June 22, 2018

பெரிய பள்ளிவாசலும், உலமா சபையும் விட்ட தவறுகளிலிருந்து பாடம் படிக்கவில்லையா...??

ஷவ்வால் மாத தலைப்பிறை விவகாரம் இம்முறையும் சமூகத்தில் பாரிய சர்ச்சைகளையும் பிளவுகளையும் தோற்றுவித்துள்ளமை கவலைக்குரியதாகும்.

எது நடக்க கூடாது என நாம் எதிர்பார்த்தோமோ அதுவே நடந்துள்ளது. 2013 இல் கிண்ணியாவில் பிறை கண்ட விடயத்தில் பெரிய பள்ளிவாசலும் உலமா சபையும் விட்ட தவறுகளிலிருந்து இன்னமும் போதுமான பாடம் படிக்கவில்லையா எனும் சந்தேகத்தை இம்முறை நடந்த சம்பவங்கள் உணர்த்துகின்றன.

ரமழான் 28 இல் ஷவ்வால் தலைப்பிறை தென்படுவதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன என்பதற்கான சாத்தியங்கள் ஏலவே எதிர்வுகூறப்பட்டிருந்த போதிலும் அன்றைய தினம் பிறை தென்பட்டமை குறித்து அறிவித்தால் அது பற்றி பரிசீலிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது. இதற்கமைய அன்றைய தினம் பிறைக் குழு கூடியது. எனினும் இரவு 7.30 மணி வரை பிறை தென்பட்டமை பற்றிய தகவல்கள் கிடைக்கப்பெறவில்லை என அறிவிக்கப்பட்டது. எனினும் இரவு 9 மணியளவில் நாட்டின் பல பாகங்களிலும் பிறை கண்டமை பற்றிய தகவல்கள் வெளிவரத் தொடங்கின. இந்நிலையில் பெரும் இழுபறிகளுக்கு மத்தியில் நள்ளிரவில் மீண்டும் பிறைக் குழு கூடி பிறை தென்பட்டமை பற்றிய தகவல்களை ஆராய்ந்தது. இறுதியில் குறித்த சாட்சியங்கள் ஏற்றுக் கொள்ள முடியாதவை எனக் கூறி நிராகரிக்கப்பட்டதுடன் நோன்பைத் தொடருமாறும் அறிவுறுத்தப்பட்டது.

இதற்கிடையில் பிறை கண்டவர்களின் சாட்சியங்களை அடிப்படையாக கொண்டு மறுநாள் பெருநாள் கொண்டாடுவதற்கான அறிவிப்புகளை பல அமைப்புகள் வெளியிட்டன. மேலும் பலர் மறுநாள் நோன்பு நோற்பதில்லை எனவும் சனிக்கிழமை பெருநாள் கொண்டாடுவது எனவும் தீர்மானித்தனர். உலமா சபையின் தலைமையக நிர்வாகத்திலுள்ள பிரபல உலமாக்கள் கூட இதே நிலைப்பாட்டை பகிரங்கமாக அறிவித்தனர். பல இஸ்லாமிய இயக்கங்களும் இதே நிலைப்பாட்டை அறிவித்தன.

இதற்கிடையில் இந்த விவகாரத்தை அணுகுவதில் கொழும்பு பெரிய பள்ளிவாசல் நடந்து கொண்ட முறை பலரையும் அதிருப்தியில் ஆழ்த்தியது. பெரிய பள்ளிவாசலில் அன்றிரவு குழுமியோர் சண்டித்தனமாக நடந்து கொண்டமையும் பள்ளிவாசலின் புனிதத்தை கூட மதிக்காது நடந்து கொண்டமையும் உலமாக்களை தாக்க முற்பட்டமையும் வெட்கத்துக்குரியதாகும்.

பிறையை தீர்மானிக்கும் விடயத்தில் அளவுக்கதிகமான ஆதிக்கத்தை பெரிய பள்ளிவாசல் பிரயோகிப்பது இதிலிருந்து தெளிவாகிறது. உலமா சபை கூட இந்த விடயத்தில் சத்தியத்தை தெரிந்து கொண்டும் மறைப்பதாகவும் பெரிய பள்ளியை மீறி எதனையும் செய்ய முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளதாகவும் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுகின்றன.

