominate in many public and private sectors of government. Drug addiction and drug business has intruded in many parts of the country. 

           Pakistan was established on the ideals of Islamic values and principles. Yet, for the last 70 years, Pakistan has been going away from the Islamic ideals of equality, peace, justice, and rule of law. People have had enough of late Benazir Buto family and Nawaz Shariff family. Most people feel that these two families have ruined the economy of the country. People are fade up with politics of Pakistan. People are frustrated with political conditions of Pakistan and they are not happy at all with other main political parties. Against this background, Imam Khan and his party went for this election. It was a timely election for Imran Khan. Was it a political blessing for Imran Khan from Allah or a divine testing for him? Time will testify it.

           One of the best things about this election is the democratic values are still protected in Pakistani land. Unlike many Arab countries people of Pakistan want to protect their political right and democracy.  This election sends a strong message to the Muslim world. That if people want to change the government they could do it in a democratic way without any violence. Arab countries could learn a big lesson from Pakistani democratic traditions. Since its establishment, Pakistan has been protecting its democratic traditions. This is despite some military coups that took place in Pakistan. 

          Protecting democratic traditions is very much important in Pakistan for many reasons. Pakistan needs a strong democratic government not only for its stability but also to set a good example for the entire Muslim world. Today, Muslim politics is in a mess in the Arab world. Many Arab countries do not protect democratic traditions to share people’s aspiration and political wishes. Pakistan can play a greater role in the Muslim world in promoting a good political precedent with its good democratic tradition and good governance. Like Malaysia Pakistan needs to set some good development goals. If Imran Kahn succeeded on this, he come become a national hero in politics too. 

        The security, peace, social harmony, political stability, economic development and education development should be some of the priorities of new political leadership. All type of violence and extremism should be immediately stopped for good. Today, in this modern world of digital technology and artificial intelligence there is no room for violence and extremism. No way, any violent group or militia groups could win in any arm struggle in this modern digital world of warfare and fighting. So, Pakistan badly needs peace and stability for its economic development and progress.  All religious groups must forget about their petty religious differences and cooperate with new government to establish peace and security to rebuild this nation.  Moreover, Pakistan must establish a good diplomatic relation with India, Afghanistan to boost its economic development.

            Pakistan has got many religious ideological groups and sects. I know well it would be a daunting task to make any meaningful unity among some of these groups and yet, to protect the greater interest of this nation, new government should make some new strategies to make some reconciliation between these groups. Moreover, Pakistan has got thousands of Arabic colleges and institutions. All these need some reformation and update if they want to see a real peace and harmony in Pakistan forever. Moreover, social equality, economic fairness and rules of law are some of important issues today in Pakistan. Poor people suffer a lot from landlords. That needs some radical change. 

      Pakistan has got a rich human potentiality with its rich human resource. Imran Khan should devote his political energy and leadership skills to enrich human resources of Pakistan population. In this modern world of technology this is not an impossible task.    It was a Pakistani economist who introduced the new concept of human development for UNDP. Dr Mahbub Ul-Haq is the archect of UNDP’s human development report. The first ever HDR was produced by Dr Mahbub Ul Haq in 1990. Had Pakistan benefited from his  human development concept since it was published in 1990. Pakistan would have made some dramatic change in human resource development. It is not too late for Imran Khan to follow the advice and guanines of Dr Mahbub on human development.

      The second largest Muslim country in the world should set some good example in politics and good governance. Imran khan is a good reader and a good intellectual as well. I’m fortunate enough to read some of his articles.  So, we could expect some radical changes in coming years. It is said that he has been greatly influenced by Ali Shariati and Allah Iqbal on social justice, political reform, education and moral values. So, we could expect that he introduces some political, economic and social reforms in Pakistan in line with Islamic social responsibility and social values.

         We hope and pray a successful political career for Imran Kahn and we pray a brighter and prosperous future for Pakistan. May Allah bless people of Pakistan with peace and prosperity.  

                          
             

அனஸ் அப்பாஸின் 'தேசிய சாதனை மடல்' புத்தக வெளியீட்டு விழா

கண்களுக்கு தெரியாத எத்தனையோ விடயங்களின் மிக முக்கியமான ஒரு விடயம் நமது நாட்டில் இருக்கும் இலைமறை காயாக இருக்கும் சாதனையாளர்கள். சமூகத்தில் ஒரு அந்தஸ்தில் இருக்கும் ஒரு சிலர் செய்யும் வேலைகளும் சேவைகளுமே எப்போதும் ஆவணப்படுத்தப்படுவதுண்டு. 

ஆனால் சகோதரர் அனஸ் அப்பாஸ் தேடிப் பிடித்து அப்படியான சாதனையாளர்களை மீள்பார்வை பத்திரிகையின் மூலம் அறிமுகம் செய்து வந்தார். அவ்வாறு அவர் அறிமுகம் செய்த பலரையும் ஒன்று சேர்த்து வரலாற்று ஆவணமாக எதிர்வரும் 07/08/2018 அன்று கொழும்பு -10 தபால் தலைமயக கேட்போர் கூடத்தில்  மாலை 05.00 மணிக்கு புத்தகமாக வெளியிட இருக்க்கின்றார். இவ்வாறான முயற்சிகள் கட்டாயம் நாம் வரவேற்று ஊக்கப்படுத்த வேண்டும்.

இந்த நிகழ்வில் சுயமாக முன்னேரிய பல முக்கிய பிரமுகர்கள், பிரபல  ஊடகவியலாளர்கள் இன்னும் பல முக்கிய நபர்கள் கலந்து சிறப்பிக்க உள்ளனர். இதற்கான உத்தியோகபூர்வ ஊடக அனுசரணை கெபிடல் FM, UTV ஆகியன வழங்க இருக்கின்றது. மிக முக்கியமான ஒரு புத்தக வெளியீடாக இது அமைந்திருக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. இந்த நிகழ்வு ஒரு வரலாற்றுப் பதிவாக அமையும் என எதிர்பாக்கப்படுகிறது.

- சிமாரா அலி-இலங்கையில் டுக் டுக் ஆரம்பம்

நிதி அமைச்சும் -சுற்றுலாத்துறை அமைச்சும் இணைந்து  இலங்கையில் சுற்றுலாத்துறையை மேம்படுத்தும் பொருட்டு  முதற்கட்டமாக கொழும்பில்   750 முச்சக்கர வண்டிகள் மற்றும் சாரதிகளுக்கு சுற்றுலாத்துறை அதிகார சபையினால் பயிற்சிஅளித்து அவா்களுக்குரிய சான்றிதழ் மற்றும் டுக்-டுக் எனும் சின்னம் வழங்கப்பட்டது. இந் நிகழ்வு நேற்று (30) காலிமுகத்திடலில் பிரதம மந்திரி ரணில் விக்கிரமசிங்க அமைச்சா்களான மங்களசமரவீர, ஜோன் அமரதுங்க, சாகலரத்னாயக்க, கொழும்பு மேயா்  ரோசி சேனாநாயக்க, இந்தியா மற்றும் யப்பாண் உயா் ஸ்தாணிகா்களும் கலந்து கொண்டனா். 

டுக் டுக் லோகோ கொண்டவா்கள் இலங்கைக்கு வரும் சுற்றுலாப் பிரயாணிகளை ஏற் றிச் சொல்லுதல் கொழும்பு    ஏனைய பகுதிகளுக்கு போக்குவரத்துச் சேவைகளை செய்வதற்கே இந்த வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளன. இவா்களது முச்சக்கர வண்டிகளில் வை-பை தொலைத்தொடா்பு வசதிகளும் செய்து கொடுக்கப்பட்டுள்ளன.  இத்துறையில்  முதற்கட்டமாக 750 முச்சக்கர வண்டிகள் சாரதிகள் கொழும்பில்  உல்லாசத் சேவைக்கு இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளன. இவ் முச்சக்கர வண்டிகள் கொழும்பில் உள்ள 5 நடசத்திர ஹோட்டல்கள் அருகே தரி்த்து நிற்கும்.  

