Header Ads



வெளிநாட்டுவாழ் பலகத்துறை சகோதரர்களின் (Overseas Poruthota Brothers - OPB) அமைப்பு உதயமாகியது


-Sarthar Jameel-

உலகின் பல நாடுகளிலும் பரந்து வாழும் பலகத்துறையை சேர்ந்த சகோதரர்களால் எமது ஊரின் அபிவிருத்தியையும், நலன்புரியையும் அடிப்படையாக கொண்டு  Overseas Poruthota Brothers 
(OPB) எனப்படும்அமைப்பு ஆரம்பிக்கப்பட்டு அதன் சேவையை தற்போது ஊரில் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது. 

இவ்வமைப்பு உருவாக்கப்பட்டு சிறிது காலமே ஆனாலும் அவ்வமைப்பில் உள்ள அங்கத்தவர்களது துரித முயற்சியினால் அதன் முதல் செயற்திட்டம் தற்போது பலகத்துறையில் அமுலுக்கு வந்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது.

அந்த வகையில் OPB இன் முதல் செயற்திட்டமாக அல் பலாஹ் மஹா வித்தியாலய பாடசாலை அபிவிருத்தி சபையினால் முன்மொழியப்பட்ட கல்வி பொது தராதர சாதாரண தரத்தில் சிறந்த பெறுபேறுகளை பெற்று உயர்தரத்தில் விஞ்ஞான பிரிவில் கற்க முனையும் எமது ஊரைச் சேர்ந்த மாணவர்களுக்கான ஆலோசனைகளையும், பொருளாதார உதவிகளையும் செய்து கொடுக்கும் பணி ஆரம்பிக்கப்பட்டுள்ளதை ஊர்மக்களுக்கு அறியத்தருவதில் OPB அங்கத்தவர்கள் மகிழ்ச்சி அடைகின்றார்கள்.

மேற்படி OPB இன் இந்தத் திட்டத்தின் படி ஒரு மாணவிக்கான ஊக்கத்தொகையாக  12 ஆயிரம் இலங்கை ரூபாய்கள் படி, இரண்டு மாணவிகளுக்கான புலமைப்பரிசில் உதவித்தொகையாக மாதாந்தம் 24 ஆயிரம் இலங்கை ரூபாய்கள் வழங்கப்படுகின்றன. மே மாதத்திற்கான ஊக்கத்தொகையை வழங்கி இத்திட்டம் அல்லாஹ்வின் உதவியோடு ஆரம்பமாகி உள்ளது. 

இச்செயல்திட்டம் சம்பந்தமான ஒரு ஒன்றுகூடல் கடந்த 17ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை அல் பலாஹ் மகாவித்தியாலயத்தில் நடைபெற்றது. இதில் OPB அமைப்பின் தலைவர் ஹாமித் அலி அவர்கள், அமைப்பாளரும் செயலாள‌ருமான முனாப் முஸம்மில், பொருளாலர் ஜௌபர் ஜான் உட்பட OPB அமைப்பின் அங்கத்தவர் சகோதரர் அஸீஸ் அவர்களும் பாடசாலை உப‌ அதிபர் அஜ்மல் ஆசிரியர், மற்றும் உதவித்தொகை பெறும் பெற்றோர் அடங்களாக OPB இன் ஊர் செயல்பாட்டாளர்களாக தெரிவு செய்யப்பட்டவர்களும் பங்குபற்றி இருந்தார்கள். 

OPB ஆரம்பித்திருக்கும் இச் செயற்திட்டம் வெற்றி பெற உங்கள்  அனைவரின்  பிரார்த்தனைகளையும் இறைவன் அருளையும் வேண்டி நிற்கின்றோம்.

நன்றி... வஸ்ஸலாம்.

No comments

Powered by Blogger.