Header Ads



அமைச்­சர்கள் கூறும் கதை­களால், பாதாள கோஷ்­டிகள் பல­ம­டைந்து மக்­களே அச்­சத்தில் வாழ்கின்­றனர்

அர­சாங்­கத்திலுள்ள அமைச்­சர்கள் பாதாள கோஷ்­டி­க­ளுக்­காக வக்­கா­லத்து வாங்­கிக் ­கொண்டு மக்கள் நம்­பிக்­கையை இழந்து வரு­கின்­றனர். அர­சாங்கம் பாதாள கோஷ்­டி­களின் பக்கம் உள்ள நிலையில் மக்கள் அச்­சத்தில் உள்­ளனர் என ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்­சியின் சுயா­தீன அணியின் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் சந்­திம வீரக்­கொடி தெரி­வித்தார்.

கொழும்பில் நிகழ்­வொன்றில் கலந்­து­கொண்ட பின்னர் ஊட­கங்­க­ளுக்குக் கருத்து தெரி­விக்கும் போதே அவர் இதனைக் குறிப்­பிட்டார். 

 அவர் மேலும் கூறு­கையில்,  

இன்று நாட்டில் அனைத்து பிர­தே­சங்­க­ளிலும் பாதாள கோஷ்­டி­களின் செயற்­பா­டுகள் அதி­க­ரித்­துள்­ள­தாக ஊட­கங்­களில் செய்­திகள் வெளி­வ­ரு­வதை அவ­தா­னிக்க முடி­கின்­றது. கடந்த காலங்­களில் வடக்கில் இடம்­பெற்ற சம்­ப­வங்கள் இன்று நாடு முழுவதும் பரவி அனைத்து பகு­தி­க­ளிலும் ஆயு­தங்­க­ளுடன் துப்­பாக்கிச்சூடு­களை நடத்தி மக்­களை அச்­சு­றுத்தி வரு­கின்­றனர். 

எனினும் அர­சாங்­கத்திலுள்ள அமைச்­சர்கள் கூறும் கதை­களால் பாதாள கோஷ்­டிகள் பல­ம­டைந்து வருவதுடன் நாட்டு மக்­களே அச்­சத்தில் வாழ்கின்­றனர். அமைச்­சர்­களும் அதி­கா­ரி­களும் பாதாள கோஷ்­டி­களை இயக்­கிக்­கொண்டு அவர்­க­ளுக்கு வக்­கா­லத்து வாங்கி வரு­கின்­றனர். இதனால் பொதுமக்கள் அர­சாங்­கத்தின் மீதான நம்­பிக்­கையை  இழந்து வரு­கின்ற நிலை­மைகள் ஏற்­பட்­டுள்­ளள. 

ஐக்­கிய தேசியக் கட்­சியைப் பொறுத்தவரையில் அவர்கள் அனைத்து சந்­தர்ப்­பங்­க­ளிலும் பாதாள கோஷ்­டி­க­ளுடன் இணைந்து அர­சியல் செய்த வர­லாறே உள்­ளது. அவர்கள் அதி­கா­ரத்­துக்கு  வந்­த­வுடன் நாட்டில் பாதாள கோஷ்­டி­களின் ஆதிக்கம் தலை­தூக்கும் என்­பது அனை­வரும் அறிந்த விட­யமே. நாளுக்கு நாள் பாதாள கோஷ்­டி­களின் செயற்­பா­டுகள் அதி­க­ரித்துச் செல்லும்.  இப்­போதும் அவ்­வாறே இடம்­பெற்று வரு­கின்­றது. பட்­டப்­ப­கலில் பாதாள கோஷ்­டி­களின் செயற்­பா­டுகள் அரங்­கேறி வரு­கின்­றன. 

கடந்த காலங்­களில் முன்­னைய ஆட்­சியில் அடக்­கு­மு­றைகள் இருந்த கார­ணத்­தால் தான் ஆட்சி மாற்றம் ஒன்றை மக்கள் ஏற்படுத்தினர். எனினும் இந்த ஆட்சியில் மேலும் மோசமாக அடக்குமுறைகள் இடம்பெற்று வருகின்றன. ஆகவே இன்று நாட்டில் நிலவும் மோசமான நிலைமைக்கு இந்த அரசாங்கம் பொறுப்புக்கூறியாக வேண்டும் என்றார்.

1 comment:

Powered by Blogger.