இங்கு உரையாற்றிய நிதி ஊடக அமைச்சா் மங்கள சமர வீர தகவல் தருகையில் -
இலங்கையில் 13 இலட்சம் முச்சக்கர வண்டிகள் உள்ளன.அதில் 8 இலட்சம்  முச்சக்கரவண்டிகள் மக்கள் சேவைக்காக பாவிக்கப்படுகின்றன. அதல் கொழும்பில் மட்டும் 60ஆயிரம் முச்சக்கர வண்டிகள் பாவனையில் உள்ளன.  2020 ல் யப்பாண் இலங்கை கூட்டுத் தயாரிப்பில் இலங்கை முச்சக்கர மிண்சாரத்திலான முச்சக்கர வண்டிகள் உற்பத்தி செய்யப்படவுள்ளன. 

இலங்கையில் 3வது தேசிய வருமாணமாக சுற்றுலாத்துறை  விளங்குகின்றது. அதில 2017ல்21 இலட்சம் உல்லாச பிரயாணிகள் இலங்கை வந்துள்ளனா். 4 பில்லியன் ருபா வருமாணமாகக் கிடைத்து்ளளது. 2020  4.2 மில்லியன் உல்லாசபிரயாணிகள்  எதிா்பாா்க்கப்படுகின்றது. 7 பில்லியன் வருமாணம் பெறுவதற்காக சில முன்னெடுப்புக்களை செய்துள்ளோம்.  என அமைச்சா் மங்கள சமர வீர தெரிவித்தாா்.    

(அஷ்ரப் ஏ சமத்)

கண்டி - பதியுதீன் மஹ்மூத் மகளிர் கல்லூரிக்கு கிடைத்த விருது


கலைத்திட்ட அமுலாக்கம் தொடர்பாக பிரிட்டிஸ் கவுன்சில் நிறுவனம் நடத்தும் பாடசாலைகளுக்கிடையிலான சர்வதேச போட்டியில்  கண்டி பதியுதீன் மஹ்மூத் மகளிர் கல்லூரிக்கு இவ்வருட விருது கிடைத்துள்ளது. கல்லூரியால் சமர்ப்பிக்கப்படும் ஒன்பது செயற்திட்டங்களின் அடிப்படையில் இது வழங்கப்படுகிறது. மேற்படி கல்லூரி. இவ்விருதை மூன்றாவது முறையாகவும் பெற்றுக் கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. மேற்படி திட்டத்துடன் தொடர்பு பட்ட ஆசிரியர் குளுவினரை விருதுடன் காணலாம். 


மலேசியாவின் ஆர்வத்தை, நாங்கள் வரவேற்கிறாம் - றிசாத்


இலங்கையுடன் சுதந்திர வர்த்தக உடன்படிக்கையினை முன்னெடுத்துச்செல்லுவதற்கு மலேசியா தனது வலுவான ஆர்வத்தை வெளிப்படுத்தியுள்ளது. இதற்காக அவர்கள் மேற்கொள்ளும் ஆர்வத்தை நாங்கள் வரவேற்கிறோம். இத்தகைய உடன்பாடு இலங்கை-மலேசியாயாவுக்கிடையிலான வர்த்தகத்ததை ; பெருமளவில் அதிகரிக்கும்' என கைத்தொழில் மற்றும் வர்த்தகத்துறை அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார்.  

இலங்கைக்கும் மலேசியாவுக்குமிடையே 2013 ஆம்  ஆண்டு ஆரம்பிக்கப்பட்டு உடன்பாடு எட்டப்பட்டிருந்த  இரு நாடுகளுக்கும் இடையிலான சுதந்திர வர்த்தக உடன்படிக்கையினை முன்னெடுத்துச்செல்ல மலேசியா தனது வலுவான ஆர்வத்தை வெளிப்படுத்தியுள்ளதையடுத்து கோலாலம்பூரில்  மலேசியாவின் சர்வதேச வர்த்தக மற்றும் தொழில்துறை அமைச்சர்  டேரெல் லேக்கிங்க்கும் அமைச்சர் ரிஷாட் பதியுதீனுக்கும்  இடையே பேச்சுவார்த்தை இடம்பெற்றது. 

இப் பேச்சுவார்த்தையில்  அமைச்சர் ரிஷாட் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்: கோலாலம்பூரில் 2013 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம்  மலேசியாவில் இடம்பெற்ற கூட்டு ஆணைக்குழுவின் இரண்டாம் அமர்வின் போது இரு தரப்பினரும் இருதரப்பு வர்த்தகத்தை அதிகரிக்கும் நோக்கில் சுதந்திர வர்த்தக உடன்படிக்கையினை முன்னெடுத்து செல்ல, எதிர்கால சாத்தியங்களை ஆராய கொள்கை அடிப்படையில் உடன்பட்டனர். இந்த உடன்பாடுகளை முன்னெடுக்க மலேசியா முன்வந்துள்ளமை வரவேற்கத்தக்கது. இலங்கை வர்த்தக திணைக்களத்தின் புள்ளி விபரப்படி, 2013 ஆம் ஆண்டில் இருந்து ஐந்து வருட காலப்பகுதியில் (2013- 2017) இலங்கைக்கும் மலேசியாவிற்கும் இடையேயான இருதரப்பு வர்த்தகம் 20மூ சத வீத அதிகரிப்புடன்  693 மில்லியன் அமெரிக்க  டொலர் எட்டப்பட்டது. இவ்வருடம் ஜனவரி முதல் ஜுன் மாதம் வரையுள்ள ஆறு மாத காலப்பகுதியில் 361 மில்லியன் அமெரிக்க  டொலர் பெறுமதியான  வலுவான வர்த்தகம் பதியப்பட்டுள்ளது.

2017 ஆம் ஆண்டில் மலேசியாவில் இருந்து 92 சதவீதமான மொத்த வர்த்தகத்தில் 641 மில்லியன் டொலர் இறக்குமதி செய்யப்பட்டது. 2017 ஆம் ஆண்டில் இலங்கையின் ஏழாவது மிகப்பெரிய இறக்குமதி நாடாக மலேசியா காணப்பட்டது. மலேசியாவின் பிரதான இறக்குமதி (2017 ஆம் ஆண்டு) மரம், போர்ட்லேண்ட் சிமெந்து, பிளாஸ்டிக், பெற்றோல், செயற்கை ரப்பர் மற்றும் எரிவாயு எண்ணெய், டீசல் ஆகியவையும். மலேசியாவிற்கான இலங்கையின் பிரதான ஏற்றுமதியாக (2017 ஆம் ஆண்டு) உணவு தயாரிப்புக்கள், மெஸ்லின் மாவு, தேயிலை மற்றும் ஆடைவகைளும் காணப்பட்டன.

இரு நாடுகளுக்கும் இடையிலான முதலீடு மற்றும் வர்த்தக தொடர்புகளை மேலும் விரிவுபடுத்துதல் மற்றும் புதிய முயற்சிகள் மேம்படுத்தப்படவேண்டும். நமது அரசாங்கத்தின் கீழ் முக்கிய பொருளாதார சீர்திருத்தங்கள் திட்டமிடப்பட்டுள்ளன. இலங்கை-மலேசியா சுதந்திர வர்த்தக உடன்படிக்கையில் இதுவரை மேற்கொள்ளப்பட்ட ஆரம்ப நடவடிக்கைகள் விரைவில் முன்னெடுக்கப்படவேண்டும். இலங்கையுடன் சுதந்திர வர்த்தக உடன்படிக்கையினை முன்னெடுத்துச்செல்லுவதற்கு மலேசியா தனது வலுவான ஆர்வத்தை வெளிப்படுத்தியுள்ளது. இதற்காக அவர்கள் மேற்கொள்ளும் ஆர்வத்தை நாங்கள் வரவேற்கிறோம். இத்தகைய உடன்பாடு இலங்கை-மலேசியா  இடையிலான வர்த்தகம் பெருமளவில் அதிகரிக்கும். இலங்கையுடனான உடன்படிக்கையில் இரு நாடுகளும் முன்னுரையில் ஒப்புக்கொண்டது  தொடர்பிலும் இருதரப்பில் மத்தியில் காணப்படும் ஆர்வத்தினை எமது ஐனாதிபதிக்கும், பிரதமருக்கும் அறிவிக்கவுள்ளேன்.