இப் பின்னணியில்தான் தேசிய பிறைக்குழு மறுசீரமைக்கப்பட வேண்டும் என்றும் பிறை விடயத்தில் பெரிய பள்ளிவாசலின் ஆதிக்கம் குறைக்கப்பட வேண்டும் என்றும் முஸ்லிம் புத்திஜீவிகளும் அரசியல் பிரமுகர்களும் கோரிக்கைகளை முன்வைத்துள்ளனர். இது தொடர்பில் கடந்த ஓரிரு நாட்களுக்குள் நூற்றுக் கணக்கான கடிதங்கள் மின்னஞ்சல் மூலம் முஸ்லிம் சமய விவகார அமைச்சுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

இதனையடுத்து கடந்த செவ்வாய்க்கிழமை முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தில் இடம்பெற்ற விசேட கூட்டத்தில் பிறைக்குழுவுக்கு ஆலோசனை வழங்க 7 பேர் கொண்ட குழு நியமிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. எனினும் இது எந்தளவு தூரம் வினைத்திறனான தீர்மானம் எனத் தெரியவில்லை. நவீன விஞ்ஞானத்துக்கும் வானிலை அறிஞர்களுக்கும் பிறைக்குழு எந்தளவு தூரம் இடமளிக்கப் போகிறது என்பது மீண்டும் கேள்விக்குறியாகியுள்ளது.

வருடா வருடம் இவ்வாறு மக்களைக் குழப்பத்தில் ஆழ்த்துகின்ற விவகாரத்துக்கு இதன் பின்னரேனும் முற்றுப் புள்ளிவைக்க வேண்டும். இன்றேல் பிறையைத் தீர்மானிக்கும் விடயத்தில் மக்கள் இதன் பிற்பாடு சுயாதீனமாக தீர்மானமெடுத்துச் செயற்பட வேண்டிய நிலைக்குத் தள்ளப்படுபவர் என்பது நிச்சயம். இது இலங்கை முஸ்லிம்கள் மத்தியில் மேலும் ஒற்றுமையின்மையைத் தோற்றுவிப்பதோடு மார்க்க தலைமைத்துவ ஒழுங்கையும் கேள்விக்குட்படுத்துவதாக அமையும். இந் நிலை ஏற்பட பெரிய பள்ளிவாசலோ உலமா சபையோ திணைக்களமோ இடமளிக்கக் கூடாது என்பதை அழுத்திக் கூற விரும்புகிறோம்.

-Vidivelli-

22 கருத்துரைகள்:

ஜப்னா முஸ்லிமுக்கு வேறு செய்திகளே கிடைக்கவில்லையா? குரங்குக்கு புண் வந்தது போல் பிறை விஷயத்தை அடுத்த பத்திரிகைகலிருந்து நகலெடுத்து பிரசுரித்து... ஏன் இப்படி...?

Evvalavuthaan alutti koorinaaalum...sevidan kaathil oothiya sangu...?
naaattil mufthihal endra peyaril kaintha saruguhal neraya...
Allahthaan kaappaatta vendum nam samoohattai..!!

இந்த கட்டுரையை எழுதியவர் யார்????

நவீன வானியலுக்கு பிறைக்குழு கொடுக்க வேண்டிய இடத்தை கொடுத்து தான் இருக்கின்றது.

If anyone found crescent in srilanka in any area.That area Jammiyatul Ulamma confirmed.If they find true they will inform other area of Jammiyatul Ulamma.This is the method to solve this problem.

Ones again trouble creators doing the job!
Generally all Muslims around Sri Lanka listen
to grand mosque decision and peace fully attend
all celebrations:
but sad to say trouble creators ones again started
there jobs.we can axpect this will happen up coming years allso!
99% Muslims in Sri Lanka Following the grand mosque without any
Problems WITH PEACE OVER hundreds of years!
we must ask dua for them who guide some small groups of hundreds
celebrating eid while others in millions fasting the 29th of Ramadan.
Obay allah rasool and the Ameers appointed
to you.don't create divisions among Ummah!

