Header Ads



மாணவர்களினால் தாக்கப்பட்ட,16 வயது மாணவன் வைஸ்ஸூல் மரணம் - சவராணயில் சோகம்


மாணவர்கள் சிலரால் தாக்குதலுக்கு உள்ளான நிலையில் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சைப்பெற்று வந்த மாணவரொருவர் இன்று (23) அதிகாலை உயிரிழந்துள்ளார்.

சிலாபம் – சவராண முஸ்லிம் வித்தியாலயத்தில், தரம் 11 இல் கல்வி கற்ற மொஹமட் வைஸ்ஸூல் (வயது 16) என்ற மாணவனே, இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

குறித்த மாணவன் பாடசாலையின் பிரதான மாணவ தலைவர் என தெரியவந்துள்ளது.

கடந்த 15ம் திகதி இரவு மத நிகழ்வொன்றில் கலந்துகொண்டு மீண்டும் வீடு திரும்பிய போது அவரை மறித்த மாணவர்கள் சிலர் இவ்வாறு தாக்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

குறித்த தாக்குதலில் படுகாயமடைந்த மாணவர் சிலாபம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர், மேலதிக சிகிச்சைகளுக்காக கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார்.

இதன்போது , குறித்த மாணவன் சத்திர சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டு, தீவிர சிகிச்சைப்பிரிவில் சிகிச்சைப்பெற்று வந்த நிலையில் இன்று அதிகாலை உயிரிழந்துள்ளதாக

இந்த சம்பவம் தொடர்பில் இதுவரை 3 மாணவர்கள் கைது செய்யப்பட்டனர். அவர்களில் இருவர் பிணையில் விடுக்கப்பட்டுள்ளதுடன், மற்றைய மாணவர் எதிர்வரும் 26ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

பிரேத பரிசோதனை இன்று இடம்பெறவுள்ளது.

7 comments:

  1. இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன். அவனது மரணம் நிர்ணயிக்கப்பட்டது. நிகழ்ந்த விதம் கவலையளிக்கிறது.

    ReplyDelete
  2. Law should punished those who involved and attacked the students. Politician should not interfere for this incident.

    ReplyDelete
  3. Punish these thugs with no room for any kindness..
    In equal kinds so that no one would do that.

    ReplyDelete
  4. கட்டாயம் அனைத்து மாணவர்களும் தண்டிக்க பட வேண்டும்,கொலைக்கு கொலை இஸ்லாமிய ரீதில் சரியான தீர்வு.

    ReplyDelete
  5. How serious was the initial injury due to assault? Was it fatal ? Can it cause death?
    We need to ask so many questions regarding this incident... can't believe blindly without propper investigations to find the cause of death.

    ReplyDelete
  6. What was the condition soon after assault,
    Did he loose his conciousness and if so how long, what initial medical records says about his condition soon after admission to hospital...what are the initial treatment given.. If he was serious at the beginning why didn't they transfer to better hospital, what was the reason to transfer NHSL later...

    ReplyDelete
  7. @Gousdeen
    எனக்கொரு சந்தேகம்,
    இம்மனவனின் மரணம் நிர்ணயிக்கப்பட்டதுதான் ஆனால் நிகந்த விதம் கவலை அளிக்கிறது என்றீர்கள்.
    அவரது மரணம் நிர்ணயிக்கப்பட்டதாயின் ஏன் நாம் கொலை செய்தவர்களை தண்டிக்கவேண்டும்? ஏனெனில் கொலை செய்ய ஒருவருக்கு உரிமையில்லை என சொல்லுவீர்களா? அப்படியாயின் மரணிக்கவும் இவருக்கு நேரமில்லைதானே?

    ReplyDelete

Powered by Blogger.