Header Ads



தமிழர்களும், முஸ்லிம்களும் இணக்கப்பாட்டுக்கு வரமுடியாவிட்டால்...??

கிழக்கில் தமிழர்களும் முஸ்லிம்களும் இணக்கப்பாட்டுக்கு வரமுடியா விட்டால் வட கிழக்கு மாகாணம் தமிழர் அலகு, முஸ்லிம்களின் அலகு, சிங்களவர் அலகு என பிரிந்து செல்வது மட்டும் தான் தெரிவாக இருக்கும் என பிரபல சமூக ஆய்வாளரும் சர்வதேச எழுத்தாளருமான ஜெயபாலன் தெரிவித்துள்ளார். 

வட கிழக்கு இணைப்பும் முஸ்லிம்களும் - எனது நிலைபாடும் (NORTH EAST MEAGER THE MUSLIMS AND MY STAND) என்ற அறிக்கையில் அவர் இந்த கருத்தினை முன்வைத்துள்ளார். 

அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, 

வட கிழக்கு முஸ்லிம்கள் தொடர்பாக முஸ்லிம்கள் தான் தீர்மானம் எடுக்க வேண்டுமே ஒழிய தமிழர்கள் தீர்மானம் எடுக்க உரிமை இல்லை என நெடுங்காலமாக குரல் கொடுத்து வருகிறவன் நான் என்பதை அறிவீர்கள். அப்படிப்பட்ட நான் எப்படி கிழக்கு தமிழர்கள் தொடர்பாக முஸ்லிம்கள் முடிவெடுக்க முடியும் என சொல்ல முடியும்? 

வட கிழக்கு முஸ்லிம்களுக்கும் வட கிழக்கு தமிழனுக்கும் சுய நிர்ணய உரிமை உள்ளது என்பது தான் என் நிலைபாடு. கிழக்கில் பெரும்பாலான தமிழர்கள் கட்சி வேறுபாடுகளைக் கடந்து வடக்குடன் இணைவதையே கொள்கையாகக் கொண்டுள்ளனர். 

இதுபற்றி உங்களுக்கு சந்தேகம் உள்ளதா? இணைய வேண்டாம், எங்களோடு இருங்கள் என முஸ்லிம் மக்கள் கிழக்குத் தமிழருடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டிருக்கிறார்களா? அப்படி ஒரு பேரியக்கம் செயல்பட்டால் சொல்லுங்கள். மகிழ்ச்சி அடைவேன். இணைவது பற்றியும் முஸ்லிம் அலகுகள் பற்றியும் முஸ்லிம்களின் நிலைப்பாடு பற்றியும் ஆய்வுகளும் இயக்கங்களும் நடந்தாலும் சொல்லுங்கள். மனப்பூர்வமாக உதவுவேன், அதை விடுத்து கிழக்கு தமிழர் வடக்குடன் இணைய முடியாது என்று அவ்வப்போது தீர்மானம் சொல்வதை நான் எப்படி ஆதரிக்க முடியும்? கிழக்கு தமிழருடன் பேசுங்கள் சுதந்திரமான பேச்சுவார்த்தை நிகழ்வதற்கும் சுதந்திரமாக முடிவுகள் எடுப்பதற்கும் நான் உழைக்கிறேன். இதைத்தான் நான் சொல்ல முடியும். 

தனி அலகுகள் பற்றி ஆய்வு பேச்சு அரசியல் வேலைகளில் ஈடுபடுங்கள் ஆதரிக்கிறேன். ஒன்றும் செய்ய மாட்டோம் தமிழர் என்ன செய்ய வேண்டுமென முடிவெடுக்கும் அதிகாரம் எங்களுக்கு உண்டு என்று சொன்னால் நான் என்ன சொல்ல முடியும். 

இது போர்க்காலத்தில் உருவான மனநிலை. முதலில் அரசியல் ஈடுபாடுள்ள சில முஸ்லிம் அறிஞர்களும் சில இளைஞர்களும் போர் எப்பவோ முடிந்துவிட்டது என்பதை உள்வாங்கி செயற்பட வேண்டும். 