மலேசியாவில் எங்களுடைய சிறிய மற்றும் நடுத்தர கைத்தொழிற்துறையினருக்கு  பயிற்சி வாய்ப்புகள் உள்ளன என்பதை நாங்கள் புரிந்து கொண்டுள்ளோம். இத்துறையினருக்கு இது போன்ற வாய்ப்புகளை வழங்குவதற்காக நாங்கள் நன்றியுள்ளவர்களாக இருக்கிறோம். இலங்கையில் முதலீடு மற்றும் வர்த்தக சாத்தியங்களை ஆராய மலேசிய அதிகாரிகள் மற்றும் தனியார் துறையினரை நாங்கள் வரவேற்கின்றோம். என்று அமைச்சர் தெரிவித்தார். 

மலேசியா கோலாலம்பூரில் இடம்பெற்ற இந்த பேச்சுவார்த்தையில் அமைச்சர் ரிஷாட் பதியுதீனுடன் இலங்கைக்கான மலேசியா உயர் ஸ்தானிகர் ஏ.ஜே.எம். முஸம்மில் மற்றும் இலங்கை வர்த்தக திணைக்களத்தின் அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.

வடகிழக்கில் உடனடியாக 25,000 வீடுகளை நிர்மாணிக்க தீர்மானம்

வடக்கு, கிழக்கில் 50,000 வீடுகளை நிர்மாணிக்கும் வேலைத்திட்டத்தின் கீழ், 25,000 வீடுகளின் நிர்மாணப்பணிகளை அடுத்த மாதத்திலிருந்து (ஓகஸ்டில்) ஆரம்பிக்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.

அதேநேரம், மேலும் 10,000 வீடுகளின் நிர்மாணப் பணிகள் அடுத்த ஆண்டு (2019) ஜனவரி மாதம் ஆரம்பிப்பதற்கும் அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

இதேவேளை, 1847 கி.மீ. தூர பாதை அபிவிருத்தி செய்யப்படவுள்ளதுடன், யாழ்ப்பாணம், மயிலிட்டி மீன்பிடித்துறைமுகத்தின் அபிவிருத்திப் பணிகளையும் ஆரம்பிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

வாழைச்சேனை கடதாசி ஆலை, அம்பாறை சீனித்தொழிற்சாலை, நெல் ஆலை ஆகியவற்றை மீண்டும் ஆரம்பிக்கவும் அரசாங்கம் முடிவு செய்துள்ளது. வடக்கு, கிழக்கு மாகாணங்களில் முன்னெடுக்கப்படும் அபிவிருத்தி வேலைத்திட்டங்களை துரிதப்படுத்தும் நோக்கில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் நியமிக்கப்பட்ட விசேட ஜனாதிபதி செயலணி நேற்று (30) ஜனாதிபதி தலைமையில் முதற் தடவையாகக் கூடியது.

இந்த அபிவிருத்தி வேலைத்திட்டங்களை முறையாகவும் வினைத்திறனாகவும் மேற்கொண்டு மக்களுக்கு துரித நன்மைகளை பெற்றுக்கொடுக்க வேண்டுமென ஜனாதிபதி இதன்போது வலியுறுத்தினார்.

வடக்கு, கிழக்கு மக்களின் வாழ்க்கையை மீளக்கட்டியெழுப்பவும் உட்கட்டமைப்பு வசதிகளை அபிவிருத்தி செய்யவும் அரசாங்கத்தினால் கடந்த மூன்றரை வருட காலத்திற்குள் பாரிய பங்களிப்பு வழங்கப்பட்டுள்ள போதிலும் அது தொடர்பில் மக்களுக்கு போதியளவு புரிந்துணர்வு கிடைக்கப்பெறவில்லையென ஜனாதிபதி இதன்போது தெரிவித்தார்.

மக்களிடையே தேசிய நல்லிணக்கத்தையும் சகவாழ்வையும் கட்டியெழுப்புவதற்காக அரசாங்கம் முன்னெடுத்துவரும் வேலைத்திட்டத்திற்கு சாதகமான பெறுபேறு கிடைத்துள்ளதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார்.

26 வருட யுத்தம் காரணமாக வடக்கு, கிழக்குமாகாணங்களில் தடைப்பட்டுள்ள அபிவிருத்தி செயற்பாடுகளையும் பின்னடைவுக்குள்ளாகியுள்ள மக்களின் வாழ்க்கையையும் மீண்டும் கட்டியெழுப்பி நாட்டின் ஏனைய மாகாணங்களைப் போன்றே அவ்விரு மாகாணங்களிலும் அபிவிருத்தியை ஏற்படுத்த அரசாங்கம் முன்னுரிமையளித்து செயற்படுவதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.

பகிடி வதைக்கு 10 வருட கடூழிய சிறை, ஞாபகமூட்டுகிறார் விஜயதாச

பகிடிவதைகளில் ஈடுபடும் சகல பல்கலைக்கழக மாணவர்களுக்கும் மஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் பிணை வழங்குவதற்கு சட்டத்தில் இடம் வழங்கப்படவில்லையெனவும், குற்றவாளியாக அடையாளம் காணப்பட்ட ஒருவருக்கு 10 வருட கடூழியச் சிறைத்தண்டனை விதிக்க முடியும் எனவும் உயர்கல்வி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ தெரிவித்தார்.

பல்கலைக்கழகங்களில் பகிடிவதையில் ஈடுபடுபவர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுப்பது தொடர்பில் சட்டத்தில் தெளிவாகக் குறிப்பிடப்பட்டிருப்பதாகவும் இவ்வாறான சம்பவங்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்குமாறும் சகல பொலிஸ் நிலையங்களுக்கும் அறிவித்தல் விடுத்துள்ளதாகவும் அமைச்சர் கூறினார்.

கல்வி நிறுவனங்களில் பகிடிவதைகள் மற்றும் ஏனைய வன்முறைகளிலிருந்து பாதுகாப்பது தொடர்பான 1998 ஆண்டு 20ஆம் இலக்க சட்டத்தின் கீழ் இந்த உத்தரவைப் பிறப்பித்திருப்பதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.

பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவில் நேற்றுய(30) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும்போதே அமைச்சர் விஜயதாச ராஜபக்‌ஷ இந்த விடயங்களைக் குறிப்பிட்டார்.

பகிடிவதைக்கு எதிரான சட்டம் இதுவரை முழுமையாக நடைமுறைப்படுத்தப்படவில்லை. தற்பொழுது இதனை முழுமையாக நடைமுறைப்படுத்தியுள்ளோம். இந்தச் சட்டத்துக்கு எதிராக நடந்துகொள்ளும் பல்கலைக்கழக மாணவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறு பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு, சகல பல்கலைக்கழக உபவேந்தர்கள் மற்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஆகியோருக்கு பணிப்புரை விடுக்கப்பட்டிருப்பதாகவும் அமைச்சர் மேலும் கூறினார்.

"பள்ளிவாசல்களை பாதுகாக்க, முன்வருமாறு கோரிக்கை"

முஸ்­லிம்கள் இந்­நாட்டில் மூன்றாம் பெரும்­பான்­மை­யி­ன­ராக வாழ்­கின்­றார்கள். இவர்­களும் நீண்ட வர­லாற்றைக் கொண்­ட­வர்கள். அவர்கள் இந்­நாட்டின் பூர்­வீகக் குடிகள். ஆரம்­ப­காலம் தொட்டு அர­சியல் செல்­வாக்­கு­மிக்­க­வர்கள். பல்­லின சமூகம் வாழும் இலங்­கையில் முஸ்­லிம்கள் அர­சியல், பொரு­ளா­தாரம், கலை, பாது­காப்பு, போராட்டம், இறைமை போன்ற பல்­வேறு விட­யங்­களில் நாட்­டுக்கு அளப்­ப­ரிய பங்­க­ளிப்­புக்­களை வழங்கி வரு­கின்­றார்கள்.

