Header Ads



உயிர் அச்சமே, கோத்தபாயவுக்கு எதிரான வழக்குகளில் இருந்து நீதிபதிகள் விலக காரணம்

முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்சவுக்கு எதிரான வழக்கு விசாரணைகளில் இருந்து நான்கு நீதிபதிகள் விலகியுள்ளதாகவும் எந்த அச்சம் காரணமாக இவர்கள் விலகினர் என அமைச்சர் ராஜித சேனாரத்ன கேள்வி எழுப்பியுள்ளார். 

பத்தரமுல்லையில் நேற்று நடைபெற்ற வைபவம் ஒன்றில் பேசும் போதே அவர் .இதனை கூறியுள்ளார். 

முன்னாள் பாதுகாப்புச் செயலாளருக்கு எதிரான வழக்கு அடுத்த நவம்பர் மாதம் வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. நான்கு நீதிபதிகள் வழக்கு விசாரணையில் இருந்து விலகியுள்ளனர். உலக வரலாற்றில் கியூபாவில் இருந்த மாபியா குழு தலைவர் ஒருவரை நீதிமன்றத்தில் விசாரணைக்கு ஆஜர்ப்படுத்திய போதே நீதிபதி ஒருவர் விசாரணைகளில் இருந்து விலகினார். கொலை செய்யப்படலாம் என்ற அச்சம் காரணமாக அந்த நீதிபதி விலகினார். 

எனினும் எமது நாட்டின் நான்கு நீதிபதிகள் எந்ந அச்சத்தில் விலகினர்?. இதுதான் உண்மையான யாதார்த்தம் எனவும் ராஜித சேனாரத்ன குறிப்பிட்டுள்ளார்.

1 comment:

  1. If the Govt. cannot find the judges to hear GR's case, what is the use of the Govt.....

    ReplyDelete

Powered by Blogger.