Header Ads



2 வகையான பெண்கள்.

அன்பர்களே! 

 வீட்டிலிருந்து நீங்கள் வெளியேரிச் செல்லும் போது இரண்டு வகையான பெண்களைச் சந்திப்பீர்கள். 

முதலாவது: 
(யூஸுப் அலைஹிஸ்ஸலாம் அவர்களை துர் நடத்தையின் பால் அழைத்த) அஸீஸினுடைய மனைவியைப் பீடித்திருந்த  நோய் மூலம் சோதிக்கப்பட்ட பெண். இவ்வாறான பெண் தன்னை அலங்கரித்துக் கொண்டு, நறுமணம் பூசிக் கொண்டு, தனது அழகை வெளிக்காட்டிக் கொண்டு இருப்பாள். அவளது தோற்றமோ,  *" (என் இச்சையைத் தீர்த்துக் கொள்ள இணங்கி) "வாரும்"*  என்று அழைத்துக் கொண்டிருக்கும். 

இரண்டாவது: 
ஹிஜாப் அமைப்பைப் பேணி, தன் அவ்ரத்களை முழுமையாக மறைத்துக் கொண்டிருக்கும் பெண். தன் தேவைகளை நிறைவேற்றிக் கொள்வதற்கான அவசியப்பாடு அவளை வெளியேருவதற்கு நிர்ப்பந்தித்துள்ளது. அவளது நிலமையோ,   *"இம்மேய்ப்பாளர்கள் (தண்ணீர் புகட்டி விட்டு) விலகும் வரை நாங்கள் எங்கள் (ஆடுகளுக்குத்) தண்ணீர் புகட்ட முடியாது - மேலும் எங்கள் தந்தை மிகவும் வயது முதிர்ந்தவர்"* என்பதைப் போல் இருக்கும்.  

முதல் சாராருடன் யூஸுப் அலைஹிஸ்ஸலாம் நடந்து கொண்டது போல் நடந்து கொள்ளுங்கள். உங்கள் பார்வையைத் தாழ்த்திக் கொண்டு, *" அல்லாஹ்விடம் பாதுகாவல் தேடுகின்றேன்"* என்று கூறிக் கொள்ளுங்கள்.

இரண்டாம் வகையைச் சார்ந்த பெண்ணுடன் மூஸா அலைஹிஸ்ஸலாம் அவர்கள் ஆடுகளுக்கு நீர்ப்புகட்ட வந்த இரு பெண்களுடனும்  நடந்து கொண்டது போல் நடந்து கொள்ளுங்கள்.  பண்பான முறையில் அவளுக்கு உதவி புரிந்து விட்டு, உங்கள் தேவைகளைக் கவனிக்கச் சென்று விடுங்கள். மூஸா நபியும் தண்ணீர் புகட்டி அவ்விரு பெண்களுக்கும் உதவிய பின்னர், மர நிழலை நோக்கிச் சென்றார். 

🌹 யூஸுப் நபியின் கற்பொழுக்கமானது, அவர் எகிப்தின் ஜனாதிபதியாவதற்குக் காரணமாக இருந்தது. 

🌹நபி மூஸா அவர்களின் வீரமோ, அவருக்கு ஸாலிஹானதொரு  மனைவி, புகழிடம் கிடைக்கக் காரணமாக இருந்தது.

🤲இறைவா! எமக்குக் கற்பொழுக்கத்தைத் தந்தருள்வாயாக.. 


🌻பெண்ணின் ஆடையானது,  அவளது தந்தையின்   வளர்ப்பு முறைமையையும், சகோதரனின் ரோசத்தையும், கணவனின் ஆண்மையையும் , தாயின் அவதானம், கண்காணிப்பையும் பரைசாட்டுகின்றது. இவை அனைத்துக்கும் முன்னால், 'அல்லாஹ் தன்னை கண்காணித்துக கொண்டிருக்கின்றான் ' என்ற அவளது உணர்வு  எத்தகையது? என்பதைச் சுட்டிக்காட்டுகின்றது. 

👉 இதனாலேயே ஈஸா அலைஹிஸ்ஸலாம் அவர்களின் தாய், தந்தையின்றி பிள்ளையைப் பெற்ற வேளை அவரது சமூகம் இவ்வாறு கூறியது: 
 *"ஹாரூனின் சகோதரியே! உமது தந்தை துர் நடத்தையுள்ளவராக இருக்கவில்லை, அவ்வாறே உமது தாயாரும் நடத்தை கெட்டவராக இருக்கவில்லை"*
அவரிடத்திலே, அவரது சகோதரன், தந்தை, தாய் போன்ற மூவரையும் நினைவுகூறினர். 
 ஏனெனில், இம்மூவரின் சீர்திருத்தத்திலேயே அவர்களின் பராமரிப்பிலிருக்கும் பெண்ணின் சீர்திருத்தம் தங்கியுள்ளது.