அரே­பிய வர்த்­த­கர்கள் சென்ற இடங்­க­ளி­லெல்லாம் தமது குடி­யி­ருப்­புக்­க­ளையும், வர்த்­தக கேந்­திர நிலை­யங்­க­ளையும் விஷே­ட­மாக துறை­மு­கங்­களை அண்­மித்த பிர­தே­சங்­களில் அமைத்­துக்­கொள்ளப் பின்­வாங்­க­வில்லை. துறை­மு­கங்­களை அண்­மித்த பிர­தே­சங்கள் வியா­பா­ரிகள் தமது கப்­பல்­களை நிறுத்தி வைக்­கவும் அவற்றை திருத்­திக்­கொள்­ளவும் ஏது­வாக அமைந்­தது.

காலப்­போக்கில் முஸ்­லிம்கள், மன்­னர்­க­ளுடன் மிக நெருக்கம் கொண்டு அவர்கள் அரச சபையில் அங்­கத்­த­வர்­க­ளாக நிய­மிக்­கப்­பட்­டார்கள்.  சிங்­கள மன்­னர்­களின் நன்­ம­திப்பைப் பெற்று அம்­மன்னர்;களின் ஆட்­சிக்கு பக்­க­ப­ல­மா­கவும், படை வீரர்­க­ளா­கவும், வைத்­தி­யர்­க­ளா­கவும், சமையல் செய்­ப­வர்­க­ளா­கவும், பொரு­ளா­தார உத­வி­களை வழங்­கு­ப­வர்­க­ளா­கவும் வாழ்ந்து வந்த முஸ்­லிம்­க­ளுக்கு சிங்­கள உயர் குலப் பெண்­களை மணம் முடித்துக் கொடுத்து முஸ்­லிம்­க­ளாக வாழ அனு­ம­தியும் நில­பு­லங்­களும் வழங்கி கௌர­வித்த வர­லா­றுகள் ஏராளம் இருக்­கின்­றன.

மேலும், முஸ்­லிம்கள் நாடு­க­ளுக்­கி­டையில் சமா­தானம் பேணும் சமா­தானம் விரும்­பி­க­ளா­கவும் செயற்­பட்­டார்கள். அதனால் வெளி­நா­டு­களில் முஸ்­லிம்கள் இலங்­கைக்­கான பிர­தி­நி­தி­க­ளாக கலந்­து­கொள்ளும் சந்­தர்ப்­பங்கள் வழங்­கப்­பட்­டன.

இவ்­வா­றாக உயர்­ப­த­வி­களை முஸ்­லிம்கள் பெற்­றுக்­கொள்ள அவர்­க­ளிடம் நாடு­பி­டிக்கும் எண்ணம் கொண்­டி­ரா­மையும் மற்­று­மொரு கார­ண­மாக இருந்­தது எனலாம்.

நாம் அறி­யப்­ப­டாத முஸ்­லிம்கள் பற்­றிய பல தக­வல்கள் பதி­யப்­ப­டாமை கார­ண­மாக அவை அழிந்­தொ­ழிந்து போய் விடு­கின்­றன. இன்று எமது சமூகம் தொடர்­பான எத்­த­னையோ தக­வல்கள் பெற்­றுக்­கொள்ள முடி­யா­த­வாறு இருக்­கின்­றன. இவற்றை ஒழுங்­க­மைத்து பதிவு செய்­வது யார் பொறுப்பு என்ற கேள்வி அக்­க­றை­கொண்ட ஒவ்­வொ­ரு­வ­ருக்­குள்ளும் எழுந்­துள்­ளது.

இலங்கை முஸ்­லிம்­களின் வர­லாறு குறித்து பல்­வேறு அபிப்­பி­ராயங்கள் நில­வி­வரும் காலம் இது. முஸ்­லிம்­களை நிந்­தித்­து­வரும் பொது­ப­ல­சேனா, ராவணா பலய, மக­சேன பல­காய போன்ற அமைப்­பினர் முஸ்­லிம்­க­ளுக்கு நீண்ட வர­லாறு இந்­நாட்டில் இல்லை. அவர்கள் கள்ளத் தோணிகள், முஸ்­லிம்கள் இந்­நாட்டின் பூர்­வீகக் குடி­க­ளல்ல என்ற கருத்­துக்­களை சிங்­கள மக்கள் மத்­தியில் விதைத்து வரு­கின்­றமை கவ­னிக்­கத்­தக்­கவையாகும்.

ஒரு சமூ­கத்தின் அர­சியல் உரி­மை­களை தகர்த்­தெ­றி­வ­தற்­காக அச்­ச­மூ­கத்தின் வாழ்­வா­தா­ரங்­களை அழித்து, பொரு­ளா­தா­ரத்தை முடக்கி உள­வியல் தாக்­கங்­களை ஏற்­ப­டுத்தி இந்­நாட்டில் அவர்­களின் எதிர்­கா­லத்தை அச்­சம்­கொண்டு சிறைப்­பி­டிக்க பேரி­ன­வாத குழுக்கள் மேற்­கொள்ளும் செயற்­பா­டா­கவே முஸ்­லிம்கள் மீது அண்­மையில் அளுத்­கமை முதல் திகன வரை­யாக அவர்­க­ளினால் கட்­ட­விழ்த்­து­வி­டப்­பட்ட கல­வ­ரங்­களின் மூலம் பெற்­றுக்­கொண்ட அனு­ப­வங்­களை கொள்­ளலாம்.

இலங்­கையில் கொதி­நிலை இன­வாதப் போக்­கு­களால் முஸ்­லிம்கள் வர­லாறு நெடு­கிலும் இரை­யாகி வரு­கின்­றார்கள். இச்­சம்­பவங்­களின் போது தமது வர­லாற்றை திரும்பிப் பார்க்கும் அசை­வுகள் மேற்­கொள்­ளப்­ப­டு­கின்­றன.

முஸ்­லிம்­களில் வர­லாற்­றுத்­துறை ஆய்­வா­ளர்கள் ஓரி­ரு­வர்­களை கொண்­டுள்­ளமை, தொல்­லியல் ஆய்­வாளர் எவ­ரையும் கொண்­டி­ராமை இச்­ச­மூ­கத்தின் துர­திஷ்டம் எனலாம். இந்­நிலை உலக அளவில் ஏற்றுக் கொள்­ளப்­பட்ட வர­லாற்­றா­சி­ரி­யர்­களின் நூல்­களை அடிப்­படை மூலா­தா­ரமாகக் கொண்டு முஸ்லிம் தேசத்தை விஞ்­ஞான ரீதியில் நிறு­விய வர­லாறு ஆவ­ணப்­ப­டுத்­தப்­ப­டா­மைக்கு பிர­தான கார­ணி­யெ­னலாம்.

முதலில், வர­லாறு தொடர்­பான அவ­சி­யத்தை இலங்கை முஸ்­லிம்கள் உணர்ந்­து­கொள்ள வேண்டும். வர­லாறு பேசு­வ­தையோ, எழு­து­வ­தையோ, படிப்­ப­தையோ அதி­க­மானோர் விரும்­பு­வ­தில்லை. இவர்கள் அர­சி­யலில் ஆர்வம், ஆத்­மீக அதீத பற்று போன்­றவை மீது கூடுதல் கவனம் செலுத்தி வரு­கின்­றனர்.

