Header Ads



"மதகுருமாருக்கு சிறைகளில் தனியான சட்டம் கிடையாது"

தண்டனை பெற்று சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள மதகுருமார் 18 பேரும் சிறைச்சாலை சட்ட விதிகளின் கீழ் சமமாக நடத்தப்பட வேண்டும் என இலங்கை மனித உரிமைகளுக்கான நிலையம் சுட்டிக்காட்டியுள்ளது.

மதகுருமார் அல்லது வேறு குழுக்களுக்காக ஏதேனும் சலுகைகள் பெற்றுக்கொடுக்க வேண்டுமாயின் அதற்காக புதிய சட்டம் உருவாக்குவதற்கு பாராளுமன்றத்திற்கே அதிகாரம் உள்ளது என்றும் இலங்கை மனித உரிமைகளுக்கான நிலையத்தின் நிறைவேற்று பணிப்பாளர் கீர்த்தி தென்னகோன் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்து, இஸ்லாம், பௌத்த கிறிஸ்தவ மதகுருமார் என 18 பேர் தற்போது சிறைத்தண்டனை அனுபவித்து வருகின்றனர். இவர்கள் அனைவரும் சிறைச்சாலை சட்ட விதிகளின் கீழ் சமமாக நடத்தப்படவேண்டும் என்றே இந்த அமைப்பு தெரிவித்துள்ளது.

கொலை, வண்புணர்வு கொள்ளை, கலவரம் மற்றும் அரச விரோத செயல்கள் போன்றவற்றில் ஈடுபட்டார்கள் என்ற குற்றச்சாட்டின் பேரில் 18 மதகுருமார் சிறைதண்டனையை அனுபவித்து வருகிறார்கள்.

பௌத்த மதகுருமார் 15 பேரும் இஸ்லாம் மதகுரு ஒருவரும் கிறிஸ்தவ மதகுரு ஒருவரும் இந்து மதகுரு ஒருவரும் இவ்வாறு தண்டனை அனுபவித்து வருகின்றனர்.

முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க ஜனாதிபதியாக இருந்த சமயம் அவரை கொலை செய்ய முயற்சித்த விடயம் தொடர்பில் இந்து மதகுரு சிறைத்தண்டனை அனுபவித்து வருகிறார்.

இலங்கை மனித உரிமைகளுக்கான நிலையம் நடத்திய ஆய்வுகளின் பிரகாரம் தற்போது சிறையிலிருக்கும் 18 மதகுருமாரும் சிறைச்சாலை சட்ட விதிகளின் கீழேயே தமது தண்டனைக் காலத்தை அனுபவித்து வருகின்றனர் என்பது தெரியவந்துள்ளது. அவர்களுடைய உணவு, உடை, வெளியாரை சந்தித்தல் உட்பட அனைத்து நடவடிக்கையும் அந்த சட்டவிதிகளின் கீழேயே நடைபெறுகிறது. உதாரணமாக அவர்கள் அனைவரும் சிறைக் கைதிகளுக்கான இலக்கம் ஒன்றின் கீழேயே அறியப்படுகின்றார்கள். சிறைக் கைதிகள் தொடர்பில் தற்போது நடைமுறையிலிருப்பது சிறைச்சாலை சட்டமே.

இதில் மதகுருமார் அல்லது வேறு குழுக்களுக்காக விசேட சலுகைகள் பெற்றுக்கொடுக்க வேண்டுமாயின் அதற்காக புதிய சட்டம் உருவாக்குவதற்கு பாராளுமன்றத்திற்கே அதிகாரம் உள்ளது என்றும் இலங்கை மனித உரிமைகளுக்கான நிலையத்தின் நிறைவேற்று பணிப்பாளர் கீர்த்தி தென்னகோன் சுட்டிக்காட்டியுள்ளார்.

1 comment:

  1. ஒவ்வொருவரும் சிறையில் இஸ்லாம் மத குரு, இந்து மதகுரு, கிறிஸ்தவ மதகுரு போன்றோரும் இருக்கிறார்கள் இருக்கிறார்கள் என்கிறார்களே தவிர அந்த மண்டை கெட்ட குருக்கள் மூவரும் என்ன என்ன குற்றங்களுக்காக அங்கே தங்கியிருக்கிறார்கள் என்று யாராவது சொன்னால் சற்று பிரயோசனமாக இருக்குமப்பா.

    ReplyDelete

Powered by Blogger.