எல்லாம் தெளிவான பின்னர் கூட மக்களை நோன்பு பிடிக்க ஹராமான தினத்தில் நோன்பு பிடிக்க வைத்தது மட்டுமல்லாமல்..... சரியாக பெருநாள் கொண்டாடியவர்களை ஜும்மா மேடைகளினூடாக திட்டியும் உள்ளார்கள் .... இந்த கீழ்த்தரமான வேலையில் அனேகமான தப்லீக் உலமாக்கள் ஈடுபட்டதை ஆதாரத்துடன் காட்ட முடியும்....

யா அல்லாஹ் இவர்களுக்கும் எங்களுக்கும் உண்மையை ஏற்கும் மனப்பக்குவத்தை தருவாயாக எனக் கேற்கின்றோம் .

I don't know how the leaders going to find proper solution?

இலங்கையிலே பிறை விடயம் என்பது ஒரு சாதாரண சிறிய விடயமாகும். இதை ஊதிப்பெருப்பித்து பாரிய ஒரு பிரச்சினையாகவும் சமூகத்தை பிளவுபடுத்தக்கூடியதாவும்,அன்னிய மக்கள் கூட இஸ்லாத்தை விமர்சிக்கின்ற நிலைக்கும் தள்ளியவர்கள் எமது சமூகத்தில் அறிவாளிகள் என பிதற்றிக்கொள்ளும் சில உலமாக்களும் கற்றவர்களும் .இவர்கள் தங்களுக்குள்ளே பிளவுபட்டு பல்வேறு சமய பிரிவுகளை தோற்றுவித்து அவைகளுக்கு பலநாமங்களை சூட்டி தமக்கு ஆதரவு வழங்க மக்களை அழைத்துகொண்டிருக்கின்றார்கள்.அதற்கு இவ்வாறான பிரச்சினைகளை தோற்றுவித்து இதன்மூலம் மற்ற இஸ்லாமிய அமைப்புக்களை பிழைகண்டு தமது கொள்கைகளையும்
கோட்பாடுகளையும் சரிகாணவும் அதை
மக்கள் மத்தியில் பிரஸ்தாபிக்கவும் முற்படுகின்றதன் விளைவே இவ்வாறான பிரச்சினைகளின் தோற்றுவாயாகும்.இவைகளுக்கு ஆதாரமாக தங்களின் அறிவிற்கும் ஆற்றலுக்குமேற்ப தாங்கள் விளங்கிக்
கொண்டபடி திருக்குர்ஆனுக்கும் ஹதீஸ்களுக்கும் விளக்கம் சொல்லி
நியாயப்படுத்த முற்படுகின்றார்கள். இப்படி எமது நாட்டிலே நினைத்தவர்களெல்லாம் புனித திருக்குர்ஆனுக்கும் ஹதீஸ்களுக்கும்
விளக்கம் சொல்ல முற்பட்டதன் விளைவுகளையே நாம் அனுபவித்துகொண்டிருக்கின்றோம். இஸ்லாம் கடலைப்போன்ற மிகவும் விசாலமான ஒன்று அதில் ஒரு துளிையை பரிகிக்கொண்டு நான் சொல்கின்றதுதான் கடல் என வாதட்டு
கொண்டிருப்பது எவ்வளவு முட்டாள்தனம் என்பதை நாம் எல்லோரும் முதலில் உணரவேண்டும்
எனவே மார்க்க விடயங்களுக்கு விளக்கம் சொல்வதற்கும் தீர்வு சொல்வதற்கும் ஒரே ஒரு சபை இந்தநாட்டிலே இருக்க்வேண்டும் அதற்கு நாம் அனைவரும் கட்டுப்படவேண்டும்.இதில்ஏற்படும் குற்றம் குறை நிறைவுகளுக்கு அச்சபையே பொறுப்பாகும் என்ற இறை நம்பிக்கையை நாம்வளர்த்து
நாம்ஒற்றுமை படவேண்டும்.பிறை விடயத்திலும் இதுவே சிறந்ததாகும்.