வர­லாறு நெடு­கிலும் தமது சமூ­கத்தின் அதி­கார இருப்­புக்கு அர­சியல் ரீதி­யா­கவும், ஆத்­மீக ரீதி­யா­கவும் முரண்­பட்டு விவா­தித்­துக்­கொள்ள விரய­மாக்கும் சக்­தி­களும், வளங்­களும் எமது பாரம்­ப­ரி­யங்­களை பாது­காப்­ப­தற்­கான குழுக்­களோ, குரல்­களோ வெளியில் தோன்­ற­வில்லை.

இலங்கை முஸ்­லிம்கள் தொன்­மை­வாய்ந்த பள்­ளி­வா­சல்கள் பல இடித்து நொருக்­கப்­பட்­டு­விட்ட பின்­னரும் ஆயிரம் வரு­ட­கால வர­லாற்று சான்­று­கூறும் சில பள்­ளி­வா­சல்கள் காணப்­ப­டு­கின்­றமை ஓர் அதிஷ்டம் எனலாம். அவற்றின் பெறு­மா­னங்கள் உணர்த்­தப்­பட்டு பாது­காக்­கப்­ப­டு­வது மிக முக்­கி­ய­மா­ன­தாகும்.

அந்­த­வ­கையில் இலங்­கையின் நிரு­வாக மாவட்­டங்­களில் மொன­ரா­கல மாவட்டம் கூடிய நிலப்­ப­ரப்­பையும் குறைந்த சனத்­தொ­கை­யையும் கொண்­ட­தா­கவும் காணப்­ப­டு­கின்­றது. கடந்த 2012ஆம் ஆண்­டின் குடி­சன மதிப்­பீட்டின் பிர­காரம் இம்­மா­வட்­டத்தில் 448,142 மக்கள் வாழ்ந்து வரு­கின்­றார்கள்.

இச்­ச­னத்­தொ­கையில் பெரும்­பான்­மை­யி­ன­ராக 423,972 பேர் சிங்­க­ள­வர்­களும், இலங்கைத் தமி­ழர்கள் 9783பேரும், இந்­தியத் தமி­ழர்கள் 4590 பேரும், இலங்கை முஸ்­லிம்கள் 9552 பேரும், பேகர் 109 பேரும், மலே 46 பேரும் ஏனையேர் 90 பேரும் வாழ்­கின்­றார்கள்.

இலங்­கையை பிரித்­தா­னிய ஏகா­தி­பத்­தி­ய­வா­திகள் கைப்­பற்றும் போது அவர்­களை எதிர்த்து நாட்டின் இறை­மையை பாது­காக்கப் போரா­டிய எஹ­ல­பொல, வீர­புரன் அப்பு, ரட்­டே­நாள போன்ற தியா­கிகள் வாழ்ந்த பிர­தேசம் இம்­மா­வட்­ட­மாகும்.

அதேபோல் உண­வுற்­பத்­தியை அதி­க­ரிக்கும் நோக்கில் இரண்டு இலட்சம் ஏக்கர் நிலத்தில் நெற்­பயிர் செய்­யப்­பட்டு வர­லாற்று சாத­னை­பு­ரிந்த பெருமை இம்­மா­வட்­டத்­துக்­கு­ரி­யதே. இக்­கா­ர­ணத்­தி­னா­லேயே இம்­மா­வட்டம் வெல்­லஸ்ஸ என்­ற­ழைக்­கப்­பட்­டது.

மொன­ரா­கல மாவட்­டத்தில் வாழும் 9552 முஸ்­லிம்­களில் 60 வீத­மான 4950 முஸ்­லிம்கள் வாழும் பிர­தேச செய­லக பிரி­வாக மெத­கம திகழ்­கின்­றது.

மெத­கம பிர­தேச செய­லக பிரி­வினுள் முஸ்­லிம்கள் அதிகம் வாழும் பெரிய கிரா­ம­மாக பகி­னி­க­ஹ­வெல விளங்­கு­கின்­றது. இக்­கி­ராமம் மொன­ரா­கல - பிபிலை பிர­தான வீதியில் சுமார் 20 கிலோ­மீற்றர் தூரத்தில் அமைந்­துள்­ளது.

இக்­கி­ரா­மத்தின் எல்­லை­க­ளாக வடக்கே மெத­க­மவும், தெற்கே மெற­க­ஹ­மட, கிழக்கே புப்­ப­ரயும், மேற்கே பொல்­க­ஹ­பி­டி­யையும் கொண்­ட­தாக அமைந்­துள்­ளது. இங்கு சுமார் 720 குடும்­பங்கள் வாழ்ந்து வரு­கின்­றன.

இக்­கி­ரா­மத்தின் தொன்­மை­யையும் இலங்கை முஸ்­லிம்­களின் வர­லாற்­றி­னையும் எடுத்­துக்­கூறும் சான்­றா­தா­ர­மாக இங்­குள்ள பழைய ஜும்ஆ பள்­ளி­வாசல் திகழ்­கின்­றது.

சுமார் 800 வரு­டங்கள் பழைமை வாய்ந்த இப்­பள்­ளி­வாசல் சவூதி அரே­பி­யா­வைச்­சேர்ந்த அலி மௌலானா என்­ப­வரால் கட்­டப்­பட்­ட­தாக அக்­கி­ரா­ம­வா­சி­களின் வாய்­வ­ழி­வந்த சான்­று­க­ளாகும்.

இப்­பள்­ளி­வாசல் நிர்­மா­ணத்­தின்­போது கற்கள், சீமெந்­துகள் பயன்­ப­டுத்­து­வ­தற்குப் பதி­லாக முட்டை, பாணி, சுண்­ணாம்பு போன்ற கலவை பயன்­ப­டுத்­தப்­பட்­டுள்­ள­தாகத் தெரி­ய­வ­ரு­கின்­றது. இக்­க­ல­வையின் உறு­தித்­தன்­மை­யினால் இன்­று­வரை இப்­பள்­ளி­வாசல் சிதை­வு­றாமல் காணப்­ப­டு­கின்­றது.

இப்­பள்­ளி­வா­சலை மெரு­கூட்­டு­வ­தற்­காக சுமார் ஒரு அடியில் அமைக்­கப்­பட்­டுள்ள கொங்றீட் அற்ற வளை­வு­க­ளுடன் கூடிய புரா­தன கட்­டிடக் கலை பார்ப்­போரை அதிர்ச்­சிக்­குள்­ளாக்கும் வகையில் காணப்­ப­டு­கின்­றது.

மேலும் இப்­பள்­ளி­வா­சலின் முன்னால் காணப்­படும் திண்ணை, இரு­ம­ருங்­கி­லு­முள்ள விறாந்­தைகள், உள்­பள்­ளி­வாசல், மிம்பர், கத­வுகள், நிலைகள் போன்­றன எமது புரா­தன கட்­டடக் கலையின் எச்­சங்­க­ளாக மிளிர்­கின்­றன.

கடந்த சில வரு­டங்­க­ளுக்கு முன்னர் இப்­பள்­ளி­வா­சலை இலங்கை தொல்­பொருட் திணைக்­க­ளத்­தினர் பார்­வை­யிட்டு இதன் காலத்தை உறு­திப்­ப­டுத்­தி­யுள்­ளனர். இதன்­போது இப்­பள்­ளி­வா­சலை தொல்­பொருள் திணைக்­க­ளத்தின் பரா­ம­ரிப்­புப்­புக்கு அவர்கள் கேட்­ட­போது  அதனை கிரா­மத்­த­வர்கள் மறுத்­து­விட்­டனர்.

இப்­பள்­ளி­வாசல் இன்­று­வரை உடைக்­காமல் பாது­காக்­கப்­பட்டு வரு­கின்­றது. தற்­கால சனத்­தொகைப் பெருக்­கத்தை ஈடு­செய்ய ஊரில் புதிய ஜும்ஆ பள்­ளி­வாசல் நிர்­மா­ணிக்­கப்­பட்­டுள்­ளது.

