Header Ads

"பிறை காணும் விவ­கா­ரத்தை, முஸ்லிம் சமய விவ­கா­ர அமைச்சு கையேற்கும்"

ஷவ்வால் மாத தலைப்­பிறை தொடர்­பாக எழுந்­துள்ள பிரச்­சி­னைகள் சமூ­கத்தில் பல எதிர்­வ­லை­களை ஏற்­ப­டுத்­தி­யுள்­ளன. இவற்­றுக்கு பதி­ல­ளிக்க வேண்­டிய பொறுப்பு முஸ்லிம் சமய விவ­கார அமைச்­சையே சார்ந்­துள்­ளது. இந்­நி­லையில் எதிர்­வரும் காலங்­களில் பிறை சம்­பந்­த­மான தீர்­மா­னங்­களை அமைச்சே மேற்­கொள்ளும் என அஞ்சல், அஞ்சல் சேவைகள் மற்றும் முஸ்லிம் சமய விவ­கார அமைச்சர் எம்.எச்.ஏ. ஹலீம் தெரி­வித்தார்.

ஷவ்வால் மாத தலைப்­பிறை தொடர்­பாக சமூ­கத்தில் ஏற்­பட்­டுள்ள பிள­வுகள் தொடர்பில் வின­வி­ய­போதே அமைச்சர் எம்.எச்.ஏ.ஹலீம் ‘விடி­வெள்­ளி’க்கு இவ்­வாறு தெரி­வித்தார். அவர் தொடர்ந்தும் பதி­ல­ளிக்­கையில்;

“கடந்த காலங்­களில் முஸ்லிம் சமய விவ­கா­ரங்­க­ளுக்­கென தனி­யான ஒரு அமைச்சு இல்­லா­தி­ருந்த காலப்­ப­கு­தியில் பெரிய பள்­ளி­வாசல் மற்றும் அகில இலங்கை ஜம்­இய்­யத்துல் உலமா என்­பன இணைந்து பிறை தொடர்­பான தீர்­மா­னங்­களை மக்­க­ளுக்கு உத்­தி­யோ­க­பூர்­வ­மாக அறி­வித்­தன. ஆனால் தற்­போது முஸ்லிம் சமய விவ­கா­ரங்­க­ளுக்­கென தனி­யான ஒரு அமைச்சு உள்­ளது. எனவே இந்த அமைச்சே பிறை காணும் விவ­கா­ரத்தை கையேற்கும்.

அமைச்சின் கீழ் இயங்கும் முஸ்லிம் சமய விவ­கார திணைக்­க­ளத்தின் பணிப்­பாளர் தீர்­மா­னங்­களை வெளி­யிடும் அதி­கா­ரி­யாக செயற்­ப­டுவார்.

கொழும்பு பெரிய பள்­ளி­வா­சலும் தலைப்­பிறை பார்க்­கலாம். ஆனால் தீர்­மா­னங்­களை முஸ்லிம் சமய பண்­பாட்­ட­லு­வல்கள் திணைக்­கள பணிப்­பா­ளரே வெளி­யி­டுவார். பிறை பார்க்கும் குழுவில் பெரிய பள்­ளி­வாசல் பிர­தி­நிதி, சூரா சபை பிர­தி­நிதி, உலமா சபை பிர­தி­நி­திதி, வான­சாஸ்­திர விஞ்­ஞா­னிகள் அடங்­கி­யி­ருக்­கலம். ஆனால், முஸ்லிம் சமய விவ­கார அமைச்சே சகல பொறுப்­பு­க­ளையும் கையாளும்.

இம்­முறை ஷவ்வால் மாத பிறை தீர்­மா­னிக்கும் விட­யத்தில் நடந்­தது என்ன? ஏன் குள­று­ப­டிகள் ஏற்­பட்­டன என்­பது தொடர்பில் விசா­ர­ணை­யொன்­றினை நடத்­து­வ­தற்கும் தீர்­மா­னிக்­கப்­பட்­டுள்­ளது. அந்த விசா­ர­ணையின் பின்பு எதிர்­கா­லத்தில் இவ்­வா­றான தவ­றுகள் இடம்­பெ­றா­தி­ருப்­ப­தற்கு வாய்ப்பு ஏற்­படும்.

முஸ்லிம் சமய விவா­க­ரங்­க­ளுக்­கென தனி­யான ஒரு அமைச்சு இல்­லா­தி­ருந்த காலத்தில் பெரிய பள்­ளி­வாசல் பொறுப்­பாக இருந்து இந்தப் பணியை முன்­னெ­டுத்­தி­ருக்­கலாம். ஆனால், தற்­போது முஸ்லிம் சமய விவ­கா­ரத்­துக்கு தனி­யான அமைச்­சொன்று இருக்­கி­றது. எனவே இந்த விவ­கா­ரத்தை எதிர்­வரும் காலங்­களில் முஸ்லிம் விவ­கார அமை­சசே கையாளும்.