பிறை பிரச்சினை தொடர்பாக இன்னும் சரியான முடிவுகள் எட்டப்படவில்லை என்று பல தரப்பில் இருந்தும் கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டு கொண்டிருக்கின்றன.
எனவே உரியவர்கள் உரிய நடவடிக்கைகளை அவசரமாக எடுத்து சமுதாயத்தில் ஒற்றுமையை பாதுகாக்க வேண்டும்.

There is no proper leadership to the Sri Lankan Muslims.

நான அறிந்த வரைக்கும் பிறையை தீர்முமானிக்க்கிகும் விடயத்தில் குலப்பத்திற்கான காரணம் நம்மத்தியலுள்ள இஸ்லாமிய இயக்கங்களும் இயக்கங்களை வழிநடத்தும் உலமாக்கள் என்று தம்மைத் தாமே கூரிக்கொள்ளக்கூடிய வர்களும். இவர்கள் ஒரு தலைமைத்துவத்தின் கீல் முஸ்லீம்களை ஒன்றுபட்டு ஒற்றுமையாக வாழ்வதை விரும்பவில்லை போலும். ஏனெனில் அவர்களின் இயக்க வளர்ச்சியும் அவர்களின் தலைமைத்துவம் அடிப்பட்டு போகும் என்பதால் தெறியவில்லை.

பிறை விவகாரத்தில் எந்த தவறும் நடக்க வில்லை. ஒரு சாரார் அதனை பூதாகரமாக ஆக்கி அதில் குளிர் காய முயற்சிக்கின்றனர். அது தவிர வேறு எதுவும் இல்லை என்பது பொதுமக்களின் அபிப்பிராயம் ஆகும்.

பிறை குழு நியமிக்கப்பட்டு அந்த குழு எடுக்கும் தீர்மானத்துக்கு அமைய செயட்படுவது தான் சரியான விடயமாகும். ஆனால் குழப்பமான சூழல் ஏட்படுமானால் பிறை குழு அதட்கான தெளிவானதும் உறுதியானதுமான விளக்கங்களை கொடுப்பது அவர்களின் கடமையுமாகும். மன்னாரிலும், மற்றும் சிலப்பகுதிகளிலும் காணப்பட்ட சாட்சிகளை மறுதலிப்பதட்கான சரியான காரணத்தை பிறைக்குழு சரியான ஒரு விளக்கத்தை கொடுக்க வில்லை என்றே தோன்றுகிறது. ஆக பிறைக்குழு சரியான விளக்கத்துடன் மக்களை தெளிவுபடுத்துவது அவர்களின் கடமையாகும். வெறுமென பிறைக்குழுவுக்கு அல்லது தலைமைத்துவத்துக்கு கட்டுப்பட வேண்டும் என்று கூறுவது குழப்பத்துக்கே வழிகோலும்.

Abul hassan andmihamed lareef said 1000%correct.vidivelli backing also kind of yahoodi .they are the big danderour group in sri lanka.

Dear unknown .masha allah we have good leader to lead our muslims.but kind of your people not to obey our leadership.also your name also unknown why???

95%MUSLIMS OBEYING OUR LEADERSHIP.
5%shiya thawheed kaadiyani only not to obey our leadership.beware.allah is with 95% . Not with 5%fitna group

Jaffna muslim please avoid news from kind of fitna group

Moon sighted @ 14th June 2018. The grand masjid made mistakes. Lareef refer the link: https://www.moongiant.com/phase/6/14/2018

சகோ அபுல் அபுல் ஹசன் அவர்களே பெருநாள் தினம் நோன்பு பிடிக்க ஹராம் என்று அல்லாஹ்வின் தூதர் கூறிய பின்பும் உங்களுக்கு அது சின்ன விடயமாக தெரிகிறதா

சகோ ரிப்லான். நோன்பு தினத்தில் பெருநாள் கொண்டாடுவது கூடுமா ?.☺

ோதர் ரிப்லான் அவர்களேபெருநாள் தினத்தை
தீர்மானிப்பவர்கள் அதன் பாவ புண்ணியங்ளை
அடையற்றும் அதனால் அது சின்ன விடயம் .
நீங்கள் தீர்மானிக்க முற்பட்டால் அதுபெரிய
விடயமாக மாறும்.

Post a Comment