Header Ads



மஹிந்த பிரதமரானால், ஜனாதிபதி தேர்தல் தேவையில்லை - வாசுதேவ

ஜனாதிபதித் தேர்தல் ஒன்றை நடாத்தவிடாமல் ஆட்சியைக் கைப்பற்றும் முறைமையொன்று குறித்து மஹிந்த அணி பாராளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்தார்.

தற்போதைய அரசாங்கத்தை வீழ்த்துவதற்கு அரசாங்கத்துக்கு ஆதரவளிப்பவர்களை எந்தவகையிலாவது எதிரணியில் இணைத்துக் கொள்ள வேண்டும்.

பாராளுமன்றத்தில் முன்வைக்கப்படும் நிதி அறிக்கைகளை தோல்வியடையச் செய்து அரசாங்கத்துக்குள்ள ஆதரவை இல்லாமல் செய்ய வேண்டும். இதனையடுத்து புதிய அரசாங்கமொன்றை அமைப்பதற்கு ஜனாதிபதி மஹிந்தவை அழைக்கச் செய்ய வேண்டும்.

மஹிந்த ராஜபக்ஷ பிரதமராக ஆட்சிப் பொறுப்பை ஏற்பார். பின்னர் ஜனாதிபதித் தேர்தல் ஒன்றை நடாத்தாமலேயே நிறைவேற்று ஜனாதிபதி முறைமையை நீக்கி பிரதமர் ஆட்சியொன்றை ஏற்படுத்த நடவடிக்கை எடுப்போம். பின்னர் மஹிந்த ராஜபக்ஷ தொடர்ந்தும் பிரதமராக நாட்டை ஆட்சி செய்வார் எனவும் வாசுதேவ நாணயக்கார இன்று  விளக்கமளித்தார்.

1 comment:

  1. Your 1000%correct.yes mahinda regiment come to the power.after that no any election at all.They are will rule the country for ever.ape rata iwarai.i.a.

    ReplyDelete

Powered by Blogger.