Header Ads



சவூதியை புறக்கணிக்கும் நல்லாட்சி - கட்டாருடனும், ஈரானுடனும் உறவை கொண்டாடுவது நல்லதல்ல...

ஈரான் - இலங்கை  - கட்டார் நாடுகளுக்கிடையிலான உறவு குறித்து நாட்டு முஸ்லிம்களுக்கு அரசு உண்மையை  வெளிப்படுத்த வேண்டுமென முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஆலோசகர் மசூர் மௌலானா வேண்டுகோள் விடுத்துள்ளார்.

நாட்டுக்கும் முஸ்லிம் சமூகத்திற்கும் எந்த விதத்திலும் பிரயோசனமற்ற ஈரானோடும் கட்டாரோடும் - நல்லாட்சி அரசு உறவு கொண்டாடுவதன் மர்மம்தான் என்னவென்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவின் ஆலோசகரான மசூர் மௌலானா இது தொடர்பில் மேலும் தெரிவித்தவை வருமாறு;

இஸ்லாத்தின் அடிப்படை கொள்கை கோட்பாட்டிற்கு மாற்றுக் கருத்தை கொண்ட ஈரானுடன் இலங்கை அரசு கொண்டுள்ள உறவு தொடர்பில் முஸ்லிம் சமூகம் பெரும் வேதனை கொண்டுள்ளது. ஏனைய முஸ்லிம் நாடுகளும் தமது கவலையை வெளிப்படுத்தியுள்ளன.

முஸ்லிம்களால் வெறுக்கப்படுகின்ற ஷீயா கோட்பாட்டை இலங்கைக்குள் புகுத்த ஈரானுக்கு அநுமதியளிப்பதன் பின்னனியில் இஸ்லாத்துக்கு எதிரான சக்திகள் உள்ளனவா ? அல்லது அவ்வாறான சக்திகள் அரசுக்கு அழுத்தம் கொடுக்கின்றனவா என்ற கேள்வி இன்று முஸ்லிம் சமூகத்தினரால் பரவலாக எழுப்பப்பட்டு வருகின்றது.

முஸ்லிம்களுக்கு எதிரான அநீதிகள் இன்று நாட்டில் பரவலாக நடந்தேறிக் கொண்டுவரும் நிலையில் இவ்வாறான சந்தேகங்களும் கேள்விகளும் எழுவதை தவிர்க்க முடியாது.

ஈரான் மற்றும் கட்டார் நாடுகளை விட இலங்கைக்கு அதிகளவு உதவிகளை செய்த நாடு , செய்து கொண்டிருக்கின்ற நாடு சவூதி அரேபியா என்பதில் மாற்றுக் கருத்தில்லை.

அப்படிப்பட்ட அந்த சவூதி நாட்டை அழிக்கத் துடிக்கும் ஈரானுடனும் அதற்கு துனை நிற்கும் கட்டாருடனும் இலங்கை உறவு கொண்டாடுவது எம் நாட்டுக்கு உகந்ததல்ல.

நல்லாட்சி அரசு அண்மைக்காலமாக சவூதியை புறக்கணிக்கும் பொறி முறையை கையான்ட போதிலும் சில நல்லுள்ளம் கொண்ட முஸ்லிம்களின் வேண்டுகோளிற்கு சவூதி அரசு பொறுமை காத்து தொடர்ச்சியான உதவிகளை செய்த வண்ணமே உள்ளன. அதேநேரம் இலங்கை  அரசின் புறக்கணிப்பும் சமாந்தரமாக இடம்பெற்றுக் கொண்டே வருகின்றன.

அண்மையில் பல பில்லியன் டொலர் செலவில் அதி நவீன வசதிகளைக் கொண்ட வைத்தியசாலையை நிர்மாணித்துக் கொடுத்த சவூதியின் முக்கிய அரசியல் மற்றும் முதலீட்டாளர்கள் இலங்கைக்கு வருகை தந்து வைத்தியசாலையை திறந்து வைத்த போதிலும் அவர்களுக்கு உரிய கௌரவம் வழங்கப்படவில்லை.

அதுமாத்திரமன்றி அன்றைய தினமே இலங்கை ஜனாதிபதி  தனது பரிவாரங்களுடன் கட்டார் நாட்டிற்கு பயனமானார். இது, சவூதியை புறக்கனிக்கும் தன்மையின் உச்சக்கட்டமாகும். இதனால் சவூதியிலிருந்து வருகை தந்தோர் பெரும் ஏமாற்றமும் அவமானமும் அடைந்தார்கள்.

