Header Ads



தோல்வியடைந்தமைக்கு ஐ.தே. கட்சியுடன் கூட்டணி வைத்ததுதான் காரணம் - மைத்திரிபால

நடந்து முடிந்த உள்ளாட்சி தேர்தலில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தோல்வியடைந்தமைக்கு பிரதமர் தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சியுடன் அரசியல் கூட்டணி வைத்துக் கொண்டது தான் காரணம் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன குற்றம் சாட்டியுள்ளார்.

ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் மத்திய செயற்குழு கூட்டம் ஜனாதிபதி தலைமையில் இன்று நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இந்தக் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.

இந்தக் கூட்டத்தில் பேசிய ஜனாதிபதி,

ஐக்கிய தேசிய கட்சியுடன் அரசியல் கூட்டணி வைத்துக்கொண்டதன் காரணமாகவே ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி உள்ளுராட்சி தேர்தல்களில் தோல்வியை சந்தித்தது.

இது குறித்து அனைவரும் சிந்திக்கவேண்டும். அனைத்து கட்சிகளும் உட்கட்சிமோதல்களால் பாதிக்கப்பட்டுள்ளன.

எந்த கட்சியும் உள்கட்சி மோதலால் பாதிக்கப்படவில்லை என எவரும் தெரிவிக்க முடியாது. ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியும் அதன் ஆரம்ப காலத்திலிருந்து இதன்காரணமாக பாதிக்கப்பட்டுள்ளது என்று குறிப்பிட்டுள்ளார்.

அண்மையில் மாதுளுவாவே சோபித தேரரின் நினைவு தின வைபவத்தில் பேசிய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தான் ஆட்சியேற்ற போது நடைமுறைப்படுத்தப்பட்ட நூறு நாள் வேலைத்திட்டமானது மடத்தனமானது என்றும், அதனை யார் தயார் செய்தார் என்று தனக்குத் தெரியாது என்றும் அவர் குறிப்பிட்டிருந்தார்.

இதனால், ஐக்கிய தேசியக் கட்சியினர் பெரும் அதிருப்தியடைந்தனர். மைத்திரிபால சிறிசேனவின் இந்தக் கருத்துக்குப் பதில் கருத்து வழங்கிய பிரதமர் ரணில் விக்ரமசிங்க, ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்சவுடன் கூட்டணி வைப்பதற்கு முயற்சி செய்து கொண்டிருப்பதாக தாம் கேள்விப்பட்டிருப்பதாக தெரிவித்திருந்தார்.

அதுமாத்திரமன்றி தன்னை முன்வைத்து ஜனாதிபதி பேசியது வருத்தத்திற்கு உரியது என்று பிரதமர் குறிப்பிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

2 comments:

  1. Has he won the 2015 Presidential Election by SLFP Votes?

    ReplyDelete
  2. ராஜபக்சலாக்களுடன் கூட்டு வைக்க வேண்டுமென்றால் கொட்டுவைத்துக்கொண்டு போகவேண்டியதுதானே. நம்பியவர்களுக்கும், கொடுத்த வாக்குறுதிக்கும் மாறுசெய்யும் மைத்திரி அவர்களை இனியும் நம்பி பிரயோசனம் இல்லை.

    ReplyDelete

Powered by Blogger.