Header Ads



மரக்கறி விலை அதிகரிப்பதால் வட்டக்காயும், மரவள்ளியும் சாப்பிடுங்கள் - உடலுக்கும் நல்லது

மரக்கறிகளின் விலை தொடர்ச்சியாக அதிகரித்து வருவதன் காரணமாக பொதுமக்கள் மரவள்ளிக்கிழங்கு மற்றும் வட்டக்காய் என்பவற்றை உணவுக்கு எடுத்துக்கொள்ளுமாறு அமைச்சர் மகிந்த அமரவீர கோரிக்கை விடுத்துள்ளார்.

இன்று இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் கலந்து கொண்டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

போஞ்சி, கரட், கறிமிளகாய் போன்ற மரக்கறிகளின் விலை வெகுவாக அதிகரித்துள்ளது இதன் காரணமாக அவ்வாறான மரக்கறிகளை தவிர்த்து விலை குறைந்த மரக்கறிகளை பொதுமக்கள் உணவுக்கு எடுத்துக்கொள்ளுமாறும் அவர் கோரியுள்ளார்.

மரவள்ளிக்கிழங்கு புற்றுநோய்க்கு சிறந்த மருந்து, வட்டக்காய் உண்பதால் உடலுக்கு நலம், எனவே பொதுமக்கள் இவ்வாறான உணவுகளைத் தேர்ந்தெடுக்குமாறும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

2 comments:

  1. ஓ எல்லாம் முடிஞ்சு போச்சு இலுப்பையில் ஏறியதாம் முடப்பேய் என்றாற்போல் ஆகிவிட்டது நல்லாட்சி ஜோக்கர்களின் நிலமை. So மக்களே உங்கள் உள்ளங்கைகளை சுத்தமாக்கி வைத்துக்கொள்ளுங்கள் நக்கி பருகும் காலம் வரப்போகிறது போல் தெரிகிறது.

    ReplyDelete
  2. நக்கி பருகும் காலம் எப்பவோ வந்திட்டு தம்பி, பாகுபாடில்லாமல் நாம் சிறுபான்மையினர் ஒன்று சேர்த்து கொண்டுவந்த மைத்திரி நமக்கெல்லாம் துரோகம் செய்வதுமட்டுமல்ல, நாட்டையே அவரால் காப்ற்றமுடியவில்லை.
    இப்படித்தான் ஒருமுறை காங்க்கிறஸ் கட்சி இந்தியாவில் பஞ்ஞம் வந்தப்போ எலிக்கறி சாப்பிடுங்கோ என மாளிகையில் சுகபோகம் அனுபவித்துகொண்டு அறிக்கை விட்டாங்க்கோ பாருங்க்கோ, அதுதான் அவங்க ஆட்சியை விட்டும் வீட்டுக்கு போக வந்தது.
    இதுமாதிறி, இதுவே கடை ஆட்சியாக இவர்களுக்கும் அமைய வேண்டும், அதற்கு நாமெல்லாம் மீண்டும் வாக்கில் ஒன்றுசேறுவோம், சில சுயனலம் பிடித்த சோனிகளை தவிர.

    ReplyDelete

Powered by Blogger.