Header Ads



"மகனை கொன்றவருக்கு மன்னிப்பளித்த தாய்" - அல்லாஹ் அழைத்துக் கொண்டான் என்கிறார்


உங்களால் மட்டுமே காப்பாற்ற முடியும் அம்மா! தூக்கு தண்டனையில் இருந்து கணவரை காப்பாற்ற கதறி அழுத மனைவி

இந்தியாவில் மகனை கொலை செய்தவரை தாய் மன்னித்திருக்கும் சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உத்திரப் பிரதேசத்தை சேர்ந்தவர் முஸ்ரம் அலி. கேரளாவைச் சேர்ந்தவர் ஆசிப். இவர்கள் இருவரும் சவுதி அரேபியாவிலுள்ள எரிபொருள் நிலையம் ஒன்றில் கடந்த 6 ஆண்டுகளுக்கு ஒன்றாக வேலை பார்த்து வந்துள்ளனர்.

இருவரும் ஒரே அறையில் தங்கி வந்த நிலையில், சம்பவ நாளான்று ஆசிப் இரவு நேரத்தில் தூங்கிக் கொண்டிருந்த போது, முஹ்ரம் அவரை கழுத்தறுத்து கொடூரமாக கொலை செய்துள்ளார்.

இதையடுத்து இது குறித்து வழக்கு பதிவு செய்த பொலிசார், அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

அதன் பின் இது தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு நடந்து வந்த நிலையில், வழக்கை விசாரித்த சவுதி அரேபியா நீதிமன்றம் முஹ்ரம்மிற்கு தூக்கு தண்டனை வழங்கி தீர்ப்பு வழங்கியது.

இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன் முஹ்ரம் மனநிலை சரியில்லாதவர் போல் நடந்துகொண்டதால், அவருக்கு தூக்கு தண்டனை ஒத்தி வைக்கப்பட்டது.

பின்னர் அவரை பரிசோதித்த மருத்துவர்கள் முஹ்ராம் நல்ல நிலையில் இருப்பதாக கூறியதால், நீதிமன்றம் அவருக்கு தூக்கு தண்டனை நிறைவேற்ற ஆயத்தமானது.

முஹ்ரமிற்கு ரஸியா என்ற மனைவியும் திருமண வயதில் இரண்டு பெண் குழந்தையும், ஒரு ஆண் குழந்தையும் உள்ளனர். தனது கணவருக்கு தூக்குத் தண்டனை நிறைவேற்றப்பட இருப்பதை அறிந்த ரஸியா கணவனை காப்பாற்ற வேண்டும் என்று துடித்துள்ளார்.

எங்கு சென்றால் கணவனை காப்பாற்றலாம் என்று யோசித்துள்ளார். அப்போது கணவர் கொலை செய்த ஆசிப்பின் அம்மாவிடம் உதவி கேட்கலாம் என நினைத்த ரஸியா கேரளாவில் ஆசிப்பின் தாயான ஆயிஷா பீவியை நேரில் சந்தித்தார்.

அப்போது எப்படியாவது என் கணவரை காப்பாற்றுங்க அம்மா எனக் கதறி அழுதார். இதனை சற்றும் எதிர்பார்க்காத ஆயிஷா கண்ணீருடன் ரஸியாவை தூக்கினார்.

என் மகனை அல்லாஹ் அழைத்துக் கொண்டார். அதுதான் விதி. இன்னொரு உயிர் போய் என் மகனை மீண்டும் என்னருகே அழைத்து வந்துவிடாது.

அவர்களாவது நிம்மதியாக இருக்கட்டும் எனக் கூறி முஹ்ரமை மன்னித்தார் ஆயிஷா. மேலும் மன்னிப்பு வழங்கிய கடிதத்திலும் ஆயிஷா கையெழுத்திட்டார்.

ஆயிஷாவின் மன்னிப்பு கடிதம் விரைவில் நீதிமன்றத்தில் சமர்பிக்கப்படவுள்ளதால், அவர் விரைவில் விடுதலையாவார் என்று கூறப்படுகிறது.

மேலும் இது ரஸியா கூறுகையில், என் கணவரின் வருகைக்காக காத்திருக்கிறேன். ஆயிஷா அம்மா அவர்களுக்கு எப்படி நன்றி சொல்வது என்றே தெரியவில்லை. அவர்களுக்கு இறைவன் எல்லா வளமும் நலமும் வழங்கட்டும் என்று கூறியுள்ளார்.

1 comment:

Powered by Blogger.