June 28, 2018

கண்ணீரை சிந்தவைக்கும் உண்மைக் கதையும், அழிக்கப்பட வேண்டிய பாதாள உலகமும்

குழந்தை பிறந்ததும் வந்துவிடுவேன் எனக் கூறிக்கொண்டு அவசரமாக வைத்தியசாலையிலிருந்து சென்றார்.

ஆனால் அவர் வழங்கிய வாங்குறுதியை நிறைவேற்றவில்லை. 

பிரசவம் முடிந்த பின்னரும் அவர் என்னை வந்து பார்க்கவில்லை. 

தனக்கு பிறந்த இரட்டை குழந்தைகளை கணவர் பார்க்கும் போது ஏற்படும் மகிழ்ச்சி அளவற்றது அதற்காகவே காத்திருந்தேன்.

மாத்தறை கொள்ளைச்சம்பவத்தில் துப்பாக்கி பிரயோகத்தில் சிக்கிய நபரின் மனைவி வைத்தியசாலையில் பிரசவ அறையிலிருந்து கண்ணீர் மல்க பகிர்ந்து கொண்ட விடயங்கள் அனைவரையும் நெகிழச் செய்துள்ளது.

மாத்தறை போகஹகட்டுஹேன பகுதியில் இரண்டு பிள்ளைகள் மற்றும் மனைவியுடன் வசித்து வந்தவர் இந்திக்க லசந்த.

இவர் தனியார் பேருந்து ஒன்றில் நடத்துனராக பணிபுரிந்து வருபவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வழமைபோன்று அன்றைய தினமும் தனது தொழிலை முடித்து விட்டு வீடு திரும்பி நிறைமாத கர்பிணியான தனது மனைவியிடம் உரையாற்றிவிட்டு இருபிள்ளைகளிடமும் சிறிது நேரம் விளையாடிகொண்டிருந்த நிலையில் நித்திரைக்கு சென்றார்.

மறுதினம் அதிகாலை 5 மணியளவில் மனைவிக்கு பிரசவ வலி அதிகரிக்க வைத்தியசாலைக்கு அவசரமாக அழைத்து செல்கின்றார் இந்திக்க.

அழைத்து சென்று அவரை வைத்தியசாலையில் அனுமதித்து விட்டு தேவையான பொருட்களையும் வழங்கிவிட்டு பிரிய மனமின்றி பிரிந்து செல்ல முயற்சித்த வேளையில் மனைவியை பார்த்து அவர் கூறிய வசனங்கள் மனைவியை மேலும் வேதனைக்குள்ளாக்கியுள்ளது.

இரு பிள்ளைகளுக்கு தயான நீ இன்னுமொரு பிள்ளைக்கு தாயாக போகின்றாய்.

மூன்று பிள்ளைகளுக்கு தந்தையாக போகின்றேன் நான். 

ஆகையினால் நான் தாமதிக்காது... நேரம் வீணின்றி வேலை செய்ய வேண்டும்.

உனக்கு இன்று குழந்தை கிடைத்துவிடும். 

பிறக்கும் குழந்தைக்கான பொருட்களையும் வாங்கிக்கொண்டு நான் சீக்கிரம் வந்து விடுவேன். 

பயந்து கொண்டிராமல் தைரியமாக பிள்ளையை பெற்றுத்தரவேண்டும் என தனது நெஞ்சுப்பகுதியில் மனைவியின் தலையை வைத்தப்படி ஆறுதல் கூறிச் சென்றுள்ளார்.

குழந்தையும் பிறந்து விட்டது, அதுவும் இரட்டை குழந்தைகள், மனைவிக்கு நடமாட முடியாத நிலையில் வைத்தியசாலையில் கட்டிலில் காணப்படுகின்றார்.

இந்நிலையிலேயே மாத்தறை நகரில் அமைந்துள்ள நகையகம் ஒன்றில் இடம்பெற்ற கொள்ளைச்சம்பவத்தின் போது காவல் துறையினருக்கும் நிழல் உலக குழுவினருக்கும் இடையில் சரமாரி துப்பாக்கி பிரயோகம் இடம்பெறுகின்றது.
பாதாள உலக குழுவினர் மேற்கொண்ட துப்பாக்கி பிரயோகத்தில் அவ்விடத்தில் தனது குழந்தைக்கு பொருட்கள் கொள்வனவு செய்துக்கொண்டிருந்த இந்திக்கவையும் தோட்டாக்கள் துளைக்கின்றன.