மெத­கம கொட்­டப்­பேவ கிரா­மத்தில் இப்­பள்­ளி­வா­சலின் வய­தை­யொத்த           பள்­ளி­வா­சல் சில திருத்­தங்கள் செய்­யப்­பட்டு பாது­காக்­கப்­ப­டு­கின்­றன. அத்­தோடு புரா­தன காலத்தில் வுளூ செய்­வ­தற்­கென மழை­நீரை தேக்கி வைப்­ப­தற்­காக கற்­பா­றையை குடைந்து நீர் தேக்கி வைக்கும் வகையில் செய்­யப்­பட்ட 'ஹெளளு' ஒன்றும் காணப்­ப­டு­கின்­றது.

இவ்­விரு பள்­ளி­வா­சலின் வய­துடன் ஒத்­த­தான மொன­றா­கல மாவட்­டத்தின் அழுப்­பொத்தே என்னும் கிரா­மத்தில் இன்­னு­மொரு பள்­ளி­வாசல் காணப்­பட்­டது. அப்­ப­ள­்ளி­வாசல் புனர்­நிர்­மாணம் என்ற பெயரில் நிர்­மூ­ல­மாக்­கப்­பட்­டு­விட்­டது.

உலகில் இஸ்லாம் பரவ ஆரம்பமான நாள் முதல் முஸ்லிம்கள் தமது வணக்க வழிபாடுகளை மேற்கொள்வதற்கான ஒரு பள்ளிவாசலை அமைக்கத் தவறியிருக்க மாட்டார்கள். இவ்வாறாக இலங்கையில் பரந்து வாழும் முஸ்லிம்களும் தமக்கென ஒரு பள்ளிவாசலை நிச்சயமாக அமைத்திருப்பர். இவ்வாறு அமைக்கப்பட்ட பள்ளிவாசல்கள் காலத்தின் நவீனத்திற்கேற்ப புனரமைப்பு, விஸ்தரிப்பு என்ற அடிப்படையில் அவை இருந்த தடயம் அற்றுவிட்டன. இவற்றை நாம் பாதுகாக்க முனைந்திருப்போமேயானால் இன்று எமது தொன்மையும், வரலாறுகளும் உறுதிசெய்யப்பட்டிருக்கும்.

July 30, 2018

டுபாயில் உள்ள, இலங்கையர்களின் கவனத்திற்கு

ஐக்கிய அரபு இராச்சியத்தில் வீசா இன்றி தங்கியிருக்கும் இலங்கை பணியாளர்களுக்கு மீண்டும் நாடு திரும்புவதற்கு அந்த நாட்டு அரசாங்கம் எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் முதலாம் திகதி வரை கால அவகாசத்தை வழங்கியுள்ளது.

எதுவித தண்டப்பணமும் இல்லாமல் நாடு திரும்புவதற்கே இந்த கால அவகாசத்தை ஐக்கிய அரபு இராச்சியம் வழங்கியுள்ளது.

இதேவேளை காலாவதியான கடவுச்சீட்டுகளை கொண்டவர்கள் டுபாயிலுள்ள தூதரக காரியாலத்தின் மூலம் புதிய கடவுச்சீட்டுகளுக்கு விண்ணப்பிக்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கைக்கு புதிதாக A-321neo விமானம் -இன்று சர்வமத வழிபாடுகளுடன் சேவையில் இணைப்பு


இலங்கை விமான சேவையில், புதிதாக சேவையில் ஈடுபடுத்தும் பொருட்டு இன்று (30), புதிய விமானம் ஒன்று சேவையில் இணைத்துக் கொள்ளப்பட்டது.

சர்வமத வழிபாடுகளை தொடர்ந்து, எயார் பஸ் நிறுவனத்தின், ​ஜேர்மன் ஹெம்பர்க் தொழிற்சாலையினால் உற்பத்தி செய்யப்பட்ட, A-321neo ரக விமானமே இவ்வாறு சேவையில் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளது.

எரிபொருள் மற்றும் காற்று எதிர்ப்பைக் குறைத்து பறக்கக்கூடிய வகையில் புதிய நிர்மாணிப்பதாக இது தயாரிக்கப்பட்டுள்ளது.

இதன் நீளம் 146 அடியும், இறக்கைகள் 117.5 அடியையும் கொண்டுள்ளதுடன், உயரம் 37.7 அடியென தெரிவிக்கப்படுகிறது.

 சுமார் 176 பயணிகளும், 6 விமான சேவை பணியாளர்களும் இதில் பயணம் செய்யக்கூடியவாறு வசதிகள் செய்யப்பட்டுள்ளன.

குறித்த விமானம் நேற்று (29), கட்டுநாயக்க விமான நிலையத்துக்கு கொண்டுவரப்பட்டு பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டது.

இந்த விமானத்தை, சுமார் 3 மணித்தியாலங்களில் பயணம் செய்யக்கூடிய சீனா, டுபாய் போற்ற நாடுகளுக்கு பயணம் செய்வதற்காக பயன்படுத்த உள்ளதாக, இலங்கை விமான சேவைகள் ஊடகப் பேச்சாளர் தீபால் பெரரா தெரிவித்துள்ளார்.  

எனது முயற்சி முஸ்லிம் சமூகத்திற்கு, பயனுள்ளதாக அமைய வேண்டும் - மிலிந்த மொரகொட


இன்று -30- காலை முன்னால் நீதியமைச்சர் மிலிந்த மொரகொட அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவிற்கு வருகை தந்து உலமா சபையின் தலைவர், செயலாளர் உற்பட மற்றும் பல உலமாக்களையும் சந்தித்தார். 

அவ்வமையம் “புதியதோர் தலைமுறைக்கான நவீன சிந்தனை” என்ற நிகழ்சி நிரல் தொடர்பான தகவல்களை கையளித்தார். அங்கு நடைபெற்ற கலந்துரையாடலின் போது தாம் நீதியமைச்சராக இருந்த சமயம் மேற் கொண்ட நற்காரியமாக முஸ்லிம் விவாக, விவாக ரத்து சட்ட மீள் பரிசோதனைக்காக குழுவொன்றை நியமிக்க கிடைத்ததை நினைவு கூர்ந்தார். தம் பதவி காலத்தில் பல குழுக்களை நியமித்த போதும் முஸ்லிம் விவாக, விவாக ரத்திற்கான குழுவை நியமிப்பதில் எனக்குத் தேவையான வழிகாட்டல்களை சட்டத்தரணி பாயிஸ் முஸ்தபா அவர்களே வழங்கினார்கள். அன்னாரை அக்குழுவின் தலைவராக இருந்து செயற்படுமாறு தான் வேண்டிக் கொண்ட போதிலும் பாயிஸ் முஸ்தபா அவர்கள் பெருந்தன்மையோடு நீதியரசர் சலீம் மர்சூப் அவர்களை சிபாரிசு செய்தார்கள்.

முஸ்லிம் விவாக விவாக ரத்து சட்டம் என்பது முஸ்லிம்களுக்கு மிகவும் இன்றியமையாத ஒன்று மாத்திரமல்லாமல் அதில் மாற்றங்கள் தேவையென்று நீண்ட காலமாக வேண்டுகோள் விடுக்கப்பட்டது. அதனடிப்படையிலே உலமா சபைத் தலைவர் முப்தி ரிஸ்வி அதன் செயலாளர் அஷ்-ஷைக் முபாறக் ஆகியோரை உள்ளடக்கிய குழுவை நான் தேர்ந்தெடுத்தேன். ஏனெனில் முஸ்லிம்களின் சன்மார்க்க விடயங்களை ஆராய்ந்து தீர்வு காணும் அறிவும், திறமையும் சன்மார்க்க அறிஞர்களுக்கே உள்ளது. ஆகையால் அவர்களது கருத்துக்களை உள்ளடக்கிய அறிக்கை கவனத்தில் கொள்ளப்பட வேண்டுமென நான் நீதியமைச்சருக்கு சிபாரிசு செய்கின்றேன். எனது முயற்சி முஸ்லிம் சமூகத்திற்கு பயனுள்ளதாக அமைய வேண்டுமென எதிர்பார்க்கின்றேன் என்று கூறினார்.

