Header Ads



164 பாராளுமன்ற உறுப்பினர்களையும், கைது செய்யுமாறு ராவன பலய கோரிக்கை

இலங்கை மத்திய வங்கி பிணை முறி மோசடியுடன் தொடர்புடைய பேர்ப்பச்சுவல் டிரசரீஸ் நிறுவன உரிமையாளர் அர்ஜுன் அலோசியஸிடம் பணம் பெற்ற நாடாளுமன்றத்திலுள்ள 164 உறுப்பினர்களையும் கைது செய்து விசாரணை செய்ய வேண்டும் என வலியுறுத்தி இராவணா பலய அமைப்பு இலஞ்ச விசாரணை ஆணைக்குழுவில் இன்று முறைப்பாடு செய்துள்ளது.

இராவணா பலய அமைப்பின் பொதுச் செயலாளர் இத்தேகந்தே சத்தாதிஸ்ஸ தேரர் இன்று -11- இந்த முறைப்பாட்டை செய்துள்ளார்.

இந்த முறைப்பாட்டை செய்து விட்டு ஆணைக்குழுவில் இருந்து வெளியேறிய தேரர், ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில்,

பிணைமுறி மோசடி விவகாரத்திற்கு பிரதமர் ரணில் விக்ரமசிங்கவே பொறுப்புகூற வேண்டும் என்பதுடன் இவை அனைத்திற்கும் பொறுப்பாளர் மிக விரைவில் பிடிபடுவார் எனவும் கூறியுள்ளார்.

பிணைமுறி மோசடி வழக்கில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பேர்ப்பச்சுவல் டிரசரீஸ் நிறுவன உரிமையாளர் அர்ஜுன் அலோசியஸிடம் பணம் பெற்றுக் கொண்டதாக முன்னாள் அமைச்சர் தயாசிறி ஜயசேகர, இராஜாங்க அமைச்சர் சுஜீவ சேனசிங்க, பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா உள்ளிட்டவர்கள் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

இவர்களைத் தவிர, ஸ்ரீலங்கா நாடாளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் 118 அல்லது 164 உறுப்பினர்களும் அர்ஜுன் அலோசியஸிடம் பணம் பெற்றிருப்பதாக தெரிவிக்கப்பட்டு வருகின்றது.

இந்த விவகாரம் தென்னிலங்கை அரசியல் களம் மட்டுமன்றி இலங்கை முழுவதிலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றது.

1 comment:

  1. Yes very good action and too late. why not go against the former rulers who stole billion.Don't be pro party go against politicians who destroy the country without considering their color(party).What we needed is this type work by religious people to protect country from this thieves.

    ReplyDelete

Powered by Blogger.