June 07, 2018

பிரபாகரனின் பெயரை உச்சரிக்க, தடை விதிக்க வேண்டும் - சம்பிக்க

புலிகளின் தலைவரின் பெயரை உச்சரிப்பதற்கும் தடை விதிக்கப்பட வேண்டும். இதற்கு ஜேர்மனியை முன்னுதாரணமாக எடுத்துக் கொள்ள முடியும் என்று அமைச்சர் சம்பிக்க ரணவக்க, தெரிவித்துள்ளார்.

மஹாரகமவில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய போது அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க இவ்வாறு தெரிவித்துள்ளார்.

சிலர் இன்று பயங்கரவாதிகளை நினைவுகூர முற்பட்டுள்ளனர். பயங்கரவாதிகளை நினைவுகூரும் அவர்கள் பயங்கரவாதிகளால் கட்டவிழ்த்து விடப்பட்ட மிலேச்சத்தனமான செயல்களுக்கான பொறுப்பையும் ஏற்க வேண்டும் என்பதையும் புரிந்து கொள்ள வேண்டும்.

இந்த நாட்டில் நாம் அனைவரும் ஒன்றாக வாழ வேண்டியது அவசியம். சகவாழ்வு அவசியம். ஆனால் யாராவது பிரிந்து செல்லவோ அதற்காக யுத்தம் புரியவோ தயார் என்றால் அதேபோல் முன்னைய பயங்கரவாதிகளின் பயங்கரவாதச் செயல்களை வீரதீர செயல்களாக கொண்டாட முற்படுவார்களானால், அதேபோல் பதிலளிக்க எமக்கும் நேரிடும்.

எமது நாட்டில் எதிர்காலத்திலும் மீண்டும் இவ்வாறான பிரச்சினைகளை ஏற்படுத்த பல தரப்பினர் முயற்சிக்கலாம். எனினும் கடந்த கால சம்பவங்களின் பாடங்களைக் கற்றுக் கொண்டு மீண்டும் ஒரு இரத்த ஆறு ஓடாத வண்ணம் தடுப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இரத்த ஆறு ஓடுவதை தடுத்துக் கொள்ள வேண்டும் என்பது அடிமைகளைப் போல் மண்டியிட்டுக் கொண்டு கடந்த காலங்களில் சில தலைவர்கள் நடந்து கொண்டது போல் அடிமை மனப்பான்மையுடன் செயற்பட வேண்டும் என்பது அல்ல.

தைரியமாக எழுந்து நின்று பயங்கரவாதத்திற்கு எதிராக போராடி உயிர் நீத்த பௌத்த தலைமை பிக்குகள், இராணுவத்தினர் உள்ளிட்ட அரச படையினரைப் போல் தைரியமாக முகம் கொடுத்து நாட்டில் நிரந்தர சமாதானத்தை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும்.

தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவரின் பெயரை உச்சரிப்பதற்கும் தடை விதிக்கப்பட வேண்டும். இதற்கு ஜேர்மனியை முன்னுதாரணமாக எடுத்துக் கொள்ள முடியும். பிரபாகரனின் எச்சங்கள் மீண்டும் ஆங்காங்கே முளைத்து வருகின்றன.

அவை மீண்டும் பலமாக தலைதூக்குவதைத் தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். இதற்கு அவற்றை முளையிலேயே கிள்ளி எறிய வேண்டியது அவசியம். இதற்கு ஏனைய நாடுகளிடமிருந்து பாடங்களை கற்றுக் கொள்ள வேண்டும்.

ஜேர்மனியில் இவ்வாறான நிலையொன்று ஏற்பட்டிருந்தது. அங்கு இன்றும் ஹிட்லரின் பெயரைக் கூட உச்சரிக்க முடியாது. அதேபோல் கம்போடிய போன்ற நாடுகளிலும் சர்வாதிகாரிகள் இருந்தனர். அவர்களின் பெயர்களையும் அந்த நாடுகளில் உச்சரிக்க முடியாது.

ஏனெனில் அந்த நாடுகள் அனைத்தும் சிந்திய இரத்தத்தினாலும், கண்ணீரினாலும் பாடங்களைக் கற்றுக் கொண்டிருக்கின்றன.

துரதிஸ்ட வசமாக எமது நாட்டில் பயங்கரவாதிகளை விடுதலைப் போராட்ட வீரர்களாக நினைவுகூருவதற்கு இடமளிப்பதன் ஊடாக நாம் பாரியத் தவறை இழைக்கின்றோம்.

அதனால் இந்த நாட்டில் அனைத்து ஜனநாயக உரிமைகளையும் பெற்று சுதந்திரமாக வாழக்கூடிய ஒரு சூழலை கட்டியெழுப்புவதை தடுக்க செயற்படும் தரப்பினருக்கு எதிராக இன, மத பேதமின்றி அனைவரும் அணி திரண்டு செயற்பட வேண்டிய காலகட்டம் எழுந்துள்ளது என தெரிவித்துள்ளார்.

7 கருத்துரைகள்:

பிரபாகரன் பயங்கரவாதி. சந்தேகமில்லை. ஆனால் இவர் தனது யாவாரத்தை வழமை போல் கச்சிதமாகச் செய்கின்றார். எரியும் நெருப்பில் எண்ணெய் ஊற்றும் பிரச்சனைகளின் பிதா மகன் அல்லவா?

உங்களைபோல அதி உச்ச துவேசவாதிகளை ஒழித்துக்கட்டினாலே இன் நாடு முன்னேறும். நீங்களெல்லாம் இருக்கும்வரை நிரந்தர சமாதானமென்பது காணல் நீரே!
யாரு யாருக்கு பயங்க்கரவாதி என்பதை நீங்கள் முடிவெடுக்க இயலாது.புலிகளுக்கு நீங்கள் சிங்கள அரசுகள் பயங்கரவாதிகளே!

இவனுடன் ஒப்பிட்டால் பிரபாகரன் ஓரளவு நல்லவன் என்று சொல்வது பிழை இல்லை.

@ justice ali,
யாசீர் அராஃபத் என்ன ஜனநாயக வாதியா?

Champika, Praba is not only a Tamil terrorist, he is a master killer.

You are worse than the Tamil terrorists.

சர்வதேச விசாரணையை முன்னெடுத்தால் யார் குற்றவாளிகளென பிடுத்து விடலாம்.

Modi, Trump, Putin, Basar Al Assad(Syria) also terrorists.

Post a Comment