முன்னால் நீதியமைச்சராக இருந்த போதிலும் தற்சமயம் இந்நாட்டின் சாதாரண பிறஜை என்ற வகையில் சன்மார்க்க அறிஞர்கள் சமர்ப்பித்த அறிக்கை கவனத்தில் கொள்ளப்படும் என நம்புகின்றேன் என்றும் குறிப்பிட்டார். இறுதியில் உலமா சபைக்கு வருகை தந்த மிலிந்த மொரகொட அவர்களுக்கு தலைவர் முப்தி எம்.ஐ.எம் ரிஸ்வி அவர்கள் நன்றி தெரிவித்தார்கள்.

ஊடகப்பிரிவு

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா

கொழும்பு பெரிய பள்­ளி­வா­சலின் அசமந்தம் - மாளிகாவத்தை மையவாடி காணி பறிபோகுமா..?

காணியை அப­க­ரித்து சட்­ட­வி­ரோ­த­மாக மாடிக்­கட்­டிடம் ஒன்று நிர்­மா­ணிக்­கப்­பட்டு வருவ­தற்கு ஜய­சிங்க என்­ப­வ­ருக்கு எதிராக கொழும்பு மாவட்ட நீதி­மன்றில் தாக்கல் செய்யப்­பட்­டுள்ள வழக்கில் நீதி­மன்றம் மைய­வா­டிக்குச் சொந்தமான காணியை நில­அ­ள­வீடு செய்துள்ளது.

நீதி­மன்றின் உத்தரவுக்கமைய  நில­ அள­வையாளர் ராசப்பா­வினால் கடந்த புதன்­கி­ழ­மையும், சனிக்­கி­ழ­மையும் காணி நில அள­வீடு செய்­யப்­பட்­டது. இந்த வழக்­கினை 2012 ஆம் ஆண்டு முஸ்லிம் மத உரி­மை­களைப் பாது­காக்கும் அமைப்பு தாக்கல் செய்­தி­ருந்­துள்­ளமை குறிப்­பி­டத்­தக்­க­தாகும்.

மாளி­கா­வத்தை முஸ்லிம் மைய­வாடி காணி அப­க­ரிப்­புக்கு எதி­ராக 2004 ஆம் ஆண்டு வழக்­கொன்று தாக்கல் செய்­யப்­பட்­டி­ருந்­ததும் பெரி­ய­பள்­ளி­வாசல் நிர்­வா­கிகள் வழக்கில் ஆஜ­ரா­காத கார­ணத்­தினால் 2008 ஆம் ஆண்டு வழக்கு நிறுத்­தப்­பட்­டது.

இத­னை­ய­டுத்து 2012 ஆம் ஆண்டு முஸ்லிம் மத உரி­மை­களைப் பாதுகாக்கும் அமைப்பு வழக்கினைத் தாக்கல் செய்ததாக அவ் அமைப்பின் தலைவர் அஸ்லம் ஒத்மான் தெரிவித்தார்.

முன்னாள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபயவின் அனுமதியுடனே கொழும்பு பெரிய பள்­ளி­வா­சலின் நிர்­வா­கத்தின் கீழ் இருக்கும் மாளி­கா­வத்தை மைய­வாடி காணியில் சட்டவிரோத கட்டிடத்தை ஜய­சிங்க என்பவர் நிர்மாணித்ததாக ஏற்கனவே தகவல்கள் வெளியானைமை  இங்கு குறிப்பிடத்தக்கது.

கருணாநிதிக்கு,ஜனாதிபதி மைத்திரி கடிதம் அனுப்பிவைப்பு

தமிழக முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதியின் உடல்நலம் குறித்து கேட்டறிய தமிழகம் சென்றுள்ள அமைச்சர் ஆறுமுகம் தொண்டமான் இலங்கை ஜனாதிபதியின் வாழ்த்து கடிதத்தையும் திராவிட முன்னேற்றக் கழக செயல் தலைவர் ஸ்டாலினிடம் வழங்கினர்.

காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள திராவிட முன்னேற்றக் கழக கலைஞர் கருணாநிதியை தமிழக அரசியல் தலைவர்கள் பலரும் நலம் விசாரித்து வரும் நிலையில் இலங்கை தொழிலாளர் காங்ரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமானஆறுமுகன் தொண்டமான் மற்றும் அவரது மகன் அமைச்சர் செந்தில் தொண்டமான் ஆகியோர் காவேரி மருத்துவமனைக்கு சென்றுள்ளனர்.

கருணாநிதியின் உடல்நலம் குறித்து ஸ்டாலினிடம் அவர்கள் கேட்டறிந்தனர். இதன்போது இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன எழுதிய வாழ்த்து கடிதத்தையும் அவர்கள் ஸ்டாலினிடம் கொடுத்தனர்.

உலகத் தமிழர்களின் தலைவரான கருணாநிதி விரைவில் நலம் பெற வேண்டி இறைவனிடம் பிரார்த்திக்கிறோம் என ஆறுமுகம் தொண்டமான் செய்திகள் மத்தியில் குறிப்பிட்டார்.

ராஜபக்சவினரிடம் அதிகார போட்டி, பிரதமராகும் மகிந்தவின் கனவு தகர்ந்தது

எதிர்வரும் 2020 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் தொடர்பில் ராஜபக்ச சகோதரர்கள் இடையில், ஏற்பட்டுள்ள அதிகார போட்டி குறித்து வெறுப்படைந்துள்ள ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியினர், மீண்டும் சுதந்திரக்கட்சியில் இணைந்து வருவதாக அமைச்சர் மகிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

கம்பஹா அத்தனகல்ல பிரதேசத்தில் நடைபெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

இந்த நிகழ்வில் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவும் கலந்துக்கொண்டார்.

அங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அமைச்சர் மகிந்த அமரவீர, ஏற்பட்டுள்ள நிலைமையில், 2020இல் பிரதமராகும் நோக்கில் இருக்கும் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் எதிர்பார்ப்பும் இந்த அதிகார போட்டி காரணமாக கனவாகவே மாறிப் போகும்.

நல்லாட்சி அரசாங்கம், உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்கு முன்னர் காணப்பட்ட தவறுகளை திருத்திக்கொண்டு மாகாண சபைத் தேர்தலில் போட்டியிட உள்ளதால், தாமரை மொட்டு கருகி போய்விடும் எனக் கூறியுள்ளார்.

"மருத்துவர்கள் தங்களது மூளையை, பரிசோதனை செய்ய வேண்டும்"

சிங்கப்பூர் - இலங்கை சுதந்திர வர்த்தக உடன்படிக்கையை எதிர்க்கும் மருத்துவர்களுக்கு மூளை சரியில்லை என அமைச்சர் லக்ஸ்மன் கிரியல்ல தெரிவித்துள்ளார்.

கொழும்பு ஊடகமொன்றுக்கு அளித்த நேர்காணலில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார். தொடர்ந்தும் கூறுகையில்,

இலங்கை - சிங்கப்பூர் சுதந்திர வர்த்தக உடன்படிக்கையை எதிர்க்கும் மருத்துவர்கள் தங்களது மூளையை பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்.

அவ்வாறு பரிசோதனை செய்து கொள்வதே மிகவும் சிறந்ததாக இருக்கும். இந்த வர்த்தக உடன்படிக்கையினால் இலங்கை மருத்துவர்களுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படப் போவதில்லை.

விபரங்களை அறிந்து கொள்ளாது மருத்துவர்கள் இந்த உடன்படிக்கையை எதிர்த்து வருகின்றனர். சிங்கப்பூரை சேர்ந்த மருத்துவர் ஒருவரின் மாதாந்த சம்பளம் 25 இலட்சம் ரூபாவாகும்.

