June 08, 2018

"முஸ்லிம்கள் எப்போதும் நாட்டுக்கு விசுவாசமாக நடந்தமைக்கு இது ஓர் உதாரணம்"

-திரு­மதி. I.L.J பௌசியா (B.A.Dip Ed)
ஓய்வு பெற்ற ஆசி­ரியை-

இலங்­கையின் இரா­ஜ­தா­னி­க­ளாக அநு­ரா­த­புரம், பொலன்­ன­றுவை, தம்­ப­தெ­னியா, யாப்­ப­கூவ, குரு­ணாகல், கம்­பளை ஆகியன விளங்­கின. இவ்­வாறு தலை­நகர் காலத்­துக்குக் காலம் இடம் பெயரக் கார­ண­மாக விளங்­கி­யவை உள்­நாட்டு, வெளி­நாட்டுப் படை எடுப்­புக்­களே, சுமார் 2000 வரு­டங்கள் சுதந்­தி­ர­மாக விளங்­கிய சிங்­கள இரா­ஜ­தானி, இறு­தி­யாக  கோட்­டைக்கு இடம் பெயர்ந்­ததும் கோட்டை இரா­ஜ­தானி மூன்­றாகப் பிரிந்­தது. இந்த அர­சியல் பிள­வா­னது 1505 இல் போர்த்­துக்­கேயர் இலங்­கையின் கரை­யோரப் பிர­தே­சத்தில்  கால் பதிக்க வாய்ப்­பாக அமைந்­தது. எனினும் கண்டி இராச்­சியம் ஒரு சுதந்­திர இராச்­சி­ய­மாக எழுச்சி பெற்­றது. போர்த்­துக்­கே­யரை அடுத்து ஒல்­லாந்தர் 1757 இல் கரை­யோ­ரத்தில் ஆதிக்கம் பெற்­றனர். பின் 1796 இல் பிரித்­தா­னியர் ஆதிக்கம் பெற்று 1815 இல் கண்டி கைப்­பற்­றப்­ப­டும்­வரை கண்டி இராச்­சியம் சுமார் 300 வரு­டங்கள் சுதந்­திர இராச்­சி­ய­மாக விளங்­கி­யது. கண்டி மன்­னர்கள் ஐரோப்­பி­யரின் ஆதிக்­கத்தில் இருந்து இராச்­சி­யத்தைப் பாது­காத்துக் கொள்­வ­தற்­காகப் பல போராட்­டங்­களை நடத்­தினர், இரா­ஜ­தந்­தி­ரங்­களைக் கையாண்­டனர். இதில் முஸ்­லிம்கள் ஆற்­றிய பங்­க­ளிப்பை வர­லாறு மறந்து விடாது.

போர்த்­துக்­கேயர் இலங்கை வரும்போது இலங்­கையின் பொரு­ளா­தா­ரத்தில் முஸ்­லிம்கள் தனிச் செல்­வாக்குப் பெற்­றி­ருந்­தனர். உள்­நாட்டு, வெளி­நாட்டு வியா­பாரம் அவர்­களின் கையில் இருந்­தன. ஏற்­று­மதி, இறக்­கு­மதி வர்த்­த­கத்தில் பெற்­றி­ருந்த செல்­வாக்குக் கார­ண­மாக முஸ்­லிம்கள் கரை­யோரப் பிர­தே­சங்­களில் அதிகம் குடி­யேறி இருந்­தனர். போர்த்­துக்­கேயர்  முஸ்­லிம்கள் வச­முள்ள  பொரு­ளா­தா­ரத்தை தம் வசப்­ப­டுத்திக் கொள்­வ­தற்­காக கரை­யோரப் பிர­தே­சத்­தி­லுள்ள முஸ்­லிம்­களை அடித்துத் துரத்­தினர். அங்­கி­ருந்து வெளி­யே­றிய பெரும்­பா­லான முஸ்­லிம்­களைக் கண்டி மன்னன் மலை­நாட்டுப் பிர­தே­சங்­களில் குடி­ய­மர்த்­தினான்.

இந்தக் குடி­ய­மர்வு முஸ்­லிம்கள் நாட்­டுக்­காற்­றிய பொரு­ளா­தார பங்­க­ளிப்பு, பெரும்­பான்மை மக்­க­ளுடன் கொண்­டி­ருந்த அந்­நி­யோன்­யத் தொடர்பை  எடுத்துக் காட்­டு­கின்­றது. இந்த உத­வியை முஸ்­லிம்கள் மறக்­க­வில்லை. மன்­ன­னுக்கு விசு­வா­ச­மாக நடந்து கொண்­டனர்.
இந்த வகையில் மௌலா முகாந்­தி­ரத்தின் மக­னான உதுமா லெவ்வை ஆற்­றிய இரா­ஜ­தந்­திரப் பணி வர­லாற்று முக்­கி­யத்­துவம் பெற்­றது. கி.பி.1747 இல் அரசு கட்­டி­லே­றிய கீர்த்தி  ஸ்ரீ இரா­ஜ­சிங்கன் திரு­மலை நாயகர் வம்­சத்தைச் சேர்ந்த அரசன். நாயகன் பரம்­ப­ரைக்கும் முஸ்­லிம்­க­ளுக்கும் இடையே  நெருங்­கிய  தொடர்பு இருந்து வந்­துள்­ளது.

