Header Ads



சவுதி விமான நிலையத்தை, தாக்கவந்த ஏவுகணை தாக்கியழிப்பு

சவுதி அரேபியாவின் தலைநகர் ரியாத்தை நோக்கி வந்த ஏவுகணையை சவுதி ராணுவம் இடைமறித்து தாக்கி அழித்துள்ளது.

ஏமன் அரசுக்கு எதிராக ஈரானின் ஆதரவுடன் உள்நாட்டு ஹவுத்தி படையினர் போராடி வருகின்றனர்.

இவர்களுக்கு எதிராகவும், ஏமன் அரசுக்கு ஆதரவாகவும் சவுதி அரேபியா தலைமையிலான கூட்டுப்படைகள் ஆதரவு அளித்து வருகின்றன.

இதனால் அவ்வப்போது சவுதி அரேபியாவை நோக்கி ஹவுத்தி படையினர் ஏவுகணை வீசி தாக்குதல் நடத்தி வருகிறது.

சமீபத்தில் நடந்த தாக்குதலை கூட சவுதி அரேபியா இடைமறித்து அழித்த நிலையில், மீண்டும் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

சவுதியின் தலைநகர் ரியாத்தில் இருக்கும் கிங் காலித் எனும் விமான நிலையத்தை தாக்க அனுப்பப்பட்ட ஏவுகணை வானில் இடைமறித்து அழிக்கப்பட்டது.

இதனால் பெரும் பாதிப்பில் இருந்து சவுதி தப்பியுள்ளது, மேலும் அசம்பாவிதங்கள் ஏதும் ஏற்படவில்லை என்று கூறப்பட்டுள்ளது

1 comment:

  1. அதென்ன சஊதிக்கு மட்டும் ஒறு ஏவுகனை கூட தாக்க மாட்டேங்குது... எல்லாதயும் destroy padraangal. Etho marmam irukku.

    ReplyDelete

Powered by Blogger.