இவ்வாறான ஓர் நிலையில் அவர்கள் இலங்கையில் வந்து சேவையாற்றுவதற்கு அவர்களின் மூளையில் கோளாறு கிடையாது.

தர்க்க ரீதியில் ஏற்றுக்கொள்ளப்பட முடியாத விடயங்களின் அடிப்படையில் மருத்துவர்கள் இந்த உடன்படிக்கைக்கு எதிராக போராட்டம் நடத்தி வருவதாக அமைச்சர் கிரியல்ல தெரிவித்துள்ளார்.

பல்வேறு தடைகள் சவால்களுக்கிடையே, மன்னாரை அழகுபடுத்தி நவீனமயமாக்க தீர்மானித்துள்ளோம்

மன்னார் நகரத்தை அழகுபடுத்த நவீனமயமாக்கும் எமது முயற்சிகளில் பல்வேறு தடைகளும், சவால்களும் இருந்தபோதும் அதனையும் தாண்டி, அந்த நகரத்தை நவீனமயப்படுத்துவதற்கான அடிக்கல்லை அண்மையில் நாட்டியிருப்பதாகவும்,  விரைவில் இந்தப் பணிகளை பூரணப்படுத்தி மக்களுக்கு கையளிக்கவுள்ளோம் என்றும் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தொவித்தார்.

மன்னார் அல் - அஸ்ஹர் பாடசாலையில் அதிபர் மாஹிர் தலைமையில் இன்று காலை (30.07.2018) இடம்பெற்ற நிகழ்வுகளின் பின்னரான கூட்டத்தில் உரையாற்றும் போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார். 

புதிய ஆரம்ப பிரிவு மாணவர்களுக்கான வகுப்பறையை திறந்து வைத்தல், புதிய கேட்போர் கூடத்திற்கான அடிக்கல் நாட்டல், மற்றும் சாதனையாளர்களை கௌரவிக்கும் நிகழ்வில் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் பிரதம விருந்தினராக கலந்துகொண்டார்.  இங்கு அமைச்சர் மேலும் கூறியதாவது, 

யுத்த முடிவின் பின்னர் வன்னி மாவட்டத்தில் நாங்கள் பல்வேறு அபிவிருத்தி திட்டங்களை முன்னெடுத்துவருகின்றோம். அந்தவகையில் மன்னார் நகரத்தை அழகுபடுத்த நாம் முயற்சிகள் முன்னெடுத்த போதும், உள்ளுர் நிர்வாகம் அதற்கு இடையூராக இருந்தது. சுமார் ஏழு, எட்டு வருடங்களாக இந்த இழுபறி தொடர்ந்த போதும்,  வரவுசெலவு திட்டத்தில் மன்னார் , நகர நிர்மான வேலைகளுக்கென எமது அமைச்சுக்கு ஒதுக்கப்பட்ட நிதியுடனும் மற்றும் நகர அபிவிருத்தி அதிகாரசபையின் நிதியின் உதவியுடனும் நிர்மானப்பணிகளை மேற்கொள்வதற்கான அடிக்கல்லை நாட்டியுள்ளோம். அண்மையில் அமைச்சர்களான சம்பிக்க மற்றும் நிதியமைச்சர் ஆகியோரை அழைத்துவந்தே இந்த அடிக்கல்லை நாட்டிவைத்தோம், அதுமட்டுன்றி, மன்னார் நகரத்தை சார்ந்த பல்வேறு அபிவிருத்தி திட்டங்களை மேற்கொள்வதற்கான திட்டங்களை மேற்கொண்டு வருகின்றோம். 

கடந்த காலங்களில்  மன்னார் உப்புக்குளம், பனங்கட்டிக்கொட்டு, எழில் நகர் போன்றவை  மழை காலத்தில் வெள்ளத்துள் அமிழ்ந்து இந்தப் பிரதேசத்தில் வாழும் மக்கள் பாதிக்கப்பட்டதை அறிவீர்கள். ஐரோப்பிய யூனியனின் நிதி ஒதுக்கீட்டில் இந்த பிரதேசத்தில் வடிகான்கள் அமைக்கப்பட்டு, வெள்ள அனர்த்திலிருந்து மக்களை பாதுகாக்க நாம் மேற்கொண்ட முயற்சியை நீங்கள் அறிவீர்கள். 

பாடசாலை என்பது வெறுமனே புத்தக கல்வியை வழங்கும் நிறுவனமாக மாத்திரம் இருக்கக்கூடாது. மாணவர்களின் புறக்கீர்த்திய செயற்பாடுகளை ஊக்கப்படுத்தும் ஒரு ஊடகமாக அது இருக்கவேண்டும். அந்தவகையில் மாணவர்களின் ஆற்றல்களையும், திறமைகளையும் இனங்கண்டு அவர்களை முன்நிலைக்கு கொண்டுவருவதற்கு ஆசிரியர்களின் பங்களிப்பு முக்கியமானது அதுமாத்திரமன்றி, இந்த விடயங்கள் சரிவர நிகழ்வதற்கு அதிபர்கள் கவனம் செலுத்த வேண்டும்.

மாணவர்கள் தத்தமது மாவட்டங்களில் சாதனை படைத்தால் போதுமென்ற மனோபாவத்தை பெற்றோர்கள், ஆசிரியர்கள், அதிபர்கள் மாற்றியமைத்து தேசிய ரீதியிலும், சர்வதேச ரீதயிலும் மிளிர்வதற்கு அத்தனை நடவடிக்கைகளையும் மேற்கொள்வதே சிறப்பானது. பிள்ளைகளின் வளர்ப்பிலே பெற்றோர்களின் பங்களிப்பு முக்கியமானது. தனது பிள்ளையை ஒழுக்கமுடையவராகவும், பண்புடையவராகவும்; வளர்த்தெடுப்பதன் மூலமே அவனை சமூகத்திற்கு பயனுள்ளதாக வார்த்தெடுக்கமுடியும் என்பதை ஒவ்வொரு பெற்றோர்களும் உணரவேண்டும். 

சில மாணவர்கள் க.பொ.த சாதாரன தரத்தில் 9ஏ சித்திகளை பெற்றவுடன் தாங்கள் கல்வியிலே உயர்ந்துவிட்டோம் என்று நினைத்து தொடர்ந்தும் உயர் கல்வியில் தமது கரிசனையை குறைத்துவருகின்றனர். க.பொ.த உயர்தரத்தில் சிறப்பு பெறுபேறுகளை பெற்று,  பல்கலைக்கழகத்திற்கு சென்று கல்வியிலே உயர் நிலை அடையவேண்டுமென்ற சிந்தனையிலிருந்து விடுபடுவதால், அவர்களின் அடைவு மட்டம் குறைவாகின்றது. பெற்றோர்களும் இந்த விடயத்தில் தவறிழைக்கின்றனர்

அதுமாத்திரமன்றி,  டாக்டர்களாகவும், எஞ்சினியர்களாகவும், கல்விமான்களாகவும், பல்கலைக்கழகத்திலிருந்து வெளியேறிய போதும்  ஒழுக்க விழுமியங்கள் குறைவாக இருந்தால் அவர்களின் வாழ்க்கை சிறப்பானதாக அமையாது.

மன்னார் அல் - அஸ்ஹர் பாடசாலையிலே 9ஏ சித்தி பெற்ற சில மாணவர்களை இன்று பார்க்கும் போது அவர்களின் பெற்றோர்கள் அகதி முகாமிலே அவர்கள் என்னுடன் இருந்த ஞாபகம் வருகின்றது. அகதி முகாம்களின் பட்ட கஷ்டங்களுக்கு மத்தியிலே உங்களை எவ்வாறு வளர்த்திருப்பார்கள் என்பதை எண்ணிப்பாருங்கள். எனவே, அவர்களின் எதிர்பார்ப்புகளை வீணடிக்காதீர்கள் என்று உங்களை அன்பாய் வேண்டுகின்றோம். 

Newer Posts Older Posts Home