🧕🏾ஒரு பெண் கூறுகின்றாள்: "தனது அழகை வெளிக்காட்டிக் கொண்டு, அரை குறையாக ஆடையணிந்து கொண்டு செல்லும் யுவதிகளைக் கண்டால், நானோ அவளது பெற்றோரைப் பற்றி சிந்திப்பேன். *"அவர்களை நிறுத்தி வையுங்கள். நிச்சயம் அவர்கள் விசாரிக்கப்படுவார்கள்"*  என்ற அல் குர்ஆன் வசனம் ஞாபகத்தில் வரும். எனவே, எனது தாயும் அவ்வாறு விசாரிக்கப்படக் கூடாது என்பதற்காக எனது வெட்க உணர்வையும் கற்பொழுக்கத்தையும் மேலும் அதிகரித்துக் கொள்வேன். 

🔗 மது போன்ற இவ்வுலகிலே தடை செய்த  அநேக விடயங்களை அல்லாஹ் சுவனத்திலே ஆகுமாக்கி இருக்கின்றான். ஆனால், *நிர்வாணத்திற்கு*  ஈருலகிலும் தடை விதித்துள்ளான். ஒரு படி மேலாக, அதிகம் மறைத்தலை சுவன இன்பங்களுல் ஒன்றாகக் குறிப்பிடுகின்றான். 
 *"நிச்சயமாக நீர் இ(ச் சுவர்க்கத்)தில் பசியாகவோ நிர்வாணமாகவோ இருக்கமாட்டீர்"*  என்கின்றது அல்குர்ஆன். 

🌾 சமூக வலை தளங்களில் பரிமாரப்பட வேண்டிய பயன்மிக்க ஒரு தலைப்பாக இவ்விடயம் இருப்பது வெளிப்படையானதே..

💐எனவே, இதனைப் பரிமாறுபவருக்கு அல்லாஹ் அருள்பாளிப்பானாக.. 
💐 மறுமையிலே அவரது நன்மைத் தட்டில் இதனை ஆக்கிவைப்பானாக..

 *_தமிழாக்கம்:_* 

 _உம்மு உரைபா உமைரா நூருல் ஹம்ஸா._
(அஸ்ஹரிய்யா)
 *மு.ம.அ.க -கள்எளிய*

8 comments:

  1. Dear Admin.....

    The article is good,,,,

    Is the picture posted suitable???

    If not, please remove the picture ...

    let the article be as it is for the use of readers,,,

    Thant you.

    ReplyDelete
  2. One cannot simply cannot categorize females into two. All the women who are dressed fashionably cannot be assumed to inviting for bad behaviour. This is Taliban thinking.

    ReplyDelete
  3. முஸ்லிம் பெண்களின் ஆடைத் தெரிவு பற்றி விமர்சிப்பது எவ்வளவு வக்கிரமான தவறோ அதுபோலவே எனைய மத இன பெண்களின் ஆடைத் தெரிவை விமர்சிப்பதும் அதே அளவு வக்கிரமுள்ள தவறாகும். யாழ்பாண முஸ்லிம் போன்ற பொறுப்புள்ள இதழில் இத்தகைய கட்டுரைகள் வருவது அதிற்ச்சி தருகிறது.

    ReplyDelete
  4. இந்த கட்டுரை typical Muslim mentality யை காட்டுகிறது.

    ReplyDelete
  5. i accept your comment good.

    ReplyDelete
  6. யூஸூப்நபியின் மனைவி சுலைஹாஅம்மையாரை
    துர்நடத்தையுள்ளபெண்
    என்று கூறக்கூடாது.

    ஒருவிடுத்தம் யூசூப்நபியை
    ப்பார்த்த பெண்கள் அழகில்
    மயங்கி கையை அறுத்த
    தோடு நபியவர்களை மனித
    ர்அல்ல அவர் மலக்குஎன்ற
    னர்.

    அப்படியிருக்க தன் இல்ல
    த்தில் தனதுகட்டுப்பாட்டில்
    யூசூப்நபியவர்கள் இருந்து
    ம் அவர்களை சுலைஹா
    அம்மையார் நெருங்க வில்லை!

    எப்பொழுது மனக்கட்டுப்பா
    ட்டை இழந்து போனபோதே
    தனது விருப்பத்திற்கு
    அழைத்தார்கள். அதுவும்
    வெட்கம்நாணத்தோடும் அச்
    சத்தோடும்.

    அவர்களின் மனதிலிருந்த
    காதலை திருக்குர்ஆன்
    "ஷஙபத் " என்ற சொல்லா
    ல் குறிப்பிடுகின்றது.

    சுலைஹா நாயகியை திரு
    க்குர்ஆன் குறை கூறவில்
    லை. நபியவர்கள் குறை
    கூறவில்லை . முஃதஸி
    லாக்கள் வஹாபிகள் தவிர
    வேறுஎவரும் குறை கூற வில்லை .
    யூசூப நபியின் மனவியை
    தகாத வார்த்தைகளால்
    உதாரணமாகவும்கூட கூற
    க்கூடாது.

    ஒருதுர்நடத்தையுள்ள பரத்
    தைக்கு சுலைஹாஅம்மை
    யாரை உதாரணமாகக்கூறி
    யிருப்பது கண்டிக்கத்தக்கது

    ReplyDelete
  7. A real wahabi mentality .They usually think in crooked and narrow way .

    ReplyDelete

Powered by Blogger.