June 20, 2018

"ஞானசாரரும், அரைக் காற்சட்டையும்" - சட்­டத்­த­ர­ணிகள் சங்­கத் தலைவரின் அருமையான விளக்கமும்..!!


கடூ­ழிய சிறைத்­தண்­டனை விதிக்­கப்­பட்­டுள்ள பொது­பல சேனா அமைப்பின் செய­லாளர் கல­கொட  அத்தே ஞான­சார தேரர் அரைக் காற்­சட்­டை­யுடன் தடுத்து வைக்­கப்­பட்­டுள்­ளதில் சட்­ட­ரீ­தி­யாக எந்தத் தவறும் இல்லை எனவும் இவ்­வாறு அரைக் காற்­சட்­டை­யுடன் சிறை­களில் 15 தேரர்­களும் 3 வேறு மத குரு­மாரும்  தடுத்து வைக்­கப்ப்ட்­டுள்­ள­தா­கவும் இலங்கை சட்­டத்­த­ர­ணிகள் சங்­கத்தின் தலைவர் ஜனா­தி­பதி சட்­டத்­த­ரணி யூ.ஆர்.டி. சில்வா  தெரி­வித்தார்.

ஞான­சார தேர­ருக்குத் தண்­டனை விதிக்­கப்­பட்ட பின்னர், அவ­ரது காவி உடை நீக்­கப்பட்டு, ஏனைய கடூ­ழிய சிறைத்­தண்­டனை கைதி­களைப் போன்று வெள்ளை அரைக் காற்­சட்­டை­யுடன் கூடிய ஆடை அணி­விக்­கப்பட்­டுள்­ளமை தொடர்பில் பல்­வேறு தரப்­பி­னரும், பல்­வேறு விமர்­ச­னங்­களை முன்­வைத்து வரும் நிலையில், அது குறித்து வின­வி­ய­போதே சட்­டத்­த­ர­ணிகள் சங்­கத்தின் தலைவர் ஜனா­தி­பதி சட்­டத்­த­ரணி யூ.ஆர்.டி. சில்வா இதனைத் தெரி­வித்தார்.

இது தொடர்பில் ஜனா­தி­பதி சட்­டத்­த­ரணி யூ.ஆர்.டி. சில்வா மேலும் தெரி­வித்­த­தா­வது,

' எமது சட்­டத்தின் பிர­காரம் இரு வகை­யான தண்­ட­னை­களை வழங்­கலாம்.  கடூ­ழிய சிறை, சாதா­ரண சிறைத் தண்­ட­னையே அவை.  இவ்­வாறு தண்­டனை விதிக்­கப்­பட்டால் மேன் முறை­யீடு செய்யும் உரிமை உள்­ளது.  இந்த தண்­டனை நீதிவான் நீதி­மன்­றினால் கொடுக்­கப்­பட்­டி­ருப்பின், மேன் முறை­யீட்டு மனு­வா­னது மேன் முறை­யீட்டு நீதி­மன்றை விழித்து நீதிவான் நீதி­மன்­றி­லேயே சமர்ப்­பிக்­கப்­படல் வேண்டும்.

 அவ்­வாறு மேன் முறை­யீடு செய்­யப்­ப­டும்­போது பிணை சட்­டத்தின்  அம்­சங்கள் நீதி­வா­னினால் ஆரா­யப்­படல் வேண்டும்.  எனினும் அவ்­வாறு ஆராய்ந்­த­போது பிணை வழங்­கு­வ­தற்கோ அல்­லது பிணையை நிரா­க­ரிக்­கவோ  நீதி­வா­னுக்கு அதி­காரம் உள்­ளது.  குற்­றத்தின் பார­தூரம், குற்­ற­வா­ளியின் கடந்­த­கால நட­வ­டிக்­கைகள் உள்­ளிட்­ட­வற்றை ஆராய்ந்து  பிணை வழங்­கு­வ­தையும், வழங்­கா­மை­யையும் தீர்­மா­னிக்க முடி­யு­மென  பிணை சட்­டத்தில் கூறப்­பட்­டுள்­ளது. ஒரு­வ­ருக்குத் தண்­டனை அளிக்­கப்­பட்ட மறு­கணம் அவர் சிறைச்­சா­லைகள் ஆணை­யா­ளரின் பொறுப்­புக்குள் உள்­வாங்­கப்­ப­டு­கின்றார். அதற்கு வேறு எந்த சட்­டமும் செல்­வாக்கு செலுத்த முடி­யாது.

