Header Ads



மஹிந்தவின் இப்தாரில், நடந்த சுவாரசியங்கள்


மஹிந்த ராஜபக்ச இப்தார் நிகழ்வொன்றை நடத்தினார் அல்லவா..?

அந்த இப்தாரில் நடந்த, சில சுவாரசியங்கள் பற்றி ஜப்னா முஸ்லிம் இணையத்திற்கு, இப்தார் ஏற்பாட்டாளர் ஒருவர் தகவல் வழங்கினார். அவற்றை இங்கு சுருக்கித் தருகிறோம்.

மஹிந்தவின் இப்தாரில் பங்கேற்க 300 முஸ்லிம்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. எனினும் 500 க்கும் மேற்பட்ட முஸ்லிம்கள் இதில் பங்கேற்றனர்.

இஸ்லாமிய நாட்டு தூதர்களுக்காக 25 ஆசனங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. 25 ஆசனங்களும் நிரம்பியுள்ளன.

21 முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும், மகிந்தவின் இப்தாரில் பங்கேற்குமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இதற்கு முந்திய வருடங்களிலும் இவ்வாறு முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு மஹிந்த இப்தாருக்கான அழைப்பை விடுத்திருந்த போதிலும், இம்முறையே பல முஸ்லிம் அரசியல்வாதிகள் மஹிந்தவின் இப்தாரில் பங்கேற்றுள்ளனர். 

அமைச்சர் றிசாத் பதியுதீன் தரப்பு, மஹிந்தவின் இப்தாரில் பங்கேற்கவில்லை.

ரவூப் ஹக்கீம் இப்தாருக்கு சற்று தாமதமாகி வந்தாலும், மஹிந்தவுடன் தனியறையில் சந்தித்து பேசியுள்ளார்.

குறித்த இப்தார் நிகழ்வுடன், முஸ்லிம்கள் பற்றி ஒருவித குஷி மஹிந்தவிடம் ஏற்பட்டுள்ளதாகவும் குறித்த தகவல்களை வழங்கியவர் ஜப்னா முஸ்லிம் இணையத்திடம் மேலதிகமாக கூறிய தகவலாகும்..!

2 comments:

  1. மாறுகின்ற உலகமும் அதே சுற்றில் மாறுகின்ற மனிதர்களும்
    எவர் நல்லவர் எவர் கேட்டவர் ஊகிக்க முடியாத அரசியல் சாக்கடை

    ReplyDelete
  2. Unmayilum unmai do doubt all Corrupt people

    ReplyDelete

Powered by Blogger.