Header Ads



இஸ்ரேல் - ஈரான் தாக்குதல்களுக்கு மத்தியில் ஈரான் செல்கிறார் மைத்திரி

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இரண்டு நாள் உத்தியோகபுர்வ விஜயமொன்றை மேற்கொண்டு நாளை (12) ஈரான் செல்லவுள்ளார்.

ஈரான் ஜனாதிபதி ஹஸன் ரவ்ஹானியின் உத்தியோகபுர்வ அழைப்பின் பேரில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஈரான் செல்லவுள்ளார்.

இலங்கையுடனான பொருளாதார, வர்த்தக தொடர்புகளை பலப்படுத்துவது மற்றும் ஈரான் முதலீடுகளை இலங்கையில் அதிகரிப்பது என்பன குறித்து ஜனாதிபதியின் விஜயத்தின் போது கவனம் செலுத்தப்படவுள்ளது.

ஈரான் ஜனாதிபதிக்கும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் இடையிலான சந்திப்பு நாளை மறுதினம்( 13 ) இடம்பெறவுள்ளதாகவும், இதன்போது இரு நாடுகளுக்கும் இடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. 

அதேவேளை இஸ்ரேல் - ஈரான் நாடுகளிடையே தாக:குதல் சம்பவங்கள் நடந்துள்ள நிலையிலும், அமெரிக்கா ஜனாதிபதி ஈரானுடனான ஒப்பந்ததிலிருந்து விலகியுள்ள நிலையிலும், ஜனாதிபதியின் ஈரான் பயணம் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.


No comments

Powered by Blogger.