Header Ads



சிறிலங்காவின் கட்டுமானப் பணிகளில், 70 வீதத்தை கைப்பற்ற சீனா குறி

சிறிலங்காவில் 40 வீத கட்டுமானத் திட்டங்களில் சீன நிறுவனங்களே ஈடுபட்டுள்ளதாக, இலங்கை கட்டுமான நிறுவகத்தின் தலைவர் கலாநிதி ரொகான் கருணாரத்ன தெரிவித்துள்ளார்.

”சீனாவின் அனைத்துலக ஒப்பந்தகாரர் சங்கம், சிறிலங்காவில் 40 வீதமான கட்டுமானப் பணிகளை மேற்கொள்கிறது.

அடுத்த மூன்று ஆண்டுகளில் சீனாவின் அனைத்துலக ஒப்பந்தகாரர் சங்கம், சிறிலங்காவின் கட்டுமானத் தொழில்துறையில் தமது பங்கை 70 வீதமாக அதிகரிக்கவுள்ளது. இதனால் எமது உள்ளூர் நிறுவனங்கள் பாதிக்கப்படும்.

அதனால், சீனாவின் அனைத்துலக ஒப்பந்தகாரர் சங்கத்துடன் புரிந்துணர்வு உடன்பாடு ஒன்றில் கையெழுத்திட்டுள்ளோம்.

சிறிலங்காவில் கட்டுமானத் திட்டங்களின் போது, உள்ளூர் நிறுவனங்களுடன் அதனைப் பகிர்ந்து கொள்ளும் வகையில் இந்த உடன்பாடு கையெடுத்திடப்பட்டுள்ளது. இதனால் ஆபத்து குறைக்கப்பட்டு விட்டது.

அத்துடன், எந்தவொரு நாட்டினதும்,வெளிநாட்டு நிறுவனங்கள் கட்டுமானப் பணிகளில் ஈடுபடும் போது, ஒரு சிறிலங்கா பங்காளரை வைத்துக் கொள்ள வேண்டும் என்பதை வலியுறுத்தும், அமைச்சரவைப் பத்திரம் ஒன்றும் சமர்ப்பிக்கப்படவுள்ளது” என்றும் அவர் கூறியுள்ளார்.

3 comments:

  1. Very good now sri lanka will realized who is real terror. this good lesson to problem creator in SL.

    ReplyDelete
  2. சீனாவில் 23 மில்லியன் முஸ்லிம்கள் வாழ்கிறார்கள் (இலங்கையின் மொத்த சனத்தொகை இது).
    ஆனால், அங்கு முஸ்லிம் பாடசாலைகள் தடைசெய்யப்பட்டுள்ளது. தற்போது பல முஸ்லிம் பெயர்கள் பிள்ளைகளுக்கு சூட்டுவது தடைசெய்யப்பட்டுள்ளது. ரம்ளான் நோண்பு, பண்டிகைகளை அடுத்த வருடத்திலுருந்து தடைசெய்யப்படும் என தெரிகின்றது.

    இலங்கை சீனாவின் முழு கட்டுப்பாட்டுக்குள் வந்த பின்னர், மகிந்தவோ எவரோ, சீனா சொல்வது தான் சட்டம். எனவே, இலங்கை அமேரிக்க-இந்திய பக்கம் இழுபட்டால் என்ன, சீனா பக்கம் இழு பட்டால் என்ன, வித்தியாசம் ஒன்றுமில்லை.

    ReplyDelete
  3. இறுதி முடிவு, ஹாங்காங்கில் பிரிட்டிஷாரிடமிருந்து சீனர் பெற்ற அனுபவத்தை எம்மோடு பகிர்ந்து கொள்வதாகத்தான் இது இருக்குமோ தெரியாது!

    ReplyDelete

Powered by Blogger.