Header Ads



ஞானசாரருக்கு எதிரான தண்டனை, நாளை அறிவிக்கப்படுகிறது

சந்யா எக்­னெ­லி­கொ­டவை, ஹோமா­கம நீதிவான் நீதி­மன்றில் வைத்து  திட்டி அச்­சு­றுத்­தி­யமை தொடர்பில் பொது பல சேனா அமைப்பின் செய­லாளர் கல­கொட அத்தே ஞான­சார தேரர் குற்­ற­வா­ளி­யாக அறி­விக்­கப்­பட்­டுள்ள நிலையில், அவ­ருக்கு எதி­ரான தண்­டனை நாளை -14- அறி­விக்­கப்­ப­ட­வுள்­ளது.  ஹோமா­கம நீதிவான் உதேஷ் ரண­துங்க இந்த தண்­ட­னையை நாளை அறி­விக்­க­வுள்ளார்.

  குற்­ற­வா­ளி­யாக அறி­விக்­கப்­பட்ட கல­கொட அத்தே ஞான­சார தேரரின் கைவிரல் ரேகை முன்­ன­தாக  பெற்­றுக்­கொள்­ளப்­பட்­டுள்ள நிலையில், ஏற்­க­னவே அறி­வித்­தி­ருந்த படி நாளை இந்த தண்­டனை அறி­விக்­கப்­பட்­வுள்­ளது.

கடந்த 2016 ஆம் ஆண்டு ஜன­வரி 25 ஆம் திகதி ஹோமா­கம நீதிவான் நீதி­மன்றில் இடம்­பெற்ற எக்­னெ­லி­கொட கடத்தல், காணாமல் ஆக்­கப்­பட்ட விவ­காரம் தொடர்­பி­லான வழக்கு விசா­ர­ணை­களின் பின்னர் நீதி­மன்றில் வைத்து எக்­னெ­லி­கொ­டவின் மனைவி சந்­யாவை திட்டி அச்­சு­றுத்­தி­யமை தொடர்பில் ஹோமா­கம பொலி­ஸாரால் இந்த வழக்கு தண்­டனை சட்டக் கோவையின் 386 மற்றும் 486 ஆம் அத்­தி­யா­யங்­க­ளுக்கு அமைய  தாக்கல் செய்­யப்­பட்­டது. 

இந் நிலையில் வழக்கு விசா­ர­ணை­களில் ஞான­சார தேர­ருக்கு எதி­ரான இரு குற்­றச்­சாட்­டுக்­களும் சந்­தே­கத்­துக்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டுள்ளதாக அறிவித்தே நீதிவான் ஞானசார தேரரை குற்றவாளியாக அறிவித்திருந்தமை சுட்டிக்காட்டத்தக்கது


2 comments:

  1. நீதித்துறைக்கு மிகவும் சவாலான விடயம், உங்களின் நீதியும் படிப்பும் நாளைதான் தெறியவரும். பொருத்திருந்து பார்போமே!
    ஏதும் தடங்குகள் வருமென்றே நினைக்கிறோம் அல்லது உப்பு சப்பில்லாத தண்டமையாக ஏதும் வரும்.

    ReplyDelete
  2. நீதிமன்றத்தின் தன்னதிகாரம் எப்போதோ செத்துப்போய்விட்டது. அதனால் தலை நிமிர முடியுமா என்பதே கேள்வி. எந்தப் புற்றிலிருந்து எந்தப் பாம்பு வந்து ஆசாமிக்கு அடைக்கலம் கொடுக்குமோ தெரியாது!

    ReplyDelete

Powered by Blogger.