Header Ads



பிரதி சபாநாயகர் தெரிவை, இரகசியமாக நடத்த தீர்மானம்

பிரதிச் சபாநாயகர் பதவியிலிருந்து, நாடாளுமன்ற உறுப்பினர் திலங்க சுமத்திபால விலகி​யதை அடுத்து. நாடாளுமன்றம் இனி கூடவுள்ள எதிர்வரும் 5ஆம் திகதியன்று, அரசமைப்பின் 64 (3) உறுப்புரைக்கமைய, புதிய பிரதிச் சபாநாயகரைத் தெரிவுசெய்யும் நடவடிக்கை எடுக்கப்படுமென, நாடாளுமன்றப் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.

இந்தப் பதவிக்காக, எதிர்க் கட்சிகள் சார்பில் ஒருவரை நியமிப்பதற்கு, ஒன்றிணைந்த எதிரணியினர் தீர்மானித்துள்ளதாகத் தெரியவருகிறது.

இதற்காக, எதிர்க்கட்சித் தலைவர் மற்றும் மக்கள் விடுதலை முன்னணியினருடன் கலந்துரையாடி, தமது ​தீர்மானத்தை நிறைவேற்றிக்கொள்வதற்கான முயற்சியில், ஒன்றிணைந்த எதிரணியினர் ஈடுபட்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

எவ்வாறாயினும், எதிர்வரும் 5ஆம் திகதியன்று நாடாளுமன்றம் கூடியவுடன், முதல் நடவடிக்கையாக பிரதிச் சபாநாயகர் தெரிவாவார் என்பதோடு, இதற்கான வாக்கெடுப்பை, இரகசியமாக நடத்துவதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக, நாடாளுமன்றத்திலிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

No comments

Powered by Blogger.