சமாதான காலத்து மனநிலையால் மட்டுமே சமாதான காலத்தின் புதிய சமன்பாடுகளையும் யதார்த்தத்தையும் புரிந்து கொண்டு சமாதான காலத்தில் வெற்றிகரமாகச் செயல்பட முடியும். 

வடக்கு கிழக்கு இணைப்பு வேண்டாம் என்கிற கோரிக்கை கிழக்குத் தமிழர்கள் கிழக்கு முஸ்லிம்களுடன் இணைய வேண்டும் என்கிற கோரிக்கையாகும். ஒரு கோரிக்கை இரு சாராரும் பேச்சுவார்த்தைகள் மூலம் ஒற்றுமைப்படுவதன் அடிப்படையில் வென்றெடுக்கப்படலாம். 

ஆனால் ஒரு கோரிக்கையை போர்க் காலத்தில் கூட உத்தரவாக முன்வைக்க முடியாது. இது சமாதான காலம். ஒருதலை பட்சமாக தமிழர்கள் விரும்பினாலும் இணைய முடியாது எனச் சொல்ல முடியாது என்பதை முஸ்லிம்கள் புரிந்து கொள்ளுதல் அவசியம். 

கிழக்கு முஸ்லிம்கள் கிழக்கு தமிழர்களை வென்றெடுத்தால் மட்டுமே கிழக்கு தமிழர்கள் வடக்கை பிரிந்து முஸ்லிம்களோடு இணையும் சூழலையை உருவாக்க முடியும். 

அப்போது தான் கிழக்கு தமிழன் வடக்குடன் இணையாமல் எங்களோடு இணைவார்கள் என்று முஸ்லிம்கள் சொல்ல முடியும். அத்தகைய ஒரு சூழல் உருவானால் நிச்சயம் நான் அதனை ஆதரிப்பேன். அப்போது மட்டும் தான் முஸ்லிம்களின் கோரிக்கை நியாயமானதாகவும் சாத்தியமானதாகவும் மாறும். 

கிழக்கில் தமிழரும் முஸ்லிம்களும் வட கிழக்கு இணைப்புக்குள் அல்லது வடக்கோடு இணையாமல் வாழ்வதென இணக்கப்பாட்டுக்கு வந்தால் அந்த தீர்வு எதுவாக இருந்தாலும் நான் அதை ஆதரிப்பேன். 

இந்த சமாதான காலத்தில். கிழக்கு தமிழர்களும் கிழக்கு முஸ்லிம்களும் ஒருவருக்கு ஒருவர் விட்டுக்கொடுத்து இணைந்து வாழ முடிவெடுத்தால் மட்டுமே தார்மீக ரீதியாக வட கிழக்கு இணைப்பை தவிர்த்தல் சாத்தியமாகலாம். 

எனக்கு முஸ்லிம்களும் தமிழர்களும் சமத்துவமாக சமாதானமாக நீதியுடன் வாழவேண்டும் என்பது தான் இலட்சியக் கனவாக உள்ளது. இனத்துவ அரசியலில் குயில்களுக்கு இடமில்லை. அவரவர் கூட்டை அவரவர் தான் கட்ட வேண்டும். தமது கூட்டை தாமே கட்டும் பணியில் இருக்கிற இனங்களுக்குத்தான் நண்பர்களால் கூட உதவிட முடியும் என அந்த அறிக்கையில் மேலும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. 

