Header Ads



7 பேர் கொண்ட குழுவே, பிறையைத் தீர்­மா­னிப்பதில் இறுதித் தீர்­மானம் மேற்­கொள்ளும்

எதிர்­கா­லத்தில் பிறையைத் தீர்­மா­னிக்கும் விட­யத்தில் தற்­போ­துள்ள கட்­ட­மைப்­புக்கு ஆலோ­சனை வழங்­கு­வ­தற்கு ஏழு பேர் கொண்ட ஆலோ­சனை சபை­யொன்று நேற்று நிய­மிக்­கப்­பட்­டது. இந்த ஆலோ­சனை சபையே பிறையைத் தீர்­மா­னிக்கும் விட­யத்தில் இறுதித் தீர்­மானம் மேற்­கொள்ளும்.

நேற்று மாலை முஸ்லிம் சமய பண்­பாட்­ட­லு­வல்கள்  திணைக்­க­ளத்தில் அஞ்சல், அஞ்சல் சேவைகள் மற்றும் முஸ்லிம் சமய விவ­கார அமைச்சர் எம்.எச்.ஏ.ஹலீம்  தல­மையில் பிறை விவ­காரம் தொடர்­பான கூட்டம் ஒன்று நடை­பெற்­றது. இக் கூட்­டத்தில் அகில இலங்கை ஜம்­இய்­யத்துல் உலமா சபையின் பிர­தி­நி­திகள், கொழும்பு பெரிய பள்­ளி­வா­சலின் பிர­தி­நி­திகள், முஸ்லிம் சமய பண்­பாட்­ட­லு­வல்கள் திணைக்­க­ளத்தின் பிர­தி­நி­திகள் கலந்­து­கொண்­டி­ருந்­தனர்.

ஆலோ­சனை சபையின் உறுப்­பி­னர்­க­ளாக 
அகில இலங்கை ஜம்­இய்­யத்துல் உலமா சபையின் தலைவர் 
உலமா சபையின் பிரதித் தலைவர் அஷ்ஷெய்க் அகார் மொகமட், 
கொழும்பு பெரிய பள்­ளி­வாசல் தலைவர் சட்­டத்­த­ரணி நத்வி பஹா­வுதீன், பிறைக்­குழுத்  தலைவர் அப்துல் ஹமீத் பஹ்ஜி, 
முஸ்லிம் சமய பண்­பாட்­ட­லு­வல்கள் திணைக்­க­ளத்தின் பணிப்­பாளர் அஷ்ஷெய்க் எம்.ஆர்.எம்.மலிக், 
வக்பு சபையின் தலைவர் சட்­டத்­த­ரணி எஸ்.எம்.எம்.யாஸீன் ஆகியோர் நிய­மிக்­கப்­பட்­டுள்­ளனர்.

இதே­வேளை, அ.இ.ஜ.உ., மு.ச.ப.திணைக்­களம், கொழும்பு பெரிய பள்­ளி­வாசல் ஆகிய தரப்­பு­க­ளி­லி­ருந்து ஐவர் கொண்ட மூன்று குழுக்கள் நிய­மிக்­கப்­ப­ட­வுள்­ளன. இக்­கு­ழுக்கள் ஆலோ­சனை சபைக்கு ஒத்­து­ழைப்­பு­களை வழங்­க­வுள்­ளன.

பிறை தீர்­மா­னிக்கும் தற்­போ­தைய கட்டமைப்பில் மாற்றங்கள் இடம்பெறாத நிலையில், பிறை தொடர்பான இறுதித் தீர்மானம் ஆலோசனை சபையினாலேயே மேற்கொள்ளப்படவுள்ளது.

 ARA.Fareel



8 comments:

  1. ACJU President name correct?

    ReplyDelete
  2. The members of this committee should be first given lessons and training in methods of Conflict Resolution.

    ReplyDelete
  3. பழைய குருடி கதவைத்திறடி

    ReplyDelete
  4. Who will be the head the committee, how will the decisions be made? majority vote? Or Mashoora?
    These are key questions Which need answers?

    ReplyDelete
  5. Who will be the head the committee, how will the decisions be made? majority vote? Or Mashoora?
    These are key questions Which need answers?

    ReplyDelete
  6. It is so easy.why can't we follow the Saudi crescent.

    ReplyDelete
  7. திருவிளையாடல் பகுதி - 2 , தரீக்கா கூட்டம் இன்னும் நிர்வகிக்கிறது எம்மை

    ReplyDelete

Powered by Blogger.