Header Ads



புலிகள் வெளிநாடுகளில் செயற்படுகிறார்கள் -விஸ்வ ஹிந்து பரிஷத் - CIA புது தகவல்


அமெரிக்காவின் புலனாய்வு அமைப்பான CIA சர்வதேச நாடுகள் குறித்த வேர்ல்ட் வெக்ட்புக் (World Factbook) என்ற தலைப்பிலான தகவல்களை தம்முடைய இணையத்தளத்தில் ஆண்டு தோறும் வெளியிட்டு வருகிறது.

அந்த வகையில் 2018 – 2019ஆம் ஆண்டிற்கான வேர்ல்ட் வெக்ட்புக் (World Factbook) என்ற தலைப்பில் சில தகவல்களை வெளியிட்டு ஊடகங்களில் தரவேற்றம் செய்துள்ளது.

இதில், “வெளிநாடுகளை தளமாக கொண்டு செயல்படும் ஆயுத இயக்கம்” என்ற வகைக்குள் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் அடங்கியிருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.

“வெளிநாடுகளை தளமாகக் கொண்டு செயல்படும் அமைப்புகள்” என்ற வகைக்குள் மேலும் பல அமைப்புக்களை அமெரிக்காவின் புலனாய்வு முகவர் நிறுவனம் உள்ளடக்கியுள்ளது.

விடுதலைப் புலிகள் இயக்கம், அல்கொய்தா, ஹர்ஹத் உல் ஜிஹாதி இஸ்லாம், ஹர்ஹத் உல் ஜிஹாதி இஸ்லாம் - வங்கதேசம், ஜெய்சியே முகமது, லஸ்கர் இ தொய்பா ஆகிய ஆயுத அமைப்புகளும் இணைக்கப்பட்டுள்ளன.

இதேவேளை, இந்துத்துவா அமைப்புகளான விஸ்வ ஹிந்து பரிஷத் மற்றும் பஜ்ரங் தள் ஆகியவை “மத ஆயுத குழுக்கள்” என CIA வகைப்படுத்தியுள்ளது.

“இந்தியாவின் அரசியல் கட்சிகள் மற்றும் தலைவர்கள்” என்ற தலைப்பில் அதிமுக, ஆம் ஆத்மி, காங்கிரஸ் என பல கட்சிகளின் பெயர்கள் இடம்பெற்றுள்ளன.

“அரசியல் அழுத்தம் தரும் குழுக்கள், தலைவர்கள்” என்ற தலைப்பில் குரியத் மாநாட்டு கட்சியை பிரிவினைவாத இயக்கம் என குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், “வெளிநாடுகளை தளமாக கொண்டு செயல்படும் அமைப்புகள்” என்ற வகையில் இந்திய துணைக் கண்டத்துக்கான அல்கொய்தா, ஹர்ஹத் உல் ஜிஹாதி இஸ்லாம், ஹர்ஹத் உல் ஜிஹாதி இஸ்லாம் - வங்கதேசம், ஜெய்சியே முகமது, லஸ்கர் இ தொய்பா, தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் ஆகியவை உள்ளடங்குவதாக குறிப்பிடப்படுகின்றது.

1962-ஆம் ஆண்டு முதல் தயாராகும் இந்த உலக நடப்பு நிலவர அறிக்கை, முன்பு இரகசியமாகவே வைக்கப்பட்டு வந்தது. ஆனால், 1975-ஆம் ஆண்டு முதல் இந்த நடப்பு நிலவரத்தை CIA வெளிப்படையாகவே வைத்து வருகிறது.

இதில், அமெரிக்காவால் அரசுகளாக அங்கீகரிக்கப்பட்ட 266 நாடுகளைப் பற்றிய விவரங்களைத் தெரிவிக்கும்.

2 comments:

  1. அமெரிக்காவின் CIA அறிக்கை தான் எமக்கு தெரியுமே. இவாறு பிரசுரித்தால் தான் இலங்கை அரசுடன் நட்பு பாராட்டலாம் என நினைத்துள்ளார்கள் போல. நாளை இலங்கையின் கிழக்கிலே ISIS வலுப்பெற்று வருகின்றார்கள் என எழுதினாலும் ஆச்சரியப்படுவதட்கு இல்லை.

    ReplyDelete
  2. CIA is the real terrorist organization in this world. The above mentioned all groups are created by them.

    ReplyDelete

Powered by Blogger.