June 01, 2018

விடிவெள்ளி பத்திரிகை, வெளியிட்டுள்ள ஆசிரியர் தலையங்கம்

முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச கடந்த வாரம் பேருவளையில் இடம்பெற்ற இப்தார் நிகழ்வொன்றில் முஸ்லிம்கள் தொடர்பில் தெரிவித்த கருத்துக்கள் கவனக்குவிப்பைப் பெற்றுள்ளன.

'' மஹிந்த ராஜபக்சவிற்கு அப்போது முஸ்லிம் மக்களின் முழுமையான ஆதரவு இருந்தது. எனினும் தேசிய மற்றும் சர்வதேச சதிகளின்  மூலமாக பொய்யான கருத்துக்களை உருவாக்கி எம்மிடம் இருந்து முஸ்லிம் மக்களை வேறுபடுத்தும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன. எனினும் முஸ்லிம் மக்களை பாதுகாக்க நாம் விரைவான நடவடிக்கைகளை முன்னெடுத்தோம். இராணுவத்தை பயன்படுத்தி குழப்பகர சூழலை கட்டுப்படுத்தி முஸ்லிம் மக்களை பாதுகாக்கும் நடவடிக்கைகளை முன்னெடுத்தோம்'' எனக் குறிப்பிட்ட அவர், ''இந்த நாட்டில் வாழும் முஸ்லிம் மக்களுக்கு எந்த ஒரு சந்தர்ப்பத்திலும் ராஜபக்ச ஆட்சியில் அச்சத்தில் வாழக்கூடிய சூழலை உருவாக்க நான் இடமளிக்கமாட்டேன். இந்த வாக்குறுதியை நான் வழங்குகின்றேன். முஸ்லிம் தலைமைகள், மத தலைவர்கள் ஆகிய பலருடன் இன்றும் நாம் பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்து வருகின்றோம். முஸ்லிம் மக்களின் மனங்களில் உள்ள அச்சம் என்ன என்பதை அறிந்து அவற்றை நீக்கும் வேலைத்திட்டம் ஒன்றினை முன்னெடுப்பது குறித்து கலந்துரையாடி வருகின்றோம்'' என்றும் தெரிவித்துள்ளார்.

கோத்தபாய ராஜபக்ச 2020 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் வேட்பாளராகக் களமிறங்குவதற்கான ஆயத்தங்களில் ஈடுபட்டு வருகின்ற நிலையில் மேற்படி கருத்துக்கள் அந்த இலக்கினை அடிப்படையாகக் கொண்டு முஸ்லிம்களின் மனதை வெல்வதற்காகத் தெரிவிக்கப்பட்டதாகவே அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர்.

கடந்த ஆட்சிக்காலத்தில் முஸ்லிம்களுக்கு எதிராக பௌத்த இனவாத சக்திகளின் தாக்குதல்கள் மேலெழுந்த சமயம், நாட்டின் பாதுகாப்பு தொடர்பான முழுமையான அதிகாரத்தையும் தன்வசம் கொண்டிருந்த கோத்தபாய ராஜபக்ச அவற்றைத் தடுத்து நிறுத்த காத்திரமான முயற்சிகளை முன்னெடுக்கவில்லை என்ற குற்றச்சாட்டு அவர் மீது முஸ்லிம்கள் தரப்பில் முன்வைக்கப்படுகிறது. இது நியாயமானதுமாகும். இதன் காரணமாகவே அவர் சார்ந்த ராஜபக்ச அரசாங்கத்தை தோற்கடிப்பதில் முஸ்லிம்கள் பெருமெடுப்பில் முன்னின்று வாக்களித்தனர்.

இருந்தபோதிலும் கோத்தபாய ராஜபக்ச குறித்த இப்தார் நிகழ்வில் தெரிவித்த கருத்தானது, தான் ஜனாதிபதி வேட்பாளராக களமிறங்கும்பட்சத்தில் முஸ்லிம்களின் ஆதரவு அவசியம் என்பதை உணர்ந்ததன் வெளிப்பாடாகவே பார்க்கப்பட முடியும்.