6 comments:

  1. ஐயா அவர்களே,
    கிழக்கு மாகாண முஸ்லிம் என்பவர்கள் யார்? ஒரு காலத்தில் தமிழராக இருந்து குறுகிய காலத்தில் மாறியவர்கள் தானே. இலங்கையிலே யார் மீதோ உள்ள கோபத்திலும் பல பிரித்தாளும் சதிகளாலும் தான் முஸ்லீம் எனும் ஒரு இனத்தை இலங்கையிலே தோற்றுவிக்கின்றார்கள். தமிழர் எனும் இனத்தை மதத்தை கொண்டு பல பிரிவாக பிரிக்கலாம் என எண்ணி அதிலே இலங்கை முஸ்லீம் விவாகரத்தில் வெற்றியும் பெற்றுள்ளார்கள். அதாவது தமிழர் பலத்தை குறைத்தது மாத்திரமின்றி தமிழருக்கு எதிராகவே கொண்டு வந்து நிறுத்திவிட்டார்கள். எம்மதமும் சம்மதம் என வாழ்ந்தவர்கள் தான் நாங்கள். அத்தகு கிடைத்த பரிகாரத்தை நன்றாக அனுபவித்துக்க்கொண்டு வருகின்றோம். எனவே சதிவலைக்குள் வீழ்ந்தவர்கள் தான் தெளிவு பெறவேண்டியுள்ளது. அதாவது இலங்கை முஸ்லிம்கள் இந்த யதார்த்தத்தை உணர்ந்து செயட்பட முன்வரவேண்டும். நானறிந்து மதத்தை வைத்து ஒரு தேசிய இனம் உருவாக்கப்பட்டதாக சரித்திரம் கிடையாது. மொழியின் பால்தான் மனிதர்களின் சகலதும் தீர்மானிக்கப்படுகின்றது. அவனை நல்வழிப்படுத்தவும் தூய்மையாகவும் ஆக்க தான் இந்த மார்க்கங்கள்.இலங்கை முஸ்லிம்கள் இலங்கையை தாண்டி போனால் நீங்கள் யாரென கேட்டால் நான் முஸ்லீம் என சொல்லிவிடாதீர்கள். உங்களை உங்கள் வாய் வழி மொழி மூலம் தான் அடையாளப்படுத்த வேண்டும். தமிழரும் முஸ்லிம்களும் ஒன்று சேர்வது காலத்தின் கட்டளை. எங்கிருந்தோ வந்த மலே இனத்தவர்களின் வகிபாகம் இந்த பிரித்தாளும் தந்திரத்தின் முக்கிய அம்சம்.
    மீண்டும் மீண்டும் தமிழரின் கோரிக்கைகளை இந்த இஸ்லாமிய தமிழர்கள் உதாசீனம் செய்தால் பேசும் தாய் மொழிக்கு துரோகம் செய்தவர்களாக மாத்திரமின்றி இஸ்லாத்தையும் தாய் மொழி போல் சொந்த அரசியலுக்காக ஒரு காலத்தில் கை விடுபவர்களாகத்தான் நோக்க படுவார்கள்.

    ReplyDelete
  2. நடுநிலையான அறிக்கை. கிழக்கின் நிலம் இன விகிதாசாரத்தின் படி மூவினங்களுக்கும் பகிர்ந்தளித்து வடக்கோடு கிழக்கு தமிழர்கள் இணைந்தால் அது முஸ்லிம்களுக்கு எந்த விதத்திலும் பிரச்சினை இல்லை

    ReplyDelete
  3. ஜெயபாலன் அவர்கள் பக்கச்சார்பின்றி தன் கருத்தை முன்வைப்பவர், வடக்கு கிழக்கு இணைப்பில் முஸ்லிம்களது நிலைப்பாடு முஸ்லீம் காங்கிரஸ் தலைவர் அஷ்ரப்பின் காலத்திலேயே மிகத்தெளிவாக சொல்லப்பட்டுவிட்டது "நிபந்தனையுடனான இணைப்பு" இது புலிகளின் கிழக்கின் தலைவரும் தற்போதைய கிழக்கின் முக்கிய தமிழ் அரசியல் தலைவருமாகிய பிள்ளையானால் நூற்றுக்கணக்கில் முஸ்லிம்கள் பள்ளிவாயலில் தொழுதுகொண்டிந்தபோது படுகொலைசெய்யப்பட்டபோதே சொல்லப்பட்டது.

