Header Ads



தொலைக்காட்சியில் பார்த்ததை, வீட்டில்செய்த சிறுவன் மரணம்

தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றினை பார்த்து அதனை வீட்டில் செய்து பார்க்க முயற்சித்த போது கழுத்து இறுகியதால் சிறுவன் ஒருவர் உயிரிழந்த சம்பவம் ஒன்று வாரியபொல பகுதியில் பதிவாகியுள்ளது.

இந்த சம்பவம் நேற்று முன்தினம் இடம்பெற்ற நிலையில் நேற்றைய தினம் மரண விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டன.

இதற்கமைய, நித்திரை கொள்ளும் அறையில் நுளம்பு வலை தொங்கவிடுவதற்கு அமைக்கப்பட்டிருந்த கம்பியில் தினமும் விளையாடுவதை வழக்கமாக கொண்டுள்ளார் அந்த சிறுவன்.

பெற்றோரிடம் குறித்த சிறுவன் விளையாடுவதை கூறிவந்துள்ளார். ஆனால் பெற்றோர் அதனை பொருட்படுத்த வில்லை.

நேற்று முன்தினம் வீட்டில் யாரும் இல்லாத நிலையில், சிறுவன் அவ்வாறு விளையாடிக் கொண்டிருக்கையில் கழுத்து இறுகிய நிலையில் விழுந்து கிடந்துள்ளார்.

சிறுவனை அவதானித்த அயலவர்கள் சிறுவனை வைத்தியசாலையில் சேர்ப்பித்துள்ளனர்.

எனினும் சிறுவன் உயிரிழந்த நிலையிலேயே வைத்தியசாலைக்கு கொண்டு வரப்பட்டுள்ளார் என வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பில் சிறுவனின் தந்தை கருத்து தெரிவிக்கையில்...

நான் வீட்டிற்கு திரும்பிக்கொண்டிருக்கையில் மகன் நெஞ்சு வருத்தம் காரணமாக வைத்தியசாலையில் சேர்ப்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தனர்.

நான் உடனடியாக வைத்தியசாலைக்கு சென்று மகனை பார்த்தேன், அப்பொழுது அவர் உயிரிழந்திருந்தார்.

கழுத்தில் நெரிக்கப்பட்ட அடையாளங்கள் காணப்படுகின்றமையினால் மரணத்தில் சந்தேகம் காணப்படுவதாக வைத்தியர்கள் அறிவித்தனர்.

இதனை தொடர்ந்து காவல் துறையினர் மேற்கொண்ட விசாரணைகளிலேயே மகன் கழுத்து இறுகிய நிலையில் உயிரிழந்துள்ளார் என்பது கண்டறியப்பட்டது. என அவர் கூறியதோடு,

மகன் இவ்வுலகை விட்டு பிரிந்த நிலையில் எங்களுக்கு எதும் தேவையில்லை. நாங்களும் இவ்வுலகை விட்டு பிரியும் சந்தர்ப்பத்தினையே எதிர்பார்த்து காத்திருக்கின்றோம் எனவும் கூறி கண்ணீர் விட்டனர்.

ஐந்தாம் தரத்தில் கல்வி கற்கும் சிறுவனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

பிரேத பரிசோதனையின் பின்னர் சடலம் உறவினர்களிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

No comments

Powered by Blogger.