தமிழ் நாட்­டிலே நவாப்­களின் வரு­கைக்கு முன் தமிழ் நாட்டின்  ஒரு பகுதி  நாயகர் நிர்­வா­கத்­திலும், ஒரு பகுதி தேவர்­களின் நிர்­வா­கத்தின் கீழும் இருந்து வந்­துள்­ளது. அப்­பி­ர­தே­சத்தில் வாழ்ந்த காரைக்கால் முஸ்­லிம்கள் நாய­கர்­க­ளுக்கு ஒத்­து­ழைப்பு வழங்­கினர். திரு­கோ­ண­மலை நாயக வம்ச மன்­னர்­க­ளுக்கும், தமிழ் நாட்டு நாயக வம்­சத்­தி­ன­ருக்கும் நெருங்­கிய தொடர்பு இருந்­து­வந்­துள்­ளது.

கீர்த்தி ஸ்ரீ இரா­ஜ­சிங்க மன்னன் காலத்தில் நாட்­டுக்குத் தேவை­யான அத்­தி­யா­வ­சியப் பொருட்­களை இந்­தியக் . கடற்­கரைப் பிர­தே­சங்­களில் இருந்து  இலங்­கைக்கு அனுப்ப காரைக்கால் முஸ்­லிம்­களே உதவி செய்­தனர். கள்ளக் கடத்தல் மூலம் இலங்­கைக்குக் கொண்டு வரப்­படும் பொருட்­களை டச்­சுக்­கா­ர­ருக்கு பிடி­ப­டாமல் மலை­நாட்­டுக்கு அனுப்பி வைக்க சிலாபப் பிர­தேச முஸ்­லிம்­களே உதவி செய்­தனர். சாலியர் எனும் கணக்குக் குடும்பம் இத்­து­றையில் முக்­கி­யத்­துவம் பெற்று விளங்­கி­யது. இதனை முஸ்­லிம்கள் சுய இலா­பத்­திற்­காக செய்­ய­வில்லை. டச்­சுக்­கா­ர­ருக்கு எதி­ரா­கவும் கண்டி மன்­ன­ருக்கு உத­வி­யா­கவும் செய்­தனர்.
உது­மா­லெவ்வை பல்­மொழி தேர்ச்சி பெற்­றவர். ஆங்­கிலம், பிரஞ்­மொ­ழியை சர­ள­மாகப் பேசக்­கூ­டி­யவர். அது மட்­டு­மன்றி அவ­ரிடம் காணப்­பட்ட விவேகம், கூர்­மை­யான அறிவு, நிதானப் போக்கு, பிரச்­சி­னை­களை இனங்­கண்டு தீர்க்கும் வல்­லமை, கீர்த்தி ஸ்ரீ இரா­ஜ­சிங்க மன்­னனை வெகு­வாக கவர்ந்­தது.

கரை­யோரப் பிர­தே­சத்தில் ஆதிக்கம் செலுத்தி வந்த டச்­சுக்­காரர் கண்­டியைக் கைப்­பற்ற கண்டி மன்­ன­னுக்கு எதி­ராகப் பல வழி­க­ளிலும் செயற்­பட்டு வந்­தனர். டச்­சுக்­கா­ரரை இலங்­கையிலிருந்து துரத்த ஐரோப்­பி­யரின் உதவி அவ­சியம் என்­பதை உணர்ந்தார். இச்­சந்­தர்ப்­பத்தில் 1762 இல் கண்டி மன்­னனைச் சந்­திக்க திரு­கோ­ண­ம­லையில் இருந்து ஆங்­கிலத் தூது­வ­ரான ஜோன் பைபஸ் கன்­னொ­ரு­வைக்கு வருகை தந்தார்.  அவரை உப­ச­ரித்து அவர் மூலம்  உத­வியைப் பெற்­றுக்­கொள்ளும் வகையில்  கண்டி மன்னன் தனது சார்­பாக உது­மா­லெவ்­வையை  அனுப்பி வைத்தார். இப்­ப­ணியை அவர் சிறப்­பாக முடித்து வைத்­த­மைக்­காக மன்னன் பெறு­மதி மிக்க பரி­சில்­களை வழங்கி கௌர­வித்தான். உதுமா லெவ்­வையின் இராஜதந்­தி­ரப் ­பணி மன்­னனை வெகு­வாகக் கவர்ந்­தது.