    முஸ்லிம்களது நிலைப்பாடு இன்னும் மாறவில்லை. அஷ்ரப்பினதும் யுத்தம் முடிவானதனும் பின்னரது தமிழ் சகோதர அரசியல்வாதிகளது நிலைப்பாடுகள் மிகவும் அவநம்பிக்கையைத்தருவதாகவே முஸ்லிம்களிடத்தில் பார்க்கப்படுகின்றது. மேலும் முஸ்லிம்களது அரசியல் சமய கலாச்சார உரிமைகளுக்கு எதிரான செயல்பாடுகளால் தமிழர்கள்தான் கிழக்கிலிருந்து பிரிந்து செல்லவேண்டிவரும். ஒருபகுதியில் முஸ்லிம்களை தமிழர்கள் ஆண்டால் மறுபகுதியில் தமிழர்களை முஸ்லிம்கள் ஆள்வதில் என்ன தவறு.

    கௌரவ சம்பந்தன், மாவைசேனாதிராஜா, சுமந்திரன் போன்றத்தலைவர்கள் தொடர்ந்தால் முஸ்லீம் தமிழ் உறவு வளரும் என்பதில் சந்தேகமில்லை, மாறாக இந்த தமிழ் சமூகம் ஒற்றுமை பேசும் தமிழ் தலைவர்களை தூக்கிவீச முனைவது, தமிழ் முஸ்லீம் உறவுகளையும்தான் இவர்கள் தூக்கி வீச முனைகிறார்கள் என நினைக்கவேண்டியுள்ளது.

    முஸ்லிம்களுக்கு வடக்கு கிழக்கு இணைப்பு தேவையில்லை, தமிழ் அரசியல் தலைவர்கள்தான் இதனைக்கேட்கின்றார்கள், ஆகவே முஸ்லிம்களது நம்பிக்கைக்குரியவர்களாக தமிழரசுக்கட்சி அரசியல் காலத்தமிழர்கள் இருந்திருக்கிறார்கள், அவ்வாறான மக்களையும் தலைவர்களையும் முஸ்லிம்கள் மீண்டும் காணும்போதுதான் தானாக முன்வந்து இணைப்பிட்கு ஆதரவளிப்பர்.

    ஆனால் தற்போதைய தமிழ் முஸ்லீம் அரசியல் சிந்தனைகள் வேறுவிதமானவையாகும். ஆகவே வடக்கு கிழக்கு இணைப்பதற்கக மட்டுமன்றி இருசமூக ஒற்றுமைக்காகவும் இரு சமூகமும் பாடுபடுவதுடன், தமிழ் சமூகம் நினைப்பதுபோன்று முஸ்லீம் சமூகமும் தங்களைத்தானே ஆளக்கூடிய ஒருஅலகின் மூலம் தீர்வுக்கு முயர்ச்சிக்கவேண்டும்.

    ReplyDelete
  4. Super Idea.
    கிழக்கின் தமிழ் அலகை வட மாகாணத்துடனும், முஸ்லிம்-சிங்கள அலகுகளை ஊவா மாகாணத்துடனும் இணைத்துவிட்டால், எல்லா பிரச்சனைகளும் இலகுவாக முடிந்துவிடும்.

    ReplyDelete
  5. தமிழ்ப் பயங்கரவாதம் எப்போதோ முடிந்து விட்டது.

    தமிழ்ப் பயங்கரவாதத்தை ஊட்டி வளர்த்ததும், இந்தியா.

    அழித்ததும் இந்தியா.

    தமிழ்ப் பயங்கரவாதத்தை அழிக்க உதவிய இந்தியா, இலங்கையில் உள்ள பயனற்ற மாகாண சபைகளையும் அழிக்க உதவினால், எல்லாப் பிரச்சனைகளும் தீர்ந்து விடும்.

    வட, கிழக்கு மாகாண சபைகள் பயனற்றது.

    ReplyDelete
  6. This comment has been removed by the author.

    ReplyDelete

Powered by Blogger.