Header Ads



பௌசியிடம் முக்கிய பொறுப்பு

மைத்திரிபால சிறிசேனவின் கட்டுப்பாட்டில் இருந்த காணாமல் போனோருக்காக பணியகம், தேசிய ஒற்றுமை மற்றும் சகவாழ்வு இராஜாங்க அமைச்சர் ஏ.எச்.எம் பௌசியின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளது.

இது தொடர்பான சிறப்பு அரசிதழ் அறிவிப்பு நேற்றுமுன்தினம் வெளியிடப்பட்டுள்ளது.

நிர்வாக காரணங்களுக்காக, சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன, காணாமல் போனோருக்கான பணியகத்தை இராஜாங்க அமைச்சர் ஏ.எச்.எம்.பௌசியிடம் ஒப்படைத்துள்ளார்.

தேசிய ஒருங்கிணைப்பு மற்றும் நல்லிணக்க அமைச்சர் என்ற வகையில் முன்னதாக, காணாமல் போனோருக்கான பணியகம் சிறிலங்கா அதிபரின் பொறுப்பில் இருந்தமை குறிப்பிடத்தக்கது.

2 comments:

  1. He will do it perfectly, as he did everything in the past.

    ReplyDelete
  2. அண்ணல் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

    'உங்களில் ஒவ்வொருவரும் பொறுப்பாளர்கள்; தம் பொறுப்பின் கீழ் உள்ளவர்கள் பற்றி ஒவ்வொருவரும் விசாரிக்கப் படுவீர்கள்.

    தலைவர் பொறுப்பாளியாவார். அவர் தம் குடிமக்கள் பற்றி விசாரிக்கப் படுவார்.

    ஓர் ஆண் மகன் தன் குடும்பத்துக்குப் பொறுப்பாளியாவான்.  தன் பொறுப்பிலுள்ளவர்கள் பற்றி அவனும் கேட்கப்படுவான்.

    ஒரு பெண், கணவனின் வீட்டுக்குப் பொறுப்பாளியாவாள். அவள் தன்னுடைய பொறுப்பிலுள்ளவர்கள் பற்றி விசாரிக்கப்படுவாள்.

    ஓர் ஊழியன் தன் முதலாளியின் செல்வத்துக்குப் பொறுப்பாளி ஆவான். அவன் தன்னுடைய பொறுப்பு பற்றி விசாரிக்கப் படுவான்.

    ஓர் ஆண் மகன் தன் தந்தையின் செல்வத்துக்குப் பொறுப்பாளியாவான்'

    அறிவிப்பவர் இப்னு உமர் (ரலி) அவர்கள்.  (ஸஹீஹ் புகாரி 893)

    ReplyDelete

Powered by Blogger.