Header Ads



ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட, நான் தயார் - ராஜித அறிவிப்பு


அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் பொது வேட்பாளராக போட்டியிட தாம் தயாராக இருப்பதாக அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார். பொது வேட்பாளராக போட்டியிடுமாறு தன்னிடம் கோரிக்கை விடுத்தால் அதற்கு தாம் தயார் எனவும் வேறு ஒருவர் பொது வேட்பாளராக போட்டியிட்டால் அவரை வெற்றி பெற செய்யவும் தயாராக இருப்பதாகவும் ராஜித குறிப்பிட்டுள்ளார்.

கடந்த உள்ளூராட்சி சபைத் தேர்தல் முடிவுகளுக்கு அமைய ராஜபக்ச அணி தோல்வியடைந்துள்ளது. பெரும்பான்மை பலம் தமது அணியினருக்கே கிடைத்துள்ளது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் ஏதோ ஒரு வகையில் கோத்தபாய ராஜபக்ச போட்டியிட்டால், தாம் மிகவும் மகிழ்ச்சியடைவதாகவும் அவருக்கு தமிழ், முஸ்லிம் மக்களின் வாக்குகள் கிடைக்காது என்பது தமது அணியின் வேட்பாளர் இலகுவாக வெற்றி பெறுவார் எனவும் அமைச்சர் சேனாரத்ன குறிப்பிட்டுள்ளார்.

2 comments:

  1. ஹ்ம்ம் சரியாக சொன்னீர் தமிழ் , முஸ்லிம் மக்களின் வாக்கு ''' அதாவது தமிழ் மொழி பேசும் மக்களின் வாக்கு அதுசரி அமைச்சரே நீங்கள் தற்போது இந்த மக்களின் வாக்குகளால் தான் இந்த போல்லாட்சி அமைத்தீர்கள் சரி சொல்லுங்கள் இந்த மக்களின் இது வரைக்கும் எதனை முக்கியமான பிரச்சினைகளை முடித்து கொடுத்துள்ளது உங்கள் ஆட்சியில். தமிழ் பேசும் ஹிந்து இஸ்லாமிய மக்களே இந்தமாதிரி பேசும் நபர்கள் இடம் இருந்து கவனம் தேவை இவர்கள் எங்களை எப்போதும் கறிவேப்பிலை யாகவே பார்க்கின்றனர் நோக்குகின்றனர் .

    ReplyDelete
  2. நாட்டுக்கு மிகவும் பொறுத்தமான சனாதிபதி.எங்கள் அனைவரின் வாக்குகளும் உங்களுக்குத்தான். இப்போதே உங்களை சனாதிபதியாக்க நாம் தயார்.

    ReplyDelete

Powered by Blogger.