முஸ்லிம்களின் ஆதரவின்றி தனித்த பௌத்த பெரும்பான்மை மக்களின் வாக்குகளால் ஆட்சியமைக்க முடியும் என்ற நிலைப்பாட்டில் இருந்தவர்கள், இன்று முஸ்லிம்களையும் அரவணைத்துச் செல்வதன் மூலமாகத்தான் இந்த நாட்டில் நிலையான ஆட்சியொன்றை அமைக்க முடியும் என்பதை உணர்ந்திருக்கிறார்கள் எனின் அதுவே கடந்த தேர்தல்களில் முஸ்லிம்கள் எடுத்த நிலைப்பாட்டுக்கு கிடைத்த வெற்றியாகும்.

ராஜபக்சக்கள் மோசமானவர்கள், நல்லாட்சியினர் நல்லவர்கள் என்று சொல்ல முடியாதளவுக்கு இரு சாராரினதும் ஆட்சிக்காலங்களில் முஸ்லிம்கள் மிகக் கடுமையாகவே பாதிக்கப்பட்டுள்ளனர். இருந்தபோதிலும் இலங்கையின் கட்சி அரசியல் கலாசாரம் மற்றும் தேர்தல் முறைமைகளுக்கிணங்க முஸ்லிம்கள் இதில் ஏதேனுமொரு சக்தியை ஆதரித்தேயாகவேண்டிய நிலையுள்ளது. எனினும் நாட்டுக்கு தலைமை வகிக்க இவர்களில் யார் பொருத்தவர்கள் என்ற தீ்ர்மானத்தை முஸ்லிம் சமூகம் எடுப்பதற்கு இன்னமும் காலம் இருக்கின்றது என்பதே யதார்த்தமாகும். அதுவரை நாம் அவசரப்படாமல் இருப்பதே சிறந்ததாகும்.

6 கருத்துரைகள்:

Yes very true , Well said

Expecting Muslim Support is a Game B...........

May allah guide this country.
May allah help us to unity with each others.
Our unity only will bring help of allah.
Political and other powers cannot dominate our ummah.
We have to close allah.
Then allah always be with us.
This is what quran hadees briefed.
Be unity insha allah each other and we obey our acju togther.we respect our real n honest scholars.

2012 ல் ஜமிய்யதுல் உலமா வினர் அன்றைய அரசின் முக்கியஸ்தரான இக் கோதபாய ராஜபக்ஷயை சந்தித்து பொது பல சேனா பற்றி முறையிட்ட் போது அவ் அமைப்பினருக்கு எதிராய் எந் நடவடிக்கையும் எடாமல் ஒரு சிறு குழுதான் இவர்கள் அவர்கள் பற்றி அலட்டிட வேண்டாம் என்றவரும், பொது பல சேனாக்களுக்கு உயிர் அச்சுறுத்தல் இருப்பதால் அவர்களின் பாதுகாப்புக்காக ஆயுதம் வழங்க வேண்டும் எனற தலைவருமான இவர் இன்றாவது அந்த குதர்க்க வாத அமைப்பை பற்றி ஏதாவது சொல்றாரா இல்லையே!!
BBS ன் அடாவடியை அன்றும் போலீஸ் படை பார்த்து கொண்டு இருந்தது இன்றும் அவ்வாறே பார்த்து கொண்டிருக்கிறது; தற்போதைய அரச எதிர்பாளரான இந்த அரசியல் வாதி நடப்பு அரசின் எதிர்ப்புக்காயாவது இப்போலிஸ்களை பற்றி ஏதாவது சொல்றாரா இல்லையே
இவரை எப்படி நம்புவது ???

நயவஞ்சகர்களைப் பற்றி நீங்கள் இருவகையான (அபிப்பிராயங்கள் கொண்ட) பிரிவினர்களாக இருப்பதற்கு உங்களுக்கு என்ன நேர்ந்தது? அவர்கள் செய்த தீவினைகளின் காரணத்தால் அல்லாஹ் அவர்களைத் தலை குனிய வைத்துவிட்டான்; எவர்களை அல்லாஹ் வழி தவறச் செய்து விட்டானோ, அவர்களை நீங்கள் நேர்வழியில் செலுத்த விரும்புகிறீர்களா? எவரை அல்லாஹ் வழி தவறச் செய்து விட்டானோ, நிச்சயமாக அவருக்கு (மீட்சியடைய) எவ்வித வழியையும் (நபியே!) நீர் காணமாட்டீர்.
(அல்குர்ஆன் : 4:88)

Tani maram katchi thewai.muslimgal pirindu seyatpaduwadu varundak koodiyadu.
Muslim enra peyaril islam theriyadavargalai Muslim endru kooravum mudiyadu

Post a Comment