இதே­கா­லத்தில் கண்டி மன்னன் கர்­நா­டக நவாப் முகம்­மது அலி­யிடம் பல்­வேறு உதவி, ஒத்­து­ழைப்பைப் பெற்­றுக்­கொள்ள உதுமா லெவ்­வையைத் தூது­வ­ராக அனுப்­பினான். தமது பணியை சிறப்­பாகச் செய்து பல்­வேறு உத­வி­களைப் பெற்றுக் கொடுத்­த­மைக்­காக அவரை கௌர­வித்­த­தோடு தமக்கு விசு­வா­ச­மான ஆலோ­ச­க­ரா­கவும் அமர்த்திக் கொண்டான்.

இந்­தி­யாவின் வங்­காள விரி­குடாக் கடல் பிர­தே­சத்தில் பிரான்­சி­ய­ருக்கும், பிரித்­தா­னி­ய­ருக்கும் இடையில் அடிக்­கடி போர் மூண்­டன. பிரான்­சி­ய­ரி­ட­மி­ருந்து தமது பிர­தே­சங்­களைப் பாது­காத்­துக்­கொள்ள ஒரு பாது­காப்­பான  இடத்தை பிரித்­தா­னியர் தேடினர். இலங்­கையின் திரு­கோ­ண­ம­லைத்­து­றை­முகம் மிகப் பொருத்­த­மான பாது­காப்புத் தள­மாகக் காணப்­பட்­டது. இதனால் 1796 இல் பிரித்­தா­னிய கடற்­படை இலங்­கையின் கரை­யோரப் பிர­தே­சத்தைக் குறிப்­பாக திரு­கோ­ண­ம­லையைக் கைப்­பற்றிக் கொண்­டது. இத­னைத்­த­டுத்து நிறுத்த பிரான்­சிய அதி­கா­ரி­களின் உத­வியைப் பெற முடி­யாத ஒரு சூழ்­நி­லையில் டச்­சுக்­காரர் தவித்­தனர்.

கண்டி அரசன் பிரான்சின் உத­வியைப் பெற்று டச்­சுக்­கா­ரரைத் துரத்தும் நோக்கில் உது­மா­லெவ்­வையை 12 முறை பிரான்­ஸிய அதி­கா­ரி­க­ளிடம் அனுப்பி வைத்­ததன் மூலம் பிரஞ்சு மொழியை பேசச்­கூ­டிய உது­மா­லெவ்வை கண்டி மன்­ன­னுக்குச் சார்­பாக உத­வி­க­ளையும் ஒத்­து­ழைப்­பு­க­ளையும் உடன்­ப­டிக்கை மூலம் பெற்று வந்து கண்டி அர­ச­னிடம் கைய­ளித்­ததன் மூலம் கண்டி மன்­னனின் பெரும் ­பா­ராட்­டுக்கும், கௌர­வத்­துக்கும் உரி­ய­வ­ரானார்.

இதன் மூலம் டச்சுக்காரர் பிரித்தானியருக்கு எதிராக பிரான்ஸிடம் உதவிபெற முடியாது போனதால் டச்சுக்காரர் கரையோரப் பிரதேசங்களை பிரித்தானியரிடம் இழந்தது. உதுமா லெவ்வையின் இராஜதந்திரப் பணி கண்டி மன்னனுக்கு பெரும் உதவியாக அமைந்தது.

இவ்வாறு ஒரு சிறுபான்மை இனத்தைச் சேர்ந்த உதுமா லெவ்வையின் மூலம் முஸ்லிம்களுக்கும், நாட்டுக்கும் பெரும் புகழ் கிடைத்தது. முஸ்லிம்கள், எப்போதும் நாட்டுக்கு  விசுவாசமாக நடந்து கொண்டமைக்கு  இது ஓர் உதாரணம். முஸ்லிம்கள் நாட்டின் பொருளாதாரத்திற்குப் பெரும் பங்களிப்புச் செய்தது போல நாட்டை அந்நியரிடம்  இருந்து பாதுகாக்கப் போராடியவர்கள் என்பது வரலாற்று உண்மை.
-Vidivelli

3 கருத்துரைகள்:

இது இப்படியான கதைகளை சிங்களவர்கள் நம்ப மாட்டார்களே!

Ajan antony தமிழ் பயங்கரவாதத்தை விட சிங்களவர்கள் சற்று உண்மையை புரிந்துகொள்ள கூடியவர்கள். உங்களுடைய உண்மையான வரலாறு என்ன என்பதை மகா வம்சம் தெளிவாக சொல்லிவிட்டது

ஆனாலும், இந்த கதை சுப்பராக தான் இருக்கு.
இவ்வாறான கதைகளோடு, சினிமா நியூஸ், IPL கிரிக்கட் நியூஸ் போன்றவைகளையும் பிரசுரித்தால் நன்று.

Post a Comment