June 10, 2018

காய்நகர்த்தும் விஜேதாசவும், கோட்டைவிடும் தென்கிழக்கின் கல்விச் சமூகமும்

தென்கிழக்கினை முஸ்லிம் தேசியத்தின் தலைநகராக நிறுவ முயன்ற மறைந்த தலைவர் அஷ்ரப் அவர்கள் தன் எதிர்க்கட்சி அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைத்துவிட்டு இணக்க அரசியலை ஆரம்பிக்க காட்சிப்படுத்திய இரண்டு பிரமாண்டங்கள்தான் 

தென்கிழக்குப் பல்கலைக்கழகமும் ஒலுவில் துறை முகமும்.

ஆனால் அவரது மறைவுக்குப் பின்னர் அவ்விரண்டு திட்டங்களும் அவரது அரசியல் வாரிசுகளால் தொலை நோக்காேடு கையாளப்படவில்லை. காரணம் கனவு காணத் தெரியாத கபாேதிகளிடம் அதிகாரம் மக்களால் கையளிக்கப்பட்டுவிட்டது.

தென்கிழக்கின் முஸ்லிம் கல்விச் சமூகம் முஸ்லிம் தேசியத்திற்கு வலுச் சேர்க்க வேண்டிய பணியினை மறந்து பல்கலைக்கழக வளாக உள்ளக முரண்பாடுகளுக்குள் காலத்தை கழித்து விட்டது.
இன்று அதன் உச்சம் பாராளுமன்றத்தின் கவனத்தை ஈர்த்திருக்கின்றது.
முன்னாள் நீதி அமைச்சரான 
விஜேதாச  ராஜபக்ஷ் முஸ்லிம்களுக்கு எதிரான கண்டிக் கலவரத்தை
மையப்படுத்தி பிரதமருக்கு எதிரான நம்பிக்கயில்லாப் பிரேரணைக்கு எதிராக வாக்களித்து விட்டு 
அண்மையில் உயர்கல்வி அமைச்சை பொறுப் பேற்றுவிட்டு தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தில் மாணவர்கள் சித்தி பெற வேண்டுமானால் பாலியல் லஞ்சம் வழங்க வேண்டியுள்ளதாக பொத்தாம் பொதுவான ஒரு கருத்தினை பாராளுமன்றத்தில் முன் வைத்திருக்கின்றார்.
உயர்கல்வி அமைச்சராகப் பொறுப்பேற்று முதல்முறையாக தேசிய கவனத்தை ஈர்க்கும் வண்ணம் அவரது உரை அமைந்திருக்கிறது.
இலங்கையின் 
பல்கலைக்கழகங்களின் சூழலிலும் பாடசாலைகளிலும் அரச மற்றும் தனியார் திணைக்களங்களில் பணிபுரியும் பெண்கள் எதிர் நோக்கும் பாலியல்சார் வன்முறைகளும் பாலியல் லஞ்சங்களும் ஊடகங்கள் வாயிலாக அறியக் கிடைக்கின்ற போது நாம் அனைவரும் இன மத பிர தேசவாதங்களுக்கு அப்பால் முகம் சுளித்து இலங்கை பிரஜையாக குரல் கொடுக்கிறாேம். ஒரு குறிப்பிட்ட பல்கலைக்கழகத்தையாே பாடசாலை யினையோ திணைக்களத்தினையோ நாம் அவதூறுக்குள்ளாக்கி சேறுபூச நினைப்பதில்லை. அது ஓர் ஊடக தர்மம்.
ஆனால் உயர் கல்வி அமைச்சரின் பாராளுமன்ற உரையின் சாரத்தை அலசுவதை விட ஏன் அவ்வாறு உரையாற்றினார் என்பதே ஆய்வுக்குரியது. இலங்கை முஸ்லிம்களின் ஒருவகை ஆதிக்கத்தை நிறுவ வல்ல ஆய்வுப் பாரம்பரியத்தை பேண வல்ல வாய்ப்புக்கள் கொண்ட முஸ்லிம் தேசியத்தை செறிவூட்டவல்ல ஒரு தளம்தான் தென்கிழக்குப் பல்கலைக்கழகம்.
எனவே இது முஸ்லிம்களின் உயர்கல்விக்கும் முஸ்லிம் பெண்கல்விக்கும் எதிரான 
பௌத்த தேசியவாதத்தின் மறை கரம் தென்கிழக்குப் பல்கலை கழகத்தினை குறிவைப்பதாகவே பார்க்க வேண்டியுள்ளது.
தமிழ் தேசியத்தின்  கருத்தியல் முதுகெலும்பாக யாழ்பல்கலை கழகம் இருந்தமை இங்கு நோக்கற்பாலது.
தென்கிழக்கின் அறிவு ஜீவிகளே! உங்களில் ஒருவன், கிழக்கின் கோடைக்கால புழுதி குடித்தவன் ஓரங்கட்டப்பட்ட மக்களுக்காக உருவாக்கிய கட்சியையும் காவு கொடுத்தீர்கள்!
இப்போது நமக்காக அவன் உருவாக்கி விட்டுச் சென்ற பல்கலைக் கழகத்தை யுமா காவு கொடுக்கப் போகிறீர்கள்.?
இலங்கை முஸ்லிம்களுக்கிடையிலான ஆன்மீக முரண்பாட்டினை ஆவணப்படுத்தி நமது ஜமாஅத்துக்களை பட்டியலிட்டு பாராளுமன்றத்தில் பரபரப்பூட்டியவர் இந்த முன்னாள் நீதி அமைச்சர்.
இத்தனையும் நடந்த பின்னர் தென்கிழக்கின் உயர்கல்விச் சமூகம் தனது குடுமிச்சண்டையினை நிறுத்தி விட்டு அடுத்த சந்ததியின் இருப்பை நிறுவ முஸ்லிம் தேசிய கருத்தியலுக்கு அறிவியல் தளம் வழங்க சிவில் சமூகத்தின் ஆதரவுடன் முன் வந்தே ஆக வேண்டும். இப் பொறுப்பினை தட்டிக் கழித்தால் சமூகப் புரட்சி வெடிப்பதை தடுக்க முடியாமல் போகும்.
தனி நபர்களுக்கு எதிரான பாலியல் லஞ்ச குற்றச்சாட்டினை விசாரணை செய்யுமாறு வேண்டுவதே உயர் கல்வி அமைச்சரின் கடமை.  அவரது கருத்து ஒரு எதிர்கட்சி உறுப்பினரின் பாணியில் அமைந்துள்ளமை நம்மை வியப்பில் ஆழ்த்துகிறது.
முஸ்லிம்களின் பொருளதாரத்தை இலக்கு வைத்து வெறியாடிய 
காட்டேரிகளின் யுகம் முடிந்து முஸ்லிம் கல்வியின் மீது பார்வையை திசை திருப்ப வைக்கும் புதிய அத்தியாயத்தை தொடக்கியுள்ளாரா அமைச்சர் என்பதே இனி நாம் ஆய்வு செய்ய வேண்டிய விடயம்.

மர்சூம் மெளலானா.

2 கருத்துரைகள்:

This a personal problem between that lecturer and his student..
What is the evidence he had asked sexual pleasure from that girl .
Why do you always quick to Believe that girl.How evidence she has got ?
Does she has written evidence or recorded evidence? Why is it SEUSL did investigate about it ?.I think there must be some proper way to do this by university establishment.
This Minister is a shame to Sri Lanka. He does not have any moral value to bring this into public debate ...
What a type of MP is he ?

எத்தனை கட்டுரைகள் எழுதினாலும், உண்மைகள் உறங்குவதில்லை

Post a Comment