இலங்கை பணியாளர்களை அதிகமாக உள்ளீர்க்கும் நாடுகளாக சவூதி , ஓமான் ,பஹ்ரைன் , குவைத் போன்ற நாடுகளே இருக்கின்றன. இன்று கட்டார் - எமது இலங்கைப் பணியாளர்களை திருப்பியனுப்பும் நிலைப்பாட்டை கையிலெடுத்துள்ளன. சவூதியின் நட்புறவு நாடுகள் அவை.

இதன் மூலம் தொழில் வாய்ப்பை - இலங்கைக்கு வழங்காதிருக்கும் நிலைப்பாட்டிற்கு மேற்படி நாடுகள் உந்தப்படுமாயின் பெரும் அந்நிய செலாவனி இழப்பை இலங்கை எதிர்கொள்வதோடு தொழிலற்றோர் வீதமும் அதிகரிக்கும் ஆபத்தும் ஏற்பட்டு வளர்ச்சியடையாத நாடாக இலங்கை தாழ்த்தப்படும் அபாயம் ஏற்படும்.

இவ்வாறான பின்னனியில்தான் இம்முறை சவூதி அரசு வழமையாக புனித ரமழானை முன்னிட்டு வழங்கும் ஈச்சம் பழத்தைக் கூட வழங்கவில்லையோ என்ற ஐயம் ஏற்படுகின்றது.
அதனால்தான் 8கோடி ரூபாவை செலவு செய்து இந்த அரசு ஈச்சம் பழங்களை வாங்க வேண்டிய நிலை ஏற்பட்டது.

ஈரான் மற்றும் கட்டார் நாடுகளுக்கு செல்ல வேண்டாம் என எனக்கு கடும் அழுத்தம் பிரயோகிக்கப்பட்ட போதிலும் அதனையும் தாண்டி இந்த நாடுகளுக்கு சென்றேன் என ஜனாதிபதி மைத்திரி அண்மையில் கூறியிருந்தார். உண்மையில் அந்த அழுத்தத்தை  அல்லது வேண்டுகோளை அவர் செவி மடுத்திருப்பாராயின் சில, பல அநூகூலங்களை இந்த நாடு அடைந்திருக்கும்.

இந்த நாடுகளுக்கு ஜனாதிபதி சென்றதால் நாட்டுக்கு கிடைத்த நண்மைதான் என்ன? ஒன்றுமே இல்லை. வெறுங்கையுடன் திரும்பி வந்தது மட்டுமன்றி அதிக உதவிகளை புரியும் சவூதியின் நட்பையே இழக்க வேண்டி ஏற்பட்டது.

எனவே முஸ்லிம் சமூகம் இன்று எதிர் நோக்கும் ஷீயாக்களின் ஊடுருவலீல் இருந்து எமது சமூகத்தையும் எதிர்கால சந்ததியையும் பாதுக்க வேண்டியுள்ளது மட்டுமன்றி எமது நாடு அபிவிருத்தி அடைவதிலிருந்து பின்னோக்கிச் செல்வதை தடுப்பதற்கும் நாம் தயாராக வேண்டிய அவசியத்திற்கும் அவசரத்திற்கும் தள்ளப்பட்டுள்ளோம் என்றும் முன்னாள்  ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஆலோசகர் மசூர் மௌலானா மேலும் தெரிவித்தார் 

(ஏ.எச்.எம்.பூமுதீன்)

3 comments:

  1. நபியவர்களுக்குப் பின் இமாமத் எனும் முஸ்லிம்களின் ஆட்சித் தலைமைத்துவம் அன்னவர்களின் மருமகனான ஹஸ்ரத் அலி (ரலி) அவர்களுக்கு சென்றிருக்க வேண்டும் என்ற அரசியல் கொள்கை உடையவர்களே ஷியா (கட்சி) எனப்படுவோர்.

    அவர்களை முஸ்லிம்களாக அங்கீகரித்து சவூதி அரேபியா தன் நாட்டுக்குள் ஹஜ், உம்ராஹ் போன்ற கடமைகளை நிறைவேற்ற  அனுமதி அளிக்கிறது.

    அவர்களில் ஒரு பிரிவினர் இலங்கையிலும் 'போரா'க்கள் என்ற பெயரில் இலங்கையின் ஏற்றுமதி வர்த்தகத்தில் பல்லாண்டுகளாக கணிசமான பங்களிப்பைச் செலுத்தி வருகின்றனர்.