பூமிக்கு பிரவேசித்த அந்த குழந்தைகளுக்கு பொருட்கள் வாங்கியவாறு தோட்டாக்கள் துளைத்த நிலையில் மயங்கி விழுகின்றார் இந்திக்க.

அருகில் நின்றுக்கொண்டிருந்தவர்களால் இந்திக்க காலி கராபிட்டி வைத்தியசாலையின் அதி தீவிர சிகிச்சை பிரிவில் (ETU) அனுமதிக்கப்படுகின்றார்.

சிகிச்சைகள் தீவிரமடைகின்ற அந்த தருணத்தில் இந்திக்கவின் சுவாசமும் முறையே நடைபெறாமல் குறைந்துக்கொண்டு செல்கின்றது.

பாதாள உலககுழுவினரின் துப்பாக்கி பிரயோகத்தில் இந்திக்க வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள விடயம் மனைவிக்கு தெரியாது.

பிறந்த இரு குழந்தைகளுக்கு நெஞ்சூட்ட வேண்டும் என்பதனால் வைத்தியர்களின் எழுத்துக்கமைவாகவே உணவுகளை உட்கொள்ள வேண்டும்.

கணவன் வைத்தியசாலைக்கு வராத நிலையில் மனைவி எவ்வாறு சத்துணவு தேடி உண்பது...?

ஓரிரு நாட்கள் சென்றவுடன் மனைவி வைத்தியசாலையிலிருந்து அழைத்து செல்லப்படுகிறார். 

அவரின் வீட்டிற்கு அல்ல பிரிதொரு மருத்துவமனைக்கு.

காலி கராபிட்டி வைத்தியசாலைக்கு அழைத்து செல்லப்படுகிறார். ஏன் என வினவுகிறார்.

அனைவரும் மௌனத்தை கடைபிடித்து மனைவியை கைபிடித்து அழைத்து சென்றனர்.

கணவர் கராபிட்டி வைத்தியசாலையில் அவசர சிகிச்சை பிரிவில் சுவாச கருவி இணைக்கப்பட்டுள்ள நிலையில், கட்டிலில் கிடக்கின்றார்.

மனைவி சுதாரித்துக்கொண்டார். கணவருக்கு ஏதோ நடந்துள்ளது. மனதை திடப்படுத்திக்கொண்டு அருகில் சென்றதும்... வைத்தியர்களை பார்த்து அவர் கேட்ட முதல் கேள்வி.

கணவர் உயிருடன்தானே இருக்கின்றார். அவரின் உயிரிருக்கு ஆபத்தில்லை என வைத்தியர்கள் தெரிவித்ததும்... அழத்தொடங்கினால் கை கால்களை பரிசித்து என்ன நடந்தது என தனக்கு தானே கணவரின் ஆரோக்கிய நிலையை கணக்கிட்டு கொள்கின்றாள்.
இதன்போது .... வைத்தியர்கள் குறித்த பெண்ணை அமைதியாக இருக்கும் படி கேட்டுக்கொண்டதுடன்.. கணவர் உயிருடன் தான் இருக்கின்றார் ஆனால் அவரால் பேச முடியாது சுயநினைவினை இழந்துள்ளார். குணமடைவதற்கு சில காலம் தேவைப்படும் என தெரிவித்ததும்.  ஒன்றும் தேவையில்லை டொக்டர் எனது கணவரை நான் பார்த்துக்கொள்வேன். அவர் உயிருடன் இருந்தால் போதும் என கூறி கணவனின் தலையுடன் தனது முகம் படும் வகையில் வைத்து கண்ணீர் வடித்தாள் அந்த பெண்.

பின்னர் பிறந்த இரட்டை குழந்தைகளை காண்பித்ததாகவும் அதனை அவர் சற்று கண் அசைத்து பார்த்தது போன்று தெரிந்ததாகவும் மனைவி ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.

பாதாள உலக குழுவினரின் நடவடிக்கையினால் நான்கு குழந்தைகளின் எதிர்காலம் பாதிக்கப்பட்டுள்ளதோடு குடும்பத்தின் முழு பொறுப்பினையும் ஒரு பெண் தனித்து நின்று எதிர்கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

5 கருத்துரைகள்:

பொலிஸ் அதிகாரியின் இரண்டு பிள்ளைகள் உட்பட ஆறு பிள்ளைகளின் எதிர்காலம்....

Heart melting incident. Ya Allah, please don't give such an incidence for anyone anymore. If this happens to our hon prime minister or hon president what will happen??

What a sad story...so sad to hear.

ஆசிரியர் பீடம் எழுதியவருக்கு நன்றியாவது சொல்லியிருக்கலாமே.....

Post a Comment