Header Ads



முஸ்லிம்களின் பிரதிநிதித்துவம் 18 மாவட்டங்களில் இல்லாமல் போகும் ஆபத்து

-AAM. Anzir-

புதிய தேர்தல் முறையின்படி மாகாணத் தேர்தல் நடத்தப்பட்டால், முஸ்லிம்களின் பிரதிநிதித்துவம் 18 மாவட்டங்களில் இல்லாமல் போகும் ஆபத்து ஏற்பட்டுள்ளது.

சபாநாயகர் கரு, அமைச்சர் பைஸர் முஸ்தபா மற்றும் தேர்தல் ஆணையாளர் மகிந்த தேசப்பிரிய உள்ளிட்ட குழுவினரால்  ஏற்பாடு செய்யப்பட்டிருந்த உயர்மட்ட கூட்டத்திலேயே இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

பேராசிரியர் ஹிஸ்புல்லா, புதிய தேர்தன் முறையின் கீழ் மாகாணத் தேர்தலை நடத்தினால் முஸ்லிம்களின் பிரதிநிதித்துவம் 18 மாவட்டங்களில் இல்லாமல் போகுமெனவும் எனவே புதிய தேர்தல் முறை வேண்டாமென வலியுறுத்தியுள்ளார்.

எனினும் கூட்டத்தில் பங்கேற்றுள்ள மகிந்த தேசப்பிரிய, எந்த முறையிலாவது தேர்தலை நடத்த வேண்டுமென வலியுறுத்தியுள்ளார். 

அமைச்சர் பைஸர் முஸ்தபா, மௌனம் காத்து நின்றுள்ளார்.

இந்த நிலையில் மைத்திரிபால சிறிசேனவின் விருப்பம் புதிய தேர்தல் முறையில் தேர்தலை நடத்துவதாகுமெனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

5 comments:

  1. Provincial members should be elected according to new constitution.

    ReplyDelete
  2. No neednew constitution.

    ReplyDelete
  3. @Peace,
    Members should be elected according to the demographic distribution as well as the population density, not because of political support

    ReplyDelete
  4. எந்த முக்கியமான விடயங்கள்பற்றியும் தமிழரும் முஸ்லிம்களும் ஆரோக்கியமாக விமர்சிக்கிறார்கள் இல்லை என்பது கவலையாக இருக்கு.தேர்தல் முறைமை பற்றி தேசிய அரசியலில் தமிழர் முஸ்லிம்கள் மலையக தமிழரிடை பொது முடிவு இல்லாமல் அழுத்தம் ஏற்படாது. 1987ல் இந்தியாவும் புலிகள் அல்லாத தமிழ் அமைப்புகளும் இணைந்தும் இப்போது இந்தியாமற்றும் மேற்க்குநாடுகளும் தமிழ் தலைமையும் இணைந்து அழுத்தம் தரும் வடகிழக்கு இணைப்புபற்றியும் பொது உடன்பாடு ஏற்படாமல் எந்த அழுத்தத்தையும் ஏற்படுத்த முடியாது. நேர்மையான பொது விவாதம் இல்லாமல் பொது உடன்பாட்டை ஏற்படுத்துவது சாத்தியமில்லை.

    ReplyDelete

Powered by Blogger.