Header Ads



புலி குடும்பத்தினருக்கு நட்டஈடு வழங்க முயற்சி - மூக்குடைபட்டார் சுவாமிநாதன்

நாட்டில் கடந்த மூன்று தசாப்தங்களாக இடம்பெற்ற யுத்தத்தின் போது உயிரிழந்த விடுதலை புலி இயக்கத்தின் உறுப்பினர்களின் குடும்பத்தினருக்கு நட்டஈடு வழங்குவதற்கான தீர்மானத்திற்கு அமைச்சரவை கடும் எதிர்ப்பை தெரிவித்தது.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் இடம்பெறற அமைச்சரவையின் கூட்டத்தின் போதே குறித்த இந்த யோசனையை அமைச்சர் சுவாமிநாதன் முன்வைத்தார். 

எனினும் இந்த யோசனைக்கு அமைச்சரவையின் அமைச்சர்கள் பலர் தமது எதிர்ப்பினை வெளியிட்டதுடன் ஜனாதிபதியும் எதிர்ப்பை தெரிவித்தார்.

இந் நிலையில் அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட்ட இந்த யோசனை நிராகரிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

5 comments:

  1. பயங்கரவாதிகளுக்கு ஆதரவான நினைவு நாள், பயங்கரவாதிகளுக்கு ஆதரவான கருத்துக்கள் இன்று பயங்கரவாதிகளுக்கான வீடு. இந்த அநியாயங்களெல்லாம் இலங்கையில் மட்டும் தான் இந்த நரியாட்சியில் நிகழ்ந்துகொண்டிருக்கிறது

    ReplyDelete
  2. யார் பயங்கரவாதி? தான் மட்டுமே யோக்கியம் என்று எண்ணுகிறவன்.

    ReplyDelete
  3. Dear Mr.Swamynathan,

    Kindly i request you that not to giveup your iniatiaves brought for the family they lost their loveones in this civil war.keep it up your goodwork to the society.

    ReplyDelete
  4. பயங்கரவாதம் ஒழிக்கப்பட்டு விட்டது, புலிகளுக்கு புனர்வாழ்வு அளிக்கப்பட்டுள்ளது என்று கூறுபவர்கள் ஏன் இன்னும் இந்த நாட்டு பிரஜைகளான முன்னாள் போராளிகளையும், ( இவர்களை ஒரு சாரார் பயங்கரவாதிகள் என்றும் மறு சாரார் போராளிகள் என்றும் கூறுகிறார்கள் எம்மை பொறுத்தவரை அது முடிந்த கதை) அவர்களது குடும்பத்தாரையும் புறந்தள்ளுகிறார்கள் என்பது புரியவில்லை. ஆக அவர்களும் இந்த நாட்டு பிரஜைகள் தான். அவர்களது தேவைகள், பிரச்சினைகள் நிட்சயம் நிறைவேற்றப்பட வேண்டும். இந்த விடயம் ஒரு மனித நேய கண்ணோட்டத்துடன் அணுகப்பட வேண்டும். அவர்களது சுய கெளரவம் மதிக்கப்பட வேண்டும். அப்படி இல்லையாயின் அவர்கள் மீண்டும் அவர்களது போராட்டத்தை கையில் எடுப்பதை தவிர வேறு வழி இல்லை. இது தான் நியதி.

    ReplyDelete
  5. பயங்கரவாதம் ஒழிக்கப்பட்டு விட்டது, புலிகளுக்கு புனர்வாழ்வு அளிக்கப்பட்டுள்ளது என்று கூறுபவர்கள் ஏன் இன்னும் இந்த நாட்டு பிரஜைகளான முன்னாள் போராளிகளையும், ( இவர்களை ஒரு சாரார் பயங்கரவாதிகள் என்றும் மறு சாரார் போராளிகள் என்றும் கூறுகிறார்கள் எம்மை பொறுத்தவரை அது முடிந்த கதை) அவர்களது குடும்பத்தாரையும் புறந்தள்ளுகிறார்கள் என்பது புரியவில்லை. ஆக அவர்களும் இந்த நாட்டு பிரஜைகள் தான். அவர்களது தேவைகள், பிரச்சினைகள் நிட்சயம் நிறைவேற்றப்பட வேண்டும். இந்த விடயம் ஒரு மனித நேய கண்ணோட்டத்துடன் அணுகப்பட வேண்டும். அவர்களது சுய கெளரவம் மதிக்கப்பட வேண்டும். அப்படி இல்லையாயின் அவர்கள் மீண்டும் அவர்களது போராட்டத்தை கையில் எடுப்பதை தவிர வேறு வழி இல்லை. இது தான் நியதி.

    ReplyDelete

Powered by Blogger.