    முன்னாள் இலங்கை ஜனாதிபதியும் அவரது அரசாங்கமும் ஈரானுடனும் அதன் மகத்தான தலைவர்  அகமதி நஜாத் அவர்களுடனும் சிறந்த நட்பைப் பேணி வந்தவர்தான்.

    உலக முஸ்லிம்களை பெரிதும் கவலை கொள்ளச் செய்திருக்கும் மஸ்ஜிதுல் அக்ஸா, ஜெருசலேம் அடங்கலான பாலஸ்தீன முஸ்லிம் சகோதரர்களின் தேசத்தை ஆக்கிரமித்திருக்கும்  இஸ்ரவேலுக்கு எதிராக, ஏனைய முஸ்லிம் நாடுகளைவிட அதிக  அளவில் நேரடியாகவும் மறைமுகவாகவும் பாரிய நிதிகளை வாரி வழங்கி போராடி வருவதுவும் ஈரானே.

    அந்த வகையில் ஈரானுடனும் அதன் தோழமை நாடான கட்டாருடனும் எமது மதிப்புக்குரிய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்கள் நட்பு பாராட்டுவதை, சர்வதேச முஸ்லிம்களின் ஓர் அங்கம் என்ற வகையில் இலங்கை முஸ்லிம்கள் வரவேற்க வேண்டிய கடப்பாடு உண்டு.

    இன்று நாம் அதிக முக்கியத்துவம் கொடுக்க வேண்டியது தேசிய ரீதியிலும் சர்வதேசிய ரீதியிலும் நம்  முஸ்லிம் சகோதரர்களின்  ஒற்றுமை விடயமாகவே.  இஸ்லாத்தின் இலக்கே முழு மனித இனத்தின் நீதமான ஒற்றுமையே. 

    நாம் விரோதம் பாராட்டியே ஆக வேண்டும் என்றொரு நாடு உண்டென்றால்  அது நமது சகோதரத்துவ உணர்வையே புண்படுத்திக் கொண்டு அநீதியான ஆக்கிரமிப்பாளர்களான  இஸ்ரவேலே தவிர  சகோதர நாடுகளான ஈரானும் கட்டாரும் அல்ல.

    ReplyDelete
  2. இலங்கை அரசாங்கத்தை விமர்சிக்கும் இந்த ஆசாமி யார்? இலங்கை தேவையில்லை நாட்டை வெறுத்து சவூதியில் போய் தஞ்சம் கேட்டு பல ஆண்டுகள் பல சவூதியர்களின் காலில் விழுந்து சவூதி குடியுரிமையைப் பெற்றுக் கொண்டு மஹிந்த ராஜபக்ஸவை சரியாக காக்கா பிடித்து மலேசியாவுக்கு வல்லபட்ட, தங்கம் கடத்த இலங்கையில் தற்காலிகமாக தஞ்சம்புகுந்து மஹிந்தைக்கு இப்போது வால்பிடித்துத் திரிகின்றார். அலவி மௌலானாவை வைத்து சந்திரிகாவுடன் பல டீல்களைச் செய்து தோல்வியை அடையவும் மஹிந்த பக்கம் சாய்ந்து இப்போது அரசாங்கத்தை விமர்சிப்பது உடனடியாக மஹிந்தவை சனாதிபதியாக்கும் நோக்கமா.

    ReplyDelete
  3. I agree fully with Mahibal Al Fassy.What this moulavi talking is sectarianism of blood thirstiness.This Moulavies must understand the "KALIMAH" AND THOUHEED"fully.In short unity is Eiman and diversity is shirk.What this Moulavi talking is diversity.

    Iran and Qatar even Turky is sidelined by this Arab countries simply because they completely support Palestinian cause.So Israel is very angry with this countries.So Israel wants to punish this countries.
    So having a close connection and ally of UAE,Saudi Arabia,Egypt and Bahrain,it is Israel's advice to sideline Qatar and Iran.Egyptian dictator Abdul Fathah al Sisi killing Muslims who are anti Israel and advice of Israel he closed the alrafah Border of Gaza to deny the essential items to Palstinian are well supported by this Arab countries.Iran other hand talk of Islamic unity on so many occasion but this Arab countries not ready to unite with Turkey and Iran but unite with Israel shows who is rite and who is wrong.Even most inhuman act of this ally is blockading the Qatar simply because it is having balance friendship and not following the sectarianism of anti shia.But I agree with that our countries president must follow the balance policy of with every country without the expenses of others.

    ReplyDelete

Powered by Blogger.