Header Ads



கோத்தபாய ஜனாதிபதியானால், நாட்டை கடவுளே காப்பாற்றவேண்டும் - நவீன்

வடக்கில் பொருளாதார அபிவிருத்தி நடவடிக்கைகளிற்காக நிலத்தை கோரும்போது அவர்கள் அதனை தமிழர் சிங்களவர் விவகாரமாக பார்க்கின்றனர் என பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் நவீன்திசநாயக்க தெரிவித்துள்ளார்

பேட்டியொன்றில் அவர் தெரிவித்துள்ளதாவது.

2020 ஜனாதிபதி தேர்தலில் கோத்தபாய ராஜபக்ச போட்டியிட முடியாது என்பதே  எனது கருத்து.

அவர் அமெரிக்க பிரஜை எனபதால் அதனை அவர் கைவிட்டால் மாத்திரமே தேர்தலில் போட்டியிடமுடியும் என நான் கருதுகின்றேன்.அதற்கான நடைமுறைகள் உள்ளன,அவர் அதற்காக விண்ணப்பிக்கவேண்டும் ஆனால் கோத்தபாய ராஜபக்ச இன்னமும் அதனை செய்யவில்லை.

அந்த விண்ணப்பம் அமெரிக்காவை சென்றடைந்த பின்னர் அவர்கள் சமர்ப்பிக்கப்பட்ட அனைத்து விடயங்களையும் ஆராய்ந்து கோத்தபாய ராஜபக்ச அமெரிக்க பிரஜையில்லை என சான்றிதழ் ஒன்றை வழங்குவார்கள் அதனை அவர்கள் வழங்கிய பின்னரே நீங்கள் அமெரிக்க பிரஜையில்லை என தெரிவிக்க முடியும்.

அந்த ஆவணத்தை பெறமால் கோத்தபாய ராஜபக்சவால் தான் ஜனாதிபதி வேட்பாளர் என தெரிவிக்ககூட முடியாது.

ஒவ்வொரு நாட்டிற்கும் ஒவ்வொரு தலைவிதியுள்ளது,எதிர்காலத்தில் என்ன இடம்பெறப்போகின்றது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

கோத்தபாய ஜனாதிபதியானால் நாட்டை கடவுளே காப்பாற்றவேண்டும்,

ஜனாதிபதி தேர்தல் குறித்து தற்போதைக்கு கருத்து கூற முடியாது இன்னமும் ஓன்றரை வருடங்கள் உள்ளன 

அரசாங்கம் சிங்களமக்களிற்கு எதிராக செயற்படுகின்றது என்ற கருத்துக்களை முன்வைத்து செய்தியாளர்கள் மாநாடுகளை நடத்தும் பௌத்தபிக்குகள்  யாரென்று பார்த்தால் அவர்கள் கடும் போக்கு பௌத்த சிங்கள குழுக்களை சேர்ந்தவர்களாக காணப்படுகின்றனர்.

இந்த குழுவே கோத்தபாய ராஜபக்சவின் பின்னால் உள்ளது என அமைச்சர் தெரிவித்துள்ளார்.

1 comment:

  1. நவீனின் செய்தியை வாசிக்காலேயே Comments ஐ பதிவிடுகிறேன். கோத்தபாய எதற்கு வர வேண்டும் தற்போதுள்ள ஆட்சியை பார்த்தாலே கண்கெட்ட குறுடனுக்கும் தெளிவாகும் கடவுளால் மட்டுமல்ல அதற்கு மேல் யாராக இருந்தாலும் இந்நாட்டை காப்பாற்ற முடியாதென்பதை.

    ReplyDelete

Powered by Blogger.