 சிறைத் தண்­டனை விதிக்­கப்­பட்ட ஒருவர், அது­வரை மேன் முறை­யீடு தாக்கல் செய்­தி­ரா­விட்டால்  அவ­ருக்கு அரைக் காற்­சட்டை அணி­விக்­கப்­படும். அவ­ருக்கு அது முதல் சிறைத் தண்­டனை அமுல் செய்­யப்­படும். மேன் முறை­யீட்டு மனு தாக்கல் செய்­யப்­பட்டு அது தொடர்­பி­லான கட்­ட­ளை­யொன்று சிறைச்­சா­லைக்கு அனுப்­பப்­படும் வரை அவர் அந்த அரைக் காற்­சட்­டையை அணிய வேண்டும். மேன் முறை­யீட்டு சிறைக் கைதி­யாக சிறைக்கு வரு­பவர் சாதா­ரண ஆடையை அணி­யலாம்.  மேன் முறை­யீட்டு சிறைக் கைதி ஒரு­வரை சாதா­ரண கைதியைப் போன்று வாரம் ஒரு முறை பார்­வை­யிட வரு­வோரை பார்­வை­யி­டலாம்.  எனினும் அரைக் காற்­சட்டை அணிந்­த­வர்­க­ளுக்கு மாத­மொரு முறையே பார்­வை­யிட அனு­மதி வழங்­கப்­படும்.

 உன்­மையில் ஞான­சார தேரர் மட்­டு­மன்றி இவ்­வாறு அரைக்­காற்­சட்டை அணி­விக்­கப்­பட்ட 15 தேரர்கள் சிறைச்­சா­லை­களில் உள்­ளனர்.  அத்­துடன் இந்து, கிறிஸ்­தவம், இஸ்லாம் மத­கு­ருமார் ஒருவர் வீதம் இவ்­வாறு அரைக் காற்­சட்டை அணி­விக்­கப்ப்ட்டு சிறையில் அடைக்­கப்­பட்­டுள்­ளனர்.

 ஞான­சார தேரரின் பிணை தொடர்பில் 22ஆம் திகதி தீர்­மா­னிக்­கப்­படும் என அறி­கின்றேன். அவ்­வாறு பிணை உத்­த­ரவு தொடர்பில் செல்­லும்­போது சாதா­ர­ண­மாக செல்­லலாம். இது எமது சட்­டத்தில் உள்ள சாதா­ரண விடயம்.  எமது சட்­டத்தின் பிர­காரம் சிறையில் தண்­டனை அனு­ப­விக்கும் சிறைக்­கை­தி­க­ளான பிக்­குகள் பலர் உள்­ளனர். முன்னாள் பிர­தமர் பண்­டா­ர­நா­யக்க கொலை குற்­ற­வாளி தல்­துவே சோம­ராம தேரர் கிறிஸ்­தவ மதத்தை தழு­வினார். எனினும் அவர் அரைக் காற்சட்டையுடனேயே தடுத்து வைக்கப்பட்டார். அவர் மதம் மாறியதால் அவருக்கு உடை தொடர்பில் சிக்கல் எழவில்லை.

எனினும்,  புத்த ரக்கித்த தேரர் அரைக் காற்சட்டை அணிவிக்கப்பட்டார். அவர் தொடர்பிலும் சிக்கல் எழவில்லை.  சிறைச்சாலையில் மத ரீதியிலான ஆடைகளை அணிய முடியாது.  அனைத்து சிறைக்கைதிகளும் சமமாகவே கருதப்படுவர் எனத் தெரிவித்தார்.

 MFM.Fazeer

1 கருத்துரைகள்:

மனிதர்களில் கைகள் தேடிக்கொண்ட (தீச் செயல்களின்) காரணத்தால் கடலிலும் தரையிலும் (நாசமும்) குழப்பமும் தோன்றின; (தீமைகளிலிருந்து) அவர்கள் திரும்பிவிடும் பொருட்டு அவர்கள் செய்தார்களே (தீவினைகள்) அவற்றில் சிலவற்றை (இவ்வுலகிலும்) அவர்கள் சுவைக்கும்படி அவன் செய்கிறான்.
(அல்குர்ஆன் : 30:41)

Post a Comment