Header Ads



பள்ளிவாசல் நிர்வாகங்ளே, இஃதிகாப் இருப்பவர்களை குழப்பாதிர்கள்


எமது இரட்சகனுடன் மிக நெருக்கமான உறவை பேணுகின்றதொரு வாய்ப்புத்தான் ரமழானின் கடைசிப் பத்தில் நாமிருக்கின்ற இஃதிகாப் ஆகும்.

இது தனித்து சென்று இறைவனுடன் தொடர்பை புதுப்பிக்கும் ஒரு செயல். எனவேதான் நபியவர்கள் மஸ்ஜிதினுள் கூடாரமடித்து தனிமைக்கு சென்று விடுவார்கள்.

ஆனால் இன்று பெரும்பாலும் அதிகமான பள்ளிகளில் இஃதிகாப் இருப்பவர்களுக்கு நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்படுகின்றன. நிகழ்ச்சி நிரல்கள் கூட தயாரிக்கப்படுகின்றன. இது பொதுவாக மக்களுக்கான வழிகாட்டலாக இருந்தாலும் தனிமையில் தனது இறைவனுடன் நெருக்கமான உறவைப் பேண முயல்பவர்களுக்கு பெரும் தொந்தரவாக அமைந்துவிடுகிறது.

மிக நீண்ட இரண்டு உரைகள் நிகழ்ச்சி நிரல்களில் இணைக்கப்படுகிறது. அதற்காக சாதாரணமாக 2 1/2 மணித்தியாலங்கள் செலவாகிறது. அதுவும் நடுநிசியில் மிக சப்தமாக ஒலிபெருக்கிகளில் செய்யப்படுகிறது.

இவ்வாறாக, கூட்டாக இடம்பெறும் மஜ்லிஸுகளில் சேராமல் தனிமையில் அமல் செய்பவர்களுக்கு ஏனையோரின் அவதானம் குறித்து பெரும் சங்கடங்கள் உருவாகிறது.

இஃதிகாப்புக்காக வருகின்றவர்களில் வழிகாட்டல் அவசியம் என்று கருதுபவர்களுக்கு அவர்களது விருப்பத்திற்கமைய ஏனையோருக்கும் பொது மக்களுக்கும் தொந்தரவாக அமைந்திடாத வகையில் அமைதியான முறையில் கூட்டாக வழிகாட்டுங்கள். இது ஒன்றும் தவறு கிடையாது.

அதுபோல் தனிமையில் இறைவனோடு உறவாட நினைப்பவர்களுக்கும் போதிய அனுமதியையும் அதற்கான இடத்தையும் ஒதுக்கிக் கொடுத்து விடுங்கள். அவர்களை தப்பெண்ணம் கொண்டு பார்க்காதீர்கள்.

சிலபோது உங்களை திருப்திப்படுத்துவதா அல்லாஹ்வை திருப்திப்படுத்துவதா எனும் போராட்டத்திலேயே பாதி இரவுகள் வீண்போய் விடுகின்றன.

Abu Ariya 

No comments

Powered by Blogger.