சமூ­கத்தில் பிள­வு­களை உரு­வாக்க ஒரு­போதும் இட­ம­ளிக்­கக்­கூ­டாது. இவ்­வி­வ­கா­ரத்தில் எமக்குள் நாம் ாம் பிரச்சினைப்பட்டுக் கொள்வது ஒருபோதும்­ அனுமதிக்கப்படாது.

பல்வேறு சமூக நல அமைப்புகளும் புத்திஜீவிகளும் பிறைப் பார்த்தல் தொடர்பாக பல்வேறு ஆலோசனைகளை முன் வைத்துள்ளார்கள். இந்த ஆலோசனைகளும் கவனத்திற் கொள்ளப்படவுள்ளன என்றார்.

மற்றும் முஸ்லிம் சமய விவ­கார அமைச்சர் எம்.எச்.ஏ. ஹலீம் தெரி­வித்தார்.

 ARA.Fareel

8 comments:

  1. very good no need this fithna group

    ReplyDelete
  2. பிறை பிரச்சினை தொடர்பாக இது ஒரு சிறந்த முடிவாக அமையலாம் எனக் கருதுகின்றேன்.

    ReplyDelete
  3. பிறை பிரச்சினை தொடர்பாக இது ஒரு சிறந்த முடிவாக அமையலாம் எனக் கருதுகின்றேன்.

    ReplyDelete
  4. அல்ஹம்துலில்லாஹ்...
    நல்லதொரு நகர்வு..
    இனிமேல் தான் ACJU க்கு நிம்மதியான காலம்.
    இனி....
    சர்வதேச பிறைக்காரர்கள் அரசாங்கத்தோடு தான் மோத வேண்டும்...
    வெச்சாச்சி ஆப்பு

    ReplyDelete
  5. Good நல்ல முடிவு

    ReplyDelete
  6. முஸ்லீம் விவகார அமைச்சு என்பது ஒரு சிங்கள அரசாங்கத்துக்குள் ( சட்டம் ஒழுங்கை சரியாக நிறைவேற்றாத அரசாங்கம், அதை தட்டிக் கேட்க வக்கில்லாத அமைச்சர்கள், அரசியல் வியாபாரிகள். முதுகெலும்பில்லாதவர்கள் ) இருக்கும் ஒரு அமைச்சு இதில் 100% சிங்களவர்களே அதிகாரம் செலுத்தவும் வாய்ப்பு இருக்கிறது. இது தன் கையால் தனக்கே சூனியம் செய்வது போல் இருக்கிறது. இது ஒரு மடத்தனமான சிந்தனையாகும். முஸ்லிம்களின் மார்க்க நிர்வாக சபையும் அதன் தலைமைத்துவம்தான் இதை தீர்மானிக்கும். முடிந்தால் அந்த மார்க்க நிர்வாக சபையையும், தலைமைத்துவத்தையும் சீர்படுத்துங்கள்.

    ReplyDelete
  7. அமைச்சருக்கு அடிநுனி எதுவும் தெரியாமல் புலம்புவது அவருடைய கூற்றில் இருந்து தௌிவாகின்றது. ஆரம்பத்தில் எம்.எச்.முஹம்மத் முஸ்லிம் சமய கலாசார அமைச்சராக இருந்த நேரம் இதே நோன்பு முடிந்து சவ்வால் மாதப்பிறை விவகாரத்தில் தனது சொந்த அபிப்பிராயப்படி -முற்றிலும் அரசியலை மையமாகவைத்து பிறைகண்டதாகவும் அடுத்த நாள் பெருநாள் என பிரஸ்தாபித்தபின் வந்த பின்விளைவுகளின் பெறுபேறுதான் பிறை பார்த்தல் விடயத்தை முற்றிலும் அரசியலிலிருந்து வேறாக்கி அதனை அதுபற்றிய அறிவும் அனுபவமும் உள்ள உலமாக்கள் உற்பட அறிஞர்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்ற தீர்மானத்தின் படிதான் இப்போது நடைபெறுகிறது. அண்மைக்கால நிகழ்வுகள் கூட அமைச்சருக்குத் தெரியாவிட்டால், தெரியாதவற்றைப் பேசி மக்களிடம் இழிவையும் கேவலத்தையும் சம்பாதிக்காது அவரை நெறிப்படுத்துவது சூழ்ந்திருப்பவர்களின் பொறுப்பு.

    ReplyDelete
  8. arapha ground how you will count so international moon is the reason dont try to do senseless argument

    ReplyDelete

Powered by Blogger.