Header Ads



ஜனாதிபதி வேட்பாளர் பற்றி, அவசரப்பட வேண்டாம் - மைத்திரிபால

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் சார்பில் நிறுத்த போகும் வேட்பாளர் யார் என்பது குறித்து தற்போது அவசரப்பட தேவையில்லை என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதித் தேர்தல் அறிவிக்கப்பட்ட பின்னரே வேட்பாளர் யார் என்பது தொடர்பான முடிவுக்கு வர வேண்டும் எனவும் அவர் கூறியுள்ளார்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் நேற்று முன்தினம் நடைபெற்ற நாடாளுமன்ற உறுப்பினர்கள் அல்லாத ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் தொகுதி அமைப்பாளர்கள் கூட்டத்தில் ஜனாதிபதி இதனை கூறியுள்ளார்.

ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் மறுசீரமைப்பு நடவடிக்கைகளின் தற்போதைய நிலவரம் தொடர்பாக இதன் போது விரிவாக கலந்துரையாடப்பட்டுள்ளது.

தமது தொகுதிகளில் கட்சி பணிகளை செய்யும் போது ஏற்படும் பிரச்சினைகள் பற்றி தொகுதி அமைப்பாளர்கள் ஜனாதிபதிக்கு தெரியப்படுத்தியுள்ளனர்.

இதன் போது ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் யார் என்பது குறித்து தொகுதி அமைப்பாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்துள்ள ஜனாதிபதி, ஜனாதிபதித் தேர்தலுக்கு இன்னும் ஒன்றரை வருடங்கள் இருப்பதால், தற்போது அது பற்றி அவசரப்பட தேவையில்லை எனக் குறிப்பிட்டுள்ளார்.

